Blog Archive

Friday, February 14, 2020

௧ொள்ளுப் பருப்பு சாம்பார் | Village food Paruppu Sambar | Village cookin...

வல்லிசிம்ஹன்

எங்க ராணியைப் பற்றி எழுதின முகூர்த்தம்
 தோழி ஒருவர் இந்த லிங்க் அனுப்பி இருந்தார். ராணி சொன்னது கண்முன்னால் நடப்பது
போலிருக்கிறது.
இந்த அம்மாவின் வெள்ளைப்பற்களும், அவர் சிரிக்கும் அழகும் என்ன்வென்று சொல்வது.
அமிர்தம். கொள்ளுக் குழம்பாம்.

14 comments:

ஸ்ரீராம். said...

என்ன ஒரு அருமையான இயற்கைக் சமையல்...    விறகு அடுப்பை அருமையாய் பற்றவைத்து, அங்கிருந்தே காய் பறித்து...    சூப்பர்.   ஆனால் அவர் சமைத்ததை அவர் மட்டுமே சாப்பிடுகிறார். அதுவும் சரியாய்ப் பிசையாமலேயே சாப்பிடுகிறார்! படம் பிடித்தவரோ, கூட நின்றவரோ டேஸ்ட் பார்க்கவே இல்லையே... 

சிகரம் பாரதி said...

ஆரோக்கியமான உணவுகளையெல்லாம் விட்டுவிட்டு நாம் பாஸ்ட்டு புட்டு அல்லவா சாப்பிடுகிறோம்? நல்ல பகிர்வு. தொடருங்கள், தொடர்வோம்...

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

https://newsigaram.blogspot.com/

Geetha Sambasivam said...

அட? முகப்புப் படத்தை இப்போத் தான் கவனிக்கிறேன். நல்லா இருக்கு. உங்களுக்கு அதைப் பார்க்கையில் கொஞ்சம் ஆறுதலாக இருந்தாலும் வீட்டை விட்டு வந்தது வருத்தமாயும் இருக்கும். :(

கொள்ளுப்பருப்பு சாம்பார் முன்னெல்லாம் நானும் பண்ணிட்டு இருந்தேன். இப்போத் திடீர்னு ஒத்துக்காமல் போய்விட்டது. முளைக்கட்டினால் நன்றாக முளை வரும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம் அனுப்பின தோழிக்கும் தெரியவில்லை. தென்காசி பக்கம் ஏதோ கிராம்மாம் இந்த மாதிரி சமையலும் பார்த்ததில்லை.
அமைப்பாக செயல் படவில்லை.நீ சமைத்து அவை .நான் படம் எடுக்கிறேன் என்பது போல இருக்கு. . யூ டியூபில் தேட என்ன
தலைப்பு என்று பார்கக வேண்டும். அச்சு அசல் கிராமத்து சமையல் .நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, கொள்ளு இத்தனை அளவு சாப்பிட முடியுமா ,ஜீரணம் ஆகுமா என்றெல்லாம் சந்தேகம் தான்.. புதிதாக. இருந்ததால் பதிவிட்டேன்.
வீட்டின் பழைய தோற்றம். பார்த்திக் கொண்டே. இருந்தால் அங்கே போய்விடுவேன் என்று நினக்கிறேன்:)

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா... பெரியம்மா சமைப்பதைப் பார்க்கும் போதே சாப்பிட ஆசை வருகிறது. அதுவும் அம்மிக் கல்லில் அரைத்து காணச் சாம்பார் அதாவது கொள்ளு சாம்பார்! ரொம்பவே சுவையாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

நெய்வேலியில் இருந்த போது இப்படி விறகு அடுப்பில் அம்மா சமைத்ததுண்டு! அதன் சுவை தனி தான்.

ஜீவி said...

ஆஹா.. அந்த முகப்பு வீடு தான் பூச்செடிகள் பூத்து குலுங்க என்ன அழகாக இருக்கிறது!..

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் இனிய மதிய வணக்கம்.
அந்த மாதிரி சூழலுக்கு ஏற்ற அன்பு அம்மாவாக அவரைப் பார்க்கிறேன். இன்னும் சிலரைப் பேசச்சொல்லி வீடியோ எடுத்திருக்கலாம். தேடிப் பார்க்கிறேன்.
பலர் உதவி இல்லாமல் இதை எடுக்க முடியாது.
ஆமாம் அடுப்பில் ,கரி,விறகு இரண்டுமே மணம் கொடுக்கும்.
நன்றி ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார், நன்றி.
சிங்கத்தின் உழைப்பு இந்தத் தோட்டம்.
15 வருடங்கள் வேலைக்கும் போய்விட்டு
மிச்ச நேரங்களில் கவனம் வீட்டுக்கு வெளியே தான்.
பசுமை நாட்கள் என்று சொல்லலாம்.
2000 ஆவது ஆண்டு என்று நினைக்கிறேன்.

priyasaki said...

இந்த மாதிரி உணவு சமைத்து சாப்பிடனும் போல தோனுது வல்லிம்மா. அம்மியில் அம்மாவுக்கு துவையல் செய்தது ஞாபகம் வருது. உங்க வீடு பசும்சோலையா ரெம்ப அழகா இருக்கு. நானும் இப்படிதான் போனில் முகப்பு படமா போட்டிருக்கேன்.
கொள்ளு சூப் இங்கு பிரபலம். நான் அடிக்கடி சாப்பிடுவேன். சாம்பார் வைத்து பார்க்கனும்.

கோமதி அரசு said...

பசுமையான சோலை போல உங்கள் வீடு அழகு.
ராணி அவர்கள் இயறகையாக மரநிழலில் சமையல் செய்வது அழகு.
கொள்ளு சாம்பார் செய்ய வேண்டும் பார்த்து ஆசை வந்து விட்டது.
முன்பு செய்து இருக்கிறேன்.
முன்பெல்லாம் கொள்ளுபொடி, கொள்ளுத்துவையல் எல்லாம் அடிக்கடி செய்வேன். மீண்டும் செய்ய ஆசை வந்து விட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு,
நன்றி கண்ணா.

மருமகள் கொள்ளு சுண்டல் செய்வார். இந்த அம்மா. செய்வது புதுமையாக இருக்கிறது.
நான் இது அவரை செய்ததில்லை. ஆமாம் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று நினைத்த நேரத்தை எண்ணுகிறேன்.!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதிமா, இனிய காலை வணக்கம்.. வீட்டுத் தோட்டம் முழுமை அடைந்த போது எடுத்த படம். பிறை பல மாற்றங்கள் வந்தது.
ஆமாம் கொள்ளு சாம்பார் பதிதாக இருக்கிறது. தென்காசிப் பக்கம் ஏதோ கிராமமாம்.
செய்து பார்தது சொல்லுங்கள.

மாதேவி said...

அழகிய தோட்டம்.