வல்லிசிம்ஹன்;
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
|
இந்தக் கதை இங்கே நிற்கவில்லை.
ஊர் மாறி, திண்டுக்கல், மதுரை சேர்ந்து திருமணம் ஆகி 20 வருடங்கள் கழித்து ஒரு ஜோதிடரைச் சந்தித்தேன். அவர் என் நாத்தனாரின் குடும்ப நண்பர். அவர் முகம் பார்த்தே ஆருடம் சொல்வாராம். எல்லோரும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கையில் என்னிடம் அருகில் வந்து பேச ஆரம்பித்தார்.
எத்தனை குழந்தைகள் மா உங்களுக்கு என்று கேட்க நானும் சொன்னேன். நாலு குழந்தைகள் இருக்க வேண்டுமே என்கிறாரே பார்க்கணும்.!!! இல்லையே எனக்குத் தெரிந்து மூன்று குழந்தைகள் தான் என்றேன் .
ம்ம் என்று யோசித்தவரைப் பார்த்தால் எனக்கு கொஞ்சம் பயம் தோன்றியது, சிங்கத்துக்கு இதில் எல்லாம் ஈடுபாடு கிடையாது. அவர் தள்ளி உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்,
என் நாத்தனார் எங்கள் அருகில் வந்து சிம்மு பிசினஸ் பற்றி விசாரித்துக் கொள் . என்ன வேண்டுமானால் கேளு. நல்லதாகச் சொல்வார் என்று விட்டுப் போனார்.
அதெல்லாம் இருக்கட்டும் உங்கள் வீட்டில் யாராவது பாம்பை அடித்துக் கொன்றிருக்கிறீர்களா என்றார். சில்லென்று பயம் வந்தது. சின்ன வயதில் பார்த்தத்தைத் தவிர எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்றேன். இல்லம்மா உன் பிறந்த வீட்டில் யாரோ இது போல செய்திருக்கிறார்கள். அதுதான் உங்கள் சங்கடங்களுக்கெல்லாம் காரணம். என்கிறார். நானும் யோசித்தேன். தாத்தா, கிராமத்தில் விவசாயம் பார்த்தவர்தான் அப்போது ஏதாவது நடந்திருக்குமோ. அது என் என்னை வந்து சேரணும் . பாட்டியின் சொத்து ஏதாவது உனக்கு கிடைத்திருக்கிறதா.
ஆமாம். தங்கமாக அம்மா வழி சொத்து என்றேன். அதுதான் காரணம் என்கிறார். அதற் குப் பிறகு அவர் கேட்டதுதான் . உன் சொப்பனத்தில் வந்தது அந்த ஐந்துதான் என்கிறார். ஒரு பூஜை செய்து , வெள்ளி நாகம் ஒன்றைக் கடலில் போட்டுத் திரும்பிப் பார்க்காமல் வந்து விடு என்றார். நானும் சிங்கமும் போய் செய்துவிட்டு வந்தோம்.
அதற்குப் பிறகு நான் பார்க்கவில்லை. அவர் பணம் ஏதும் வாங்கி கொள்ளவில்லை.
பிறகு மிருகக் காட்சி சாலையில் கூடப் பார்க்காமல் தாண்டிவிடுவேன்.
எல்லோரும் நலமாக இருக்க என் பிரார்த்தனைகள்.
|
19 comments:
"வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடா... பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் செருமடா... சேர்த்து வைத்த புண்ணியம்தான் சந்ததியைக் காக்குமடா..."
உங்கள் அனுபவத்தைப் படிக்கும்போது இந்தப் பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
அன்றைய ஜோதிடர்கள் உண்மையாக கணித்தார்கள்.
ஆகா
வீட்டில் வரைபடம் யார் செய்தார்கள் அம்மா...
அனுபவம் ரசனை....
நேற்று நடிகர் ராஜேஷின் சமீப பேட்டியைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் ஜோசியத்தைப் பற்றி ரொம்பவும் இண்டெரெஸ்டிங் ஆகப் பேசுகிறார். அவரையே இரண்டாவது குழந்தை என்று ஒரு ஜோசியர் சொன்னாராம். இல்லையே நான் மூத்தவனே என்று யோசித்து தன் பெற்றோரிடம் கேட்டபோது, முதல் கரு தங்கவில்லை என்று சொன்னார்களாம்.
அன்பு ஸ்ரீராம். உண்மையான வார்த்தைகள்.
அந்தக் கொள்ளுத்தாத்தா கூட, அவர் அடிக்கவில்லையாம். வயலில் வேலை செய்பவரை அடிக்கச் சொன்னாராம்.
நான் அந்தத் தாத்தாவைப் பார்த்திருக்கிறேன். 80 வயது வரை இருந்தார்.
பிரபந்தம் சொல்லிக் கொண்டே இருப்பார்.
வலிய வந்து அவர் சொன்னதும், இல்லாத நாலாவது குழந்தையைத் தேடியதும் தான்
அதிசயம்.அந்தக் குழந்தையும் இருந்திருந்தால்
இன்னும் ஆனந்தம்.
அன்பு தேவகோட்டைஜி,
உண்மையே. அதுவும் நான் சொன்னவர்,நல்ல வசதியானவர்.
மனதில் தோன்றியதை வலுவாகச் சொல்லி விடுவார்.
அன்பு ஜெயக்குமார் வாழ்க வளமுடன். நன்றி.
வீட்டின் வரைபடம் நன்று.
அனுபவங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாடம் தான் மா...
அன்பு தனபாலன், நான் தான் வரைந்தேன் மா.
பெயிண்ட் தளத்தைப் பயன்படுத்தி
முடிந்த அளவுக்கு அந்த வீட்டைப் பதிந்தேன்.
இதெல்லாம் பத்து வருடங்களுக்கு முன் செய்த
வேலை.இன்னும் அழகாகச் செய்திருக்கலாம்.
விசாரித்ததற்கு மிக நன்றி மா.
நல்ல பாந்தமான வீடு.
அன்பு முரளிமா. உண்மைதான்.
அந்தக் குடும்பத்தில் உருவான உயிரும் கணக்கில்
கொள்ள வேண்டியதுதானே.
எங்களுக்கும் மகள் பிறந்த கையோடு
உருவான கருவை 40 நாட்களிலியெ
மகப் பேறு மருத்துவர் வேண்டாம் என்று
கலைத்துவிட்டார்,
அந்தப் பாவம் வேறு சேர்ந்து கொண்டது.
ராஜேஷ் காணொளி பார்க்க வேண்டும்.
நன்றி மா.
அன்பு வெங்கட்,
மிக நன்றி மா. இப்பொழுதும் வரைந்து பார்க்கப் போகிறேன்.
எப்படி வருகிறது என்று கணிக்கலாம்.
ஆகக் கூடி எல்லார் வாழ்க்கையிலும் அரவம் புகுந்து மறந்திருக்கிறது:)
பரிகாரம் செய்து விட்டீர்கள் அதனால் எல்லாம் நலமே!
வீட்டின் வரைபடம் நன்றாக வரைந்து இருக்கிறீர்கள்.
வீட்டின் படம் அழகாக வந்திருக்கிறது.
இனிய காலை வணக்கம் கோமதி.
உண்மைதான். இது எதேச்சையாக நடந்ததா.
இல்லை பகவத் சங்கல்பமா தெரியவில்லை.
ஆனால் பலவித சம்பவங்கள்
நடந்த போது எனக்கு வருத்தமாகத் தான்
இருந்தது.
அன்பு மாதேவி மிக நன்றி மா.
அம்மா நீங்க எழுதின தொடர்கதை கிஷன் கிருத்திகா வாசித்துவிட்டேன் சுபம்!! மற்றவையும் அப்பப்ப வாசித்தேன்..அம்மா
அப்பாவைப் பற்றி சொல்லியதும் மிக மிக ரசித்தேன்..
கீதா
அரவம் பற்றி எங்கள் வீட்டிலும் சில நம்பிக்கைகள் உண்டு. தோஷம் என்றெல்லாம்.
கீதா
அன்பு கீதா,
எனக்கு இதன் மேல் இருக்கும் பயம் போகவில்லை.
அந்தக் கண்களின் சினம் இன்னும் உறுத்துகிறது.
நன்றி கண்ணா.
Post a Comment