வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக இருக்கவேண்டும்
எல்லோரும் நலமாக இருக்கவேண்டும்
ஏற்கனவே தூக்கம் தொலைந்து போகிறது.
வேறு வேறூ ஊர்களின் நிலவரம்
அலறிக் கொண்டிருக்கும் தொலைக் காட்சிகளின் மத்தியில் நம்ம ஊர்ப் பெயரும் வந்துவிட்டது.
தன் பாட்டுக்கு முதியோர் ஓய்வில்லங்களில் வாழ்க்கையின் கடைசிப்பகுதியை
நிம்மதியாகக் கழிக்க வந்தவர் ஒருவரைத் தாக்கி இருக்கிறது இந்த்
நோய்.
ஒரு திகிலை ஊட்டுவதாக இருந்தாலும்,
சரியான நேரத்தில் அலுவலகங்கள், பள்ளிகள்,கல்லூரிகள், கேளிக்கை இடங்கள் எல்லாம் மூடப்படுகின்றன.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியே சென்று
ஆறடி இடைவெளிவிட்டு, மகளும் தோழிகளும்
வால்மார்ட் சென்று வாங்க் வந்து விடுகிறார்கள்.
கையில் கையுறை அணியாமல் செல்வதில்லை.
அத்தனை பயம் ஏறியிருக்கிறது உள்ளத்தில்.
ஒரு வாரத்துக்கு மேலாகிறது,
இவர்கள் சந்தித்து
எல்லாம் வாட்ஸாப் தான்.
வெளியூரில் வேலை நிமித்தம் சென்றிருக்கும் மகன்,மகள் கவலைதான்.
வேலை முடிந்தால் தான் வரமுடியும்,
அதற்குள்
விமானப் போக்குவரத்து நிறுத்தப் பட்டால் என்ன செய்வது என்ற புதுக்கவலை.
அங்கிருக்கும் உணவு விடுதிகளுக்கு
செல்ல தடை விதிக்கப் பட்டதால், இந்திய உணவுகளை
கட்டிக் கொடுக்கும் பாக்கெட்டுகளை வீட்டுக்கே
வரவழைத்து உண்கிறார்கள்.
சில சமைக்கத்தெரிந்த பசங்களுக்கு இங்கிருந்தும்
பார்சல் போகிறது.
சனிஞாயிறுகளில் தான் அவர்கள் பாடு கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது.
எல்லாம் வீடியோ சாட் தான்.
இந்தக் கஷ்டத்துக்கு அந்தக் குழந்தைகளை
வீட்டுக்குச் சென்று ,அங்கிருந்து வேலை செய்யுங்கள் என்றால் தேவலை.
பார்க்கலாம்.நம்மை நாம் பார்த்துக் கொள்வதோடு மற்றவர்களிடம் இருந்து சற்று விலகியே இருக்க வேண்டும்.
மனம் நிறைய நேர்மறை எண்ணங்களைத் தேக்கி,
நல்ல செய்திகளைப் படித்து,
நல்ல பாடல்களைக் கேட்டு
பயத்தைக் கொடுத்துப்
பயத்தை நீக்கும் ஸ்ரீமன் நாராயணனை எப்போதும் தியானித்து இருக்க வேண்டும்.
நாம் மீண்டு விடுவோம்.
26 comments:
ஆமாம் வல்லிம்மா .நேர்மறை எண்ணங்கள் பரவட்டும் .இங்கும் curfew மாதிரி இருந்தது நேற்று டவுன் சென்டர் ,எல்லாருக்கும் பயம் .ஹான்ட் சானிடைசர் போட்டு கை தோல் என்னாகுமோன்னு தோணுது .நான் ஆப்பிள் cider வினிகரை நீரில் கலந்து அலசறேன் .தேவைப்பட்ட வயதானோருக்கு நாங்கள் உதவ சொல்லியிருக்காங்க.தனக்கு தேவைப்பட்டது போதாமல் அடுத்தவருக்கானதையும் தனக்கே வாங்கி குவிக்கிறாங்க இங்கே அது வேதனையா இருக்கு
பயக்ருத் பயநாசன - சரியான இடத்தில் சொல்லியிருக்கிறீர்கள்.
எனக்கென்னவோ..போகப் போக இன்னும் கெடுபிடிகள் அதிகமாகும் என்று தோன்றுகிறது. 31 வரை எல்லாவற்றிர்க்கும் விடுமுறையாம். ஏற்கனவே மால்கள் மூடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. மக்கள் வெளியில் செல்லவில்லை என்றால், ஆட்டோ, மற்ற கடைநிலைத் தொழிலாளர்கள் பாடு ரொம்ப சங்கடமாகிவிடும். இன்னும் அரிசி, பருப்பு, காய்கறி பிரச்சனை வரவில்லை ஆனால் வரும் போலத் தெரிகிறது.
ஆமாம். எல்லா இடங்களிலும் மு எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப் பட்டிருக்கின்றன. எல்லாருக்கும் பயம் இருக்கிறது. தொண்டை கரகரப்பு வந்தாலே மரண பயம் வருகிறது. சீக்கிரம் இந்நிலை மாறவேண்டும்.
அன்பு ஏஞ்சல், முதியோகளுக்கு உணவு கொண்டு கொடுப்பது இங்கும் வழக்கத்தில்
இருக்கிறது.
எல்லாமே தீர்ந்துவிட்ட நிலையில் ,கடைகள் ரி ஸ்டாக்
செய்து கொண்டிருக்கின்றன.
இரண்டு வாரங்களுக்கு வெளியே போக வேண்டாம், என்ற நிலமையில்
எல்லோரும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கவனம் தேவை. ஆப்பிள் சைடர் வினிகர் நல்ல ஐடியா.
எல்லோரும் மஞ்சள் தண்ணீர் குடிக்கிறோம்.
நான் எனக்கென தனி லிக்விட் சோப் வைத்து சிக்கனமாக
உபயோகப் படுத்துகிறேன்.
விழிப்புணர்வு வந்து எல்லோரும் காக்கப் பட வேண்டும். பத்திரமாக இருங்கள்.
அன்பு முரளிமா, தினசரி செய்தி அதைத்தான்
சொல்கிறது.அதிகரித்து விட்டுத்தான் குறையும்.
இப்பதானே இங்கே டெஸ்ட்ஸ் எல்லாம் வந்திருக்கின்றன.
நமக்கு
அரண் போட்டுக் கொண்டு,
சின்னக் குழந்தைகளுக்குச் சொல்லிக் ஒண்டே இருக்க வேண்டும்.
அங்கு இங்கு எங்கும் என்று வந்து விட்டது,
பயப்படாமல் முன்னேற வேண்டியதுதான். நன்றி மா.
அனைவரும் விழிப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய காலம் மா ...
எல்லாரும் மனபலத்துடன் இருப்போம் ..
இந்நிலை விரைவில் மாறும் என்று நம்புவோம் அம்மா.
இதுவும் கடந்து போகும். நம்பிக்கையோடு இருங்கள்.
அன்பு ஸ்ரீராம், உண்மைதான்.
பயமாகத்தான் இருக்கிறது. இத்தனைக்கும் எல்லா முன் ஏற்பாடுகளோடுதான் இருக்கிறோம்.
சாலையில் கார்கள் போவது வருவது நின்றுவிட்டது.
பத்து நபர்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்கக் மூடாது என்று சொல்லி விட்டார்கள்.
அதையும் மீறி,கடைக்குச் சென்றவர் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்களின் அளவைப் பார்த்து வந்துவிட்டார்,.வெறும் ஸேல் என்றாலே முற்றுகை இடுபவர்கள்
இப்போது கேட்கவே வேண்டாம்.
என்னவோ உலகமே பொருட்கள் இல்லாமல் போய் விடுமோ
என்ற பயம் எல்லாரையும் ஆட்டி வைக்கிறது.
ஜூலை வரை இது நீடிக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.
கடவுள் துணை.
உண்மை அன்பு அனுமா.
எச்சரிக்கை மிகத் தேவை.
கண்டிப்பாக மாறும் மா. அன்பு தேவ கோட்டைஜி.
இவர்கள் எல்லாவற்றுக்கும் பயப் படுபவர்கள்.
நம் நாட்டு மக்களைப் போலத் தெளிவு அவ்வளவாகக் கிடையாது.
அன்பு ஜீவி சார்.
இறைவன் அருளால் அப்படியே நடக்கட்டும்.
உண்மைதான் வல்லிம்மா.. நகைச்சுவையாகப் பேசினாலும், உள்ளுக்குள் பயமாகவே இருக்கிறது.. இனியும் கூடித்தானே குறையப்போகுதாம்.. இப்படியே போனால்ல்.. பட்டினிதான் நாட்டில் வரப்போகுது...
அன்பு அதிரா, பயப்பட வேண்டாம்பபா. பிள்ளைகளைக் கவனமாகக் கைகள் கழுவச் சொன்னால் போதும். சரயாகிடும்பா.
மகன் ஊரிலும் பொருட்கள் கிடைக்கவில்லை.
பால் இல்லை சில கடைகளில்.அத்தியாவசிய பொருட்கள் வர வர காலியாகிறது.
கை கழுவ வேண்டும், கையில் காசு இருப்பவர்கள் வாங்கி குவித்தால் அங்கு இருக்கும் ஏழைகள் நிலை என்னவாகும்?
மனதை வருத்துகிறது.
நிலமை சீர் அடைய் இறைவன் அருள வேண்டும்.
காக்க வேண்டும் கந்த கடவுள்.
எதுவும் கடந்து போகட்டும்...
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதித்து நடக்க வேணும்...
நம்மைக் காத்துக் கொள்வதுடன் பிறர் நலத்தையும் கவனத்தில் கொள்வோம்...
வாழ்க நலம்...
இங்கும் இதே நிலைதான் .சீராகும் என நம்புவோம்.
கடினமான நேரம்....
நலமே விளையட்டும் - நாராயணன் நல்வழி காட்டட்டும்.
அன்பு கோமதி மா, ஆமாம் இங்கே தண்ணீர் இருக்கிறதே !அதற்கே நன்றி சொல்கிறேன். நம் ஊரில் நடமாட்டம் அவ்வளவு இல்லை என்று கேள்விப் பட்டேன்.
அரிசி இதுவரை கிடைத்தது. ஆன்லைன் ஆர்டரில் பேரனுக்கும் அனுப்பினோம். அத்யாவசியப் பொருட்களை.
உங்கள் மகன் இருக்கும் ஊரில் நம் இந்திய டாக்டர் ஒருவர் இந்த வைரஸ் மருத்துவராக இருக்கிறார். அவள் பெற்றோர் பாதுகாப்பை. நினைத்துப் பயப்படுகிறார்கள. எல்லோரையும் சமயபுரத்தம்மன் காக்கட்டும் காப்பாற்றுவாள்.
இதுவும் கடந்து போகும்
நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். அந்த ஊர்க்காரர்கள் சற்று பயந்தவர்கள்தான். எல்லோருக்கும் உள்ளதுதான் நமக்கும். கடவுளை நினைப்போம். நல்லதே நடக்கும். கவலைப்படாதீர்கள்.
அன்பு தனபாலன்,
நலமே விளையும் .கடவுள் துணை.
அன்பு துரை,
காதில் விழும் செய்திகள், அச்சுறுத்தினாலும்
கடவுள் அருளுடன் இந்தக் காலத்தையும் கடப்போம்.
வாழ்க வளமுடன்.
அன்பு மாதேவி,
இறையருள் நம்முடன் இருக்கும் வரை கவலை ஏதும் இல்லை.
கடப்போம்.
அன்பு வெங்கட்,
நல்லதே நடக்கும் . நாம் எச்சரிக்கையுடன் தான் இருக்க வேண்டும்.
பத்ரமாக இருங்கள்.
Post a Comment