Blog Archive

Sunday, February 02, 2020

வம்பு பேசுவது தீய பழக்கம் என்பதே உலக நீதி.

வல்லிசிம்ஹன்

தொடர்ச்சி  முந்தைய பதிவு  பப்லிஷ் ஆக மறுத்தது .
இதோ இன்னொரு  எழுத்து.

 இந்தப் பாடலைப் படித்துக் காண்பிக்கவும் சரியான நேரம் 
வந்தது.
 பேரனுக்கு அவன் தோழன் யாரையோ பற்றி இவனிடம் சொன்னது 
பாத்தித்து விட்டது.
Is it true Paatti? என்று கேட்டுக் கொண்டே இருந்தான்.
சொன்னவன் இந்த ஊர்க்காரன். 
சொல்லப்பட்டவனும் இந்த ஊர்க்காரர்கள்.
அவர்களது பெற்றோர் பிரிந்து விட்டதாக சேதி.

இவனைப் பாதித்தது.
குழந்தை வயதிலேயே இந்த வம்புகள் வேண்டாமே
என்று தோன்றியது.
அப்படி ஏதாவது கேட்டால், உனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை 
அப்பா.
அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள்.
நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லிவைத்தேன்.

இன்னோரு தடவை இது போல் பேச்சு வந்தால் 
பாஸ்கெட் பால், ஃபுட்பால் என்று பேச்சை மாற்றிவிடுடா
பையா. வம்பு பேசுவது மிகத் தவறு.
நமக்கு அது நஷ்டமே தவிர லாபம் ஒன்றில்லை
என்று சொல்லிவைத்தேன்.
மகன் வந்ததும் மருமகள்,பேத்தி எல்லோருமாக உட்கார்ந்து,
பழைய கால விளையாட்டான ,வாக்கியம் கடத்துதலை விளையாட
ஆரம்பித்தோம்.
The cow jumped over the moon like a fork and spoon''
என்கிற நீண்ட வாக்கியம் ஐந்து காதுகளில் 
புறப்பட்டு வந்த போது cow and moon ate with fork and spoon
என்று விஸ்வரூபம் எடுத்தது.
சின்னவனே சிரித்து விட்டான்.
சிறிது நேரத்தில் கொஞ்சம் தெளிவு வந்தது.
வம்பு பேசுகிறவரிடம் நட்பு வேண்டாம் என்று அவனுக்குப் புரிந்ததா

என்று இனிதான் தெரியும்.    வம்பு பேசுவது தீய பழக்கம் என்பதே உலக நீதி.

15 comments:

ஸ்ரீராம். said...

கலாச்சார அதிர்ச்சி!  இதெல்லாம் சமாளித்து பழகி, மீண்டு வர இன்னும் வயது போகவேண்டும் இல்லையா?

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம் . இங்கே. இது சாதாரணமாக நடக்கிறது. இன்னும் நிறைய என் காதிலேயே விழுகிறது..குழந்தையும் பழகப் பழகப் புரிந்து கொள்வான்.
இந்த ஊர் வாசம் என்பது முடிவான ஒன்று. இதுவும் பழக்கம். பெற்றோரின் வலுவான ஆதாரம் இருந்து விட்டால் போதும்.நன்றி ஶ்ரீராம்.

கோமதி அரசு said...

குழந்தைகளுக்கு நல்ல நீதி போதனை கதை.வம்பு பேசுவது என்று தெரியாமல் பேசுவார்கள். அதையும் பேச கூடாது என்று சொன்னது நல்லது.

பழைய விளையாட்டை குழந்தைகள், மருமகளுடன் விளையாடியது மிகவும் மகிழ்ச்சி.

Geetha Sambasivam said...

நமக்கே இன்னமும் இத்தகைய செய்திகளைக் கேட்கையில் மனமும் உடலும் பதறுகிறது. அப்படி இருக்கையில் குழந்தை அவன்! இன்னும் கொஞ்ச நாட்கள் போனால் புரிந்து கொள்வான், இதுவும் வாழ்க்கையில் ஓர் அங்கம் என்பதை!

ஜீவி said...

//அவரவர் வாழ்க்கையை அவரவர் பார்த்துக் கொள்வார்கள். நாளடைவில் சரியாகிவிடும் என்று சொல்லிவைத்தேன்.//

ம்?.. என்ன புரியும், குழந்தை மனசுக்கு?..

இதே போலவான அனுபவம் எனக்கும் உண்டு.

'பிள்ளையாய் இருந்து விட்டால் இல்லை ஒரு தொல்லையடா..' என்ற கண்ணதாசனின் நினைவு தான் வருகிறது..

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கோமதி மா.
இதை ஒரு செய்தியாக இன்னோரு பையன் சொல்வதைக் கேட்ட பேரன்
வெகுவாகப் பயந்துவிட்டான்.
அதற்குத்தான்,,, இந்த ஊரில சகஜம் என்றாலும்
நாமெல்லாம் அது போல இல்லை. என்று சொன்ன பிறகே
இப்போது சாதாரணமாகிவிட்டான்.
இது நடந்து ஒரு மாதம் இருக்கும்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதாமா. தன் நண்பன் சந்தோஷமாக இருப்பதைப் பார்த்து இவனும் சமாதானமாகிவிட்டான்.
நமக்குத்தான் ஆற மாட்டேன் என்கிறது.
நம் வழி வேறு. அவர்கள் வழி வேறு.

வல்லிசிம்ஹன் said...

வரணும் ஜீவி சார்.
அவன் புரிந்து கொள்வதை விட அவன் அதிர்ச்சி அடையக் கூடாது என்பதே என் கவலை. அந்தப் பையனின் அம்மாவும் கலகலப்பான மனுஷி. அந்தப் பையனும்
சந்தோஷமாகத் தான் இருக்கிறான்.
இவனும் அவர்களைப்
பார்த்து Oh! It is fine with my friend/ என்று சமாதானப் படுத்திக் கொண்டான்.
இந்த வயதில் இவ்வளவு புரிந்தால் போதும் வீண் பயம் கூடாது என்று எனக்குத் தோன்றியது மா.

Thenammai Lakshmanan said...

சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் அம்மா. :)

சிகரம் பாரதி said...

எதற்காகப் புறம் பேச வேண்டும்? நாம் உண்டு நம் வேலை உண்டு என்று இருந்தாலே உலகம் அமைதியாக இருக்கும்.

Please visit: https://sigaramclick.blogspot.com/

நெல்லைத்தமிழன் said...

ஆமாம் வல்லிம்மா. டைம் பாஸ் என்ற சாக்கில் அடுத்தவர்களைப் பற்றி அசைபோட ஆரம்பித்துவிடுகிறோம். இது நல்ல பழக்கம் அல்லதான்.

அந்த ஊரில் இதெல்லாம் சகஜம் என்று சின்னவங்களுக்கு புரிந்துவிடாதா?

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேனம்மா,வரணும் வரணும்.
இரண்டு நாட்களாக இந்தக் கதையைக் ஊட சொல்ல முடியவில்லை. இனிதான் பார்க்க வேண்டும்.
வீட்டில் அனைவரும் நலம் என்று நம்புகிறேன். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா. புது வீடு புகுதல் சிரமம் இன்றி நிறைவேறியது என்று நம்புகிறேன்.
இணையம் வந்துவிட்டது பற்றி மகிழ்ச்சி.

ஆமாம் இப்போதே பழகி விடுவார்கள்.
ஒற்றுமையாக
4 பெண்களைப் பெற்றுக் கொண்டு குடும்பம் நடத்துபவர்களும் பக்கத்து வீட்டில் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம். சிகரம் பாரதி.
குழந்தைகளுக்கு இந்தக் கதைகளைச் சொல்வதில் எனக்கு மகிழ்ச்சி.
அவர்களுக்கும்
சிறிதாவது போய்ச் சேரும் என்று நம்புகிறேன். மிக மிக நன்றி மா.
தங்கள் இணைய தளம் வளர வாழ்த்துகள்.

மாதேவி said...

நல்ல அறிவுரை.