Blog Archive

Thursday, February 20, 2020

80 ஆம் பிறந்த நாள் (சிங்கம்)

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 
80 ஆம் பிறந்த நாள்  (சிங்கம்)

2010 இல்   மயிலையில்  தோழர்கள் தோழிகள், உறவினர்கள் மத்தியில் 
உணவு உண்டு மகிழ்ந்த பொது எடுத்த படம்.

என்றும் நினைவில் தாங்கும் சிங்கம்.
என் வாழ்வின் ஆதாரம்.
எனைப்புரிந்து கொண்டவர் அவரைத் தவிர யாரும் இல்லை.
அவரை உணர்ந்தவள் என்னைத் தவிர  யாரும் யில்லை'
Image result for flower garlands

தனக்கு நோய் வந்தால் நான் வருந்துவேன் என்றே அவர் 
சொல்லாமல் சட்டென்று இறைவனை அடைந்தார்.

பரம தயாளு என்று இறைவனைச் சொல்வோம்.
என்னை ப்  பொறுத்தவரை என் சிங்கம் தான் 
எனக்கு இறைவன். இன்றும் என்னைக் காப்பவர்.

இனிய இன்பம்  நிறை எண்பதாம் பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் 
பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.

26 comments:

துரை செல்வராஜூ said...

நெஞ்சமெலாம் நீயே..
நினைவுகளும் நீயே..
கண்மணியில் நீயே..
காக்கும் ஒளி நீயே...

( மனம் கனக்கின்றதம்மா..)

priyasaki said...

அவர் பாதங்களை நான் வணங்கிறேன் வல்லிம்மா. அவர் என்றும் உங்களுடனேயே இருப்பார்.

KILLERGEE Devakottai said...

வணங்குகிறேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,
ஆம். கனக்கிறது அப்பா.
ஆனால் இவ்வளவு பெருந்தன்மையான மனிதரை
எனக்கு 47 வருடங்கள் உரிமையாகக் கொண்டாடும் பாக்கியம்
தந்த இறைவன் மகத்தானவன்.
வேறெங்கும் சொல்ல முடியாததால் என் பதிவில் அவரை இருத்த முனைகிறேன். நன்றி மா.என்றும் நலமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ப்ரியசகி,
என்றும் வளமுடன் இருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

மனம் நிறை ஆசிகள் அன்பு தேவகோட்டைஜி.

கோமதி அரசு said...

சாருக்கு வணக்கங்கள்.
உங்களையும் வணங்குகிறேன் அக்கா.
என்றும் உங்களுடன் இருப்பார். குடும்பத்தை காப்பார்.

Angel said...

நானும் வணங்குகிறேன் வல்லிம்மா .செடிகளுடனான  அவரது நட்பு பற்றிய உங்கள் பின்னூட்டத்தை இன்னிக்கு படிச்சேன்ம்மா .எத்தனை அற்புதமான ஒரு உள்ளம் அவருக்கு 

Geetha Sambasivam said...

மனசு வேதனைப்படுகிறது. என்றென்றும் அவர் உங்கள் நினைவில் நிலைத்து நிற்பார். மனது ஆறுதல் பெறுங்கள். அவர் ஆசிகள் உங்கள் குடும்பத்திற்கு எப்போது உண்டு. நாங்களும் அவரை நமஸ்கரிக்கிறோம்.

கரந்தை ஜெயக்குமார் said...

வணங்குகிறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, மனம் நிறை ஆசிகளை அவருடன் வழங்குகிறேன் .வாழ்க வளமுடன்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல்,
ஆமாம் அவரது மன ஈரமும் மகத்தானது.
மழை வந்து விட்டால் போதும், ஓடிப் போய் பெரிய பெரிய தொட்டிகளைத் தூக்கி வைத்து விடிவார்.
நான் எத்தனை கத்தினாலும் காதில் விழாது. உள்ளே வந்ததும் சொல்வார்.

நம்ம விடும் தண்ணீரில். அது சிரிக்காது மா. மழை நின்ன பிறகு பாரு . அப்படியே மலர்நதுவிடும் என்பார்.:) நன்றி கண்ணா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா. நேற்று கலக்கமாக இருந்தது. இன்று குழந்தாகளுக்கு அவர் ஆசி என்றும் வேண்டும் என்று ஷீரா. செய்தேன.

நடக்க வேண்டியதுதான். உங்கள் இருவருக்கும் எங்கள் ஆசிகள்.! என்றும் வளமோடு இருக்கணும்.

பிலஹரி:) ) அதிரா said...

வாழும்போது கிடைத்த இனிமையான நினைவுகள் என்றும் இனிமையாகவே இருக்கும் வல்லிம்மா, அவர் எப்பவும் உங்களுடனேயே இருப்பார்.. கவலைப்படாதீங்கோ, நாமும் ஒருநாள் போய்ச் சேர்ந்திடுவோம்தானே.. நானும் வணங்கிப் பிரார்த்திக்கிறேன்... எங்கிருந்தாலும் நல்லா இருக்கோணும்.

நெல்லைத்தமிழன் said...

அப்போதே படித்தேன். மனம் கனத்ததால் மறுமொழி இடத் தோன்றவில்லை.

ஶ்ரீராம் (?) தளத்தில் பகிர்ந்த அவர் புகைப்படம் கண்ணில் நிற்கிறது. (உளியோடு ஏதோ கைவினை வேலையில் இருப்பது போல?)

ஐந்து வருடங்கள் கழித்துச் சென்றிருந்தால் இருவரையும் மயிலையில் கண்டு வணங்கியிருக்கலாம். ஒரு சமயத்தில் மகன்களிடம் தந்தையைக் காண்பதும் தாயின் ருஃப்ளெக்‌ஷன் தெரிவதும்தான் ஆறுதல் அளிக்கும்.

அவர் நினைவு உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்கட்டும்.

ராமலக்ஷ்மி said...

என்றும் உங்கள் நினைவில் வாழ்கிறார்.

அவருக்கும் தங்களுக்கும் என் வணக்கங்கள்!

வல்லிசிம்ஹன் said...

அன்பு அருந்ததி:) அதிரா:)
நன்றி மா. எனக்கும் கீழே இதே மாதிரி இருக்கிறார்கள்.வயதிலும் குறைந்தவர்கள்.

இவரைத்தவிர இவர் சகோதரிகள் எல்லோருமே 80க்கு மேற்பட்டவர்கள்.
உலகமே இப்படித்தான். நானும் அதை ஒத்துக்கொண்டே நடக்க வேண்டும் அம்மா.

நீங்கள் சொன்னதை ஒப்புக் கொள்கிறேன்.அந்த ஒரு ஆறுதலில் வாழ்வு இறை அருளுடன் தொடரட்டும். எங்கள் பரிபூரண ஆசிகள் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா.
பரவாயில்லப்பா. கவலை வேண்டாம்மா. என்னைஐ விட வயதில் குறைந்த பெண்களும் இருக்கிறார்கள்.

ஆற்றாமையாகத் தான் இருக்கிறகு. சகித்துக் கொண்டு செல்ல வேண்டியதுதான்.
ஒரு படம் இவரோடது சிகாகோவில் எடுத்தது, மரத்தில் வேலை செய்வது போல
இருந்தது. ஶ்ரீராம் பதிவில் பார்ததீரகளா.?

நீங்கள் எல்லாம் நன்றாக இருக்கணும் மன வருத்தம் இல்லாமல் மகிழ்வாக இருக்க வேண்டும்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி,
வரணும்மா. எப்போதும் வளமாக இருக்க என் ஆசிகள் மா.

ஸ்ரீராம். said...

அன்றும், இன்றும், என்றும் அவர் உங்களுடனே இருப்பார் அம்மா. என் நமஸ்காரங்கள்.  

நெல்லை....   நான் அவரை ஒருமுறை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன்.  நானும் பாஸும் அவர் மற்றும் வல்லிம்மா ஆசிகளைப் பெற்றோம் அன்று.

Ramah Srinivsan said...

வல்லி மாமி அவர்களே, BETTER LATE THAN NEVER என்று எண்ணி நேற்றிர்க்கு பதில் இன்று என் கருத்தை வெள்யிடுகின்றேன். அவரை பார்த்து தெரிந்தவர் என்ற முறையில் நான் என் கருத்தை வெளியிடுகின்றேன். A very casual, fun loving and happy man. Never have I seen him sad or downcast. மிக அரிய மனிதர். அப்படியே தன் பிள்ளைகளுக்கும் அந்த பன்பை வழங்கியிருக்கின்றார். நீங்களும் அவரும் நல்ல மனிதர்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்.
நன்றி மா. ஒரு மைல் கல்லைத் தாண்டி இருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேண்டும் இல்லெயா மா.

உங்கள் எல்லோருக்கும் என் வாழ்த்துகள் ராஜா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ரமா, ரொம்ப நன்றி மா. உனக்கு. நான்,
ரேவதி மாமி மட்டுமே. ஐஐடியில் நிறையப் பார்த்திருக்கோம் இல்லையா.

நல்ல வார்த்தைகளுக்கு. ரொம்ப நன்றி மா.
உங்கள் எல்லோருக்கும் எங்கள் ஆசிகள்!

வெங்கட் நாகராஜ் said...

அவரது ஆசிகள் என்றும் தொடரும் மா...

ஒரே ஒரு முறை சந்தித்தாலும் மனதில் நீங்காது இடம் பிடித்தவர் சிங்கம்.

Bhanumathy Venkateswaran said...

உங்கள் இருவரின் பரஸ்பர அன்பை அறியும் பொழுது மனம் சந்தோஷப்படுகிறது. ஆனால் உங்கள் பிரிவுத் துயர் மனதை வருத்துகிறது. உங்கள் நெஜிலும் நினைவிலும் அவர் என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது பிரிவு ஏது? 

மாதேவி said...

மனம் கனக்கும் நினைவுகள். உங்கள் இருவரையும் வணங்குகிறேன் .