Blog Archive

Sunday, February 16, 2020

Breadப்ரெட் பணியாரம் ,.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

  இன்றைய காலை உணவாக ப்ரெட் பணியாரம் ,.
என் மாமியார் சொல்லிக் கொடுத்ததைச்
செய்தேன்.
மாடர்ன் ப்ரெட் வந்த புதில் , ஒரு பாக்கெட் ஒரு ரூபாய்க்கு வாங்கிய நினைவு இருக்கிறது. பிறகு நீல்கிரியில் (ஸ்டொர்ஸ்).2 ரூபாய்க்கு பெரிய அளவில்
கிடைத்தது.
வாங்கின அன்றே தீர்ந்து விடும்.சிலசமயம் ,கணவரும் 
வாங்கி வந்து நானும் வாங்கி
இருந்தால் உடனே  அதை உபயோகிக்க
 வேண்டிய அவசியம் நேரும்.
இல்லாவிட்டால், ஒரு மாதிரி மஞ்சள், பச்சை நிறம் எல்லாம் வந்துவிடும்.
இந்த ஊரில் ஷெல்ஃப் லைஃப் இரண்டு வாரமாவது
இருக்கிறது. குளிர்ச்சியின் காரணமாக இருக்கலாம்.

இப்போது பணியாரத்துக்கு வரலாம்.
மீதி இருக்கும் ரொட்டித் துண்டுகளை மிக்ஸியில்
இட்டு பொடி செய்து கொண்டு, அத்துடன்,
(கண்ணளவுக்கு) சமமான கோதுமை மாவும், அரிசிமாவும்,
தயிரும் சேர்த்து மாவாக்கி அரைமணி நேரம் வைக்க வேண்டும்.

இந்தக் கலவையில் வழக்கம் போல் 
ப.மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி,
உப்பு கலந்து கொண்டு,
பணியாரக் குழிகளில் போட்டு எடுக்க வேண்டும்.
எளிமையான, மொறு மொறு பணியாரம் தயார்.

18 comments:

priyasaki said...

நீங்க நல்ல சுலபமான, சுவையான குறிப்பு சொல்லியிருக்கிறீங்க. மீந்துபோன ரொட்டியை வீணாக்காமல் இப்படி செய்து கொடுத்தால் சாப்பிடுவார்கள். நல்லதொரு குறிப்பு. தாங்க்ஸ் வல்லிம்மா.

கோமதி அரசு said...

பனியாரம் மிக அருமையாக இருக்கிறது.மிகவும் எளிதாக செய்து விடலாம் இல்லையா?

ஜீவி said...

பணியாரம் -- ஆரம்ன்னா மாலை என்று மட்டும் தெரிகிறது.

பணியாரம் -- இந்த சொல் எப்படி உருவானது?

KILLERGEE Devakottai said...

மகளிடம் செய்யச் சொல்லணும் அம்மா.

சிகரம் பாரதி said...

பிரெட்லயே பணியாரமா? பலே... பலே....

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக ஐந்து வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் இன்று (16) ஐந்து வலைத்தளங்களில் வெளியான பதிவுகள் 16.02.2020 எனும் தலைப்பில் பரீட்சார்த்தமாக வெளியிடப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

Geetha Sambasivam said...

நான் ப்ரெட் மிஞ்சினால் பஜ்ஜி அல்லது கட்லெட்டாகச் செய்துடுவேன். இப்படியும் ஒரு முறை செய்து பார்க்கணும்.. வெள்ளையப்பம் மாதிரி இருக்குமோனு நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

ப்ரெட் ப்ரெட் (!) பணியாரம் சூப்பர்.  மிகவும் எளிமையாகவுமிருக்கிறது.

ஸ்ரீராம். said...

ப்ரெட் டோஸ்ட், சாண்டவிச், உப்புமா, ஸ்வீட் செய்திருக்கிறோம்.   இது புதுசு!

வல்லிசிம்ஹன் said...

அன்பு அம்மு, மாமியாருக்கு பிரெட் மிகவும் பிடிக்கும். அதனால் வித விதமாகச் செய்வார்.
நன்றாக பொரிந்தது. நீங்களும் செய்து பாருங்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மிக மிக சுலபம். நம் குழிப் பணியாரம் போல வரும்.
செய்து பாருங்கள்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார்.,
எங்க வீட்டில் பணியாரம் என்று மனோகரத்தை சொல்வார்கள்.
க்ராண்ட் ஸ்நாக்சில் அப்போதெல்லாம் வித விதமாகக் குழிப் பணியாரம் என்று
செய்துவிற்பார்கள். மற்றபடி. விவரம் தெரியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.. கட்டாயம் சொல்லுங்கள் சூடாகச் சாப்பிட வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

ஆஹா புதியதாக இருக்கிறதே...

ஆதியிடம் சொல்கிறேன் - செய்து பார்க்கச் சொல்லி! இங்கே பணியாரக் கல் இல்லை!

தொடரட்டும் சுவையான பதிவுகள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் அன்பு கீதாமா. அப்படித்தான் வந்தது.
தயிர் சேர்த்ததால். கொஞ்சம் ஊத்தப்பம் மாதிரி கூட இருந்ததுமா.

வல்லிசிம்ஹன் said...

உத்சாகமாகச் சாப்பிட ஆள் இருந்தால்
சமையல் செய்யவும் ஆவல் வருகிறது.
நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
கட்டாயம் சொல்லுங்கள். ரோஷ்ணிக்குப் புதிதாகச் செய்யச் சொல்லலாம். மிருதுவாக நன்றாக இருந்தது.

Anuprem said...

ப்ரெட் பணியாரம்.....

சூப்பரா இருக்கு மா....அந்த கடைசி 4 bread க்கு easy யா வாழ்வு கொடுக்கலாம்...😊😊

மாதேவி said...

நன்றாக இருக்கிறது.