Blog Archive

Saturday, March 14, 2020

திருமணமாம் திருமணம்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்




கிரிஷின் வீடு   மரங்கள்  ஊடே   பெரிய அளவில் கட்டப் பட்டிருந்தது .
பல வருடங்களாக   அங்கே இருப்பதின் செழுமை தெரிந்தது.

கிரிஷின் பெற்றோர்கள் வாசலுக்கு வந்து கிருத்திகாவை வரவேற்றார்கள்.
 நாராயண் சந்தன் , ராதிகா சந்தன் இருவருமே 

நல்ல அன்யோன்ய தம்பதிகளின்   அன்பு வெளித்தெரிய 
ஆவலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.
7 மணி அவர்களது இரவு சாப்பாட்டு நேரம்  ஆனதால் 
உள்ளே சாப்பிடும் அறைக்குச் சென்றனர்.

வீட்டோடு இருக்கும் இந்தியப்  பெண்மணி 
சாரதாம்மாவுடன் சேர்ந்து  ராதிகா சாப்பிடுவதற்கு 
உணவுப் பண்டங்களை   எடுத்து வைத்தார்.

மணமுள்ள  பராத்தாக்களும்  விதவிதமான 
காய்கறிக்  கூட்டுக்களும் , சலாட் வகைப் பழங்களும்  மேஜையை அலங்கரித்தன.


சாப்பிடும்போதே கணவன் மனைவி இருவரும் கிருத்திகாவின் குடும்ப நலன் களை  விசாரித்து   மகிழ்ந்தனர்.

உணவு முடியும் வேளையில் இருவருக்கும் மருத்துவ மனையிலிருந்து அழைப்பு வர 

கிருத்திகாவை  அடுத்த நாள்  பார்ப்பதாகச் சொல்லிவிட்டு இருவரும் அகன்றனர்.''Thats their life and they like it.''
என்று சொல்லி அவளை வரவேற்பறைக்கு அழைத்துச் சென்றான்.

அவர்களைத் தொடர்ந்து  வந்த சாரதாம்மா,
கிருத்திகாவை அன்புடன் அனைத்துக் கொண்டார்.
வெகு நாட்களுக்குப் பிறகு  கிஷன்  சந்தோஷமாக இருக்கிறன்.
உனக்குத்தான் நன்றி சொல்லணும்  என்று 

சொல்லி ஐஸ்க்ரீம்   இரண்டு பெரிய கிண்ணங்களில் 
கொடுத்துவிட்டு, இரவு வணக்கம் சொல்லிப் போனார்.

கிஷன்? உன் பெயர்  அதுவா. என்று கிருத்திகா வினவ, அவன் முகம் சிவந்தது.
சாரதாம்மாவுக்கு என் மேல் பிரியம்.
அதனால் அப்படி அழைப்பார் என்றது.
ஓ, நானும் அப்படியே  அழைக்கிறேனே  ...கிஷன் !
இனிமையாக இருக்கிறது. என்றவளைப்  பார்த்து 

அப்போ நான் உனக்குப் பிரியமானவனா?
என்றான்.

அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்கள்.
என்னையும் பாட்டிம்மா   ரித்து என்றுதான் அழைப்பார்.
இல்லையே அன்று உன்னை ''குடியா ''  என்று அழைத்தார் 
என்று சிரித்தான்.

உங்களுக்கு நான் ''குடியா ''ஆகமுடியாது என்று பொய்க் கோபத்துடன் 
அவனைப் பார்த்தாள்  அவள்.
ஒரு நிமிடம் இரு, என்று விரைந்து மாடிக்குச் சென்றவன் 
என்னுடைய பல நாள்  காதலி இதோ,
என்று , ஒரு பாரம்பரிய உடை அணிந்த அழகான 

பொம்மையை அவளிடம் கொடுத்தான்.
அந்தப் பொம்மையின்  அழகைப் பார்த்து அந்த உடைகளின் பட்டு உடையைக் கண்டு மயங்கியே 
போனாள்  கிருத்திகா.

நீங்கள் எப்படி  இந்த அழகியின் வலையில் சிக்கினீர்கள்.

என்று சிரித்தாள். சின்ன வயதில் அக்காவுக்குப் போட்டியாக அம்மாவிடம் 
கேட்டு வாங்கினேன். 

prodcut-image
இனி  இது என் ரித்து  என்று  புன்னகைத்தான்.

ஊரில் இருக்கும் கிருஷ்ண பொம்மையை நினைத்துக் கொண்டாள் 
ரித்து ஆகிய கிருத்திகா.

அப்புறம் நடந்தேறிய  நல்ல பொழுதுகள்.,
கிரிஷின் பெற்றோர், இந்தியாவுக்கு  ஸ்கைப்பில் 
பேசியதுதான்.
உணர்ச்சி மிகுதியில்  பாட்டிம்மா அழுது விட்டார்.

பெரியவர்கள் பேசிக்கொண்டிருக்க, 
ரித்துவின் கரங்களை பற்றியபடியே உட்கார்ந்திருந்தான் கிஷன்.

இருவர் மனங்களுக்கும்  தங்கள் தங்கள் வாழ்வு நிறைவாக ஆரம்பிப்பதைப் 
புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லோருக்கும் பொருந்தி வந்த  நல்ல நாளில் சண்டிகரில் 
ஆடம்பரம் இல்லாத நாள் திருமணம் நிறைவேறியது.

பாட்டிம்மா மன  பாரம் நீங்கியது.
 ஒரு மாதம் இந்தியாவில் தங்கி இருந்துவிட்டு இருவரும் கனடா வந்தனர்.

கிரிஷ் வேலை பார்க்கும் ROCHE  அலுவலகத்திலியே 
கிருத்திகாவுக்கும்    வேலை கிடைத்தது.

கம்பெனி  கொடுக்கும் வீட்டில் இருவரும் குடி புகுந்தனர்.

வாழ்க சுப நலம். வாழ்க அன்பர் உள்ளம்.












19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...

வெங்கட் நாகராஜ் said...

இனிய நிகழ்வுகள்.

தம்பதியர் நலமுடன் வாழட்டும்.

தொடர் நன்றாக இருந்தது மா...

பதிவிற்காக இணைத்த பாடல் நன்று.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் தனபாலன். ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டுவிட்டால் எல்லாம்
நன்மைதான் நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
நன்றாகவே இருக்கிறார்கள். இதே காதலுடன்
இருவரும் மணவாழ்க்கையில் இருக்க வேண்டும். இருப்பார்கள்.
தொடர்ந்து படித்ததற்கு மிக நன்றி மா.

ஸ்ரீராம். said...

மாது மட்டுமா மயங்கினார்?  மன்னனும் மயங்கினார்.  இணைந்த வாழ்க்கை இன்பமாகட்டும்.  சுபமாகட்டும்.

நெல்லைத்தமிழன் said...

ஒவ்வொருவருக்கும் எப்படியெல்லாம் தொடர்பு ஏற்பட்டு வாழ்க்கை ஆரம்பிக்கிறது.... ஆச்சர்யம்தான்

Geetha Sambasivam said...

இனிமையான திருமண வாழ்க்கைக்கு வாழ்த்துகள் இருவருக்கும். இருமனமும் ஒன்றாய்க் கலந்து ஆனந்தமாக இருக்கட்டும்.

KILLERGEE Devakottai said...

வாழ்க வளமுடன்... நலமே விளையட்டும்

கரந்தை ஜெயக்குமார் said...

தம்பதியினருக்கு வாழ்த்துகள்

கோமதி அரசு said...

நிறைவாக இருந்தது கதை முடிவு.
மண்மக்கள் மகிழ்ச்சியுடன் மனஒற்றுமையுடன் பல்லாண்டு வாழ்க.
ரித்து பொம்மை மிக அழகு.
பாடல் அருமை.

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் இருவருக்கும்.
அருமை... இனிமை...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.., இருவரும் மயங்கினால் தான் வாழ்வு முன்னேறும்.:). அழகாகச் சொன்னீர்கள். மிகப் பிடித்த பாடல் இது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
எனக்கு. இது போல நிகழ்வுகளைக் கேட்கப் பிடிக்கும் இங்கிருக்கும் குழந்தைகளும் களங்கம் இல்லாமல் பழகுவாரகள்.
நமக்கும் எழுத ஒரு கரு கிடைக்கும்.

அப்படியே கொஞ்சம் சம்பவங்களுக்கு கோர்த்தால் தொடர் கிடைக்கிறது. நன்றி ம.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, பார்ப்பதற்கும் ரம்யமான. தம்பதிகள். எப்பொழுதும் நலமாக இருக்க வேண்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி, உங்கள் ஆசிகளுடன் அவர்கள் நன்றாகவே இருப்பார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார் மிகமிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,, அந்த ரித்து பொம்மை அவர்கள் நயாகரா சென்ற போது வாங்கியது. இந்த நீர்வீழ்சசி தான் இவர்களை இணைத்ததோ என்று நினைக்கிறேன்.
அன்புடன் விடாமல் படித்து. வந்ததற்கு நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார் , வெகு நாட்களுக்குப் பின் பார்ககிறேன் உங்களை.
உங்கள் வார்ததைகள் மிக மதிப்புள்ளவை. மிகநன்றிமா.

மாதேவி said...

இனிய வாழ்வு. நிறைவான மகிழ்ச்சி.