Blog Archive

Monday, February 10, 2020

உலக நீதி கதை 5 மூத்தோர் சொல்

வல்லிசிம்ஹன்,

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.

உலக நீதி கதை  5

Image result for grand parents and kids"மூத்தோர் சொல் வார்த்தை  மறக்க வேண்டாம் .

 அமெரிக்க விடுமுறை நாட்களில்  வீட்டுப்பாடம்  செய்த நேரத்தைத் 
தவிர மற்ற நேரம் தொலைகாட்சி முன் செல்கிறது.

அதுவும்  எனக்குப் புரியாத மைண்டகிராஃப்ட்.
நிலைகுத்திய கண்களுடன் பார்ப்பது கண்ணுக்கு கெடுதி என்று சொல்லிக் கொண்டே இருப்பேன்.
வெளியே விளையாடப் போக முடியாத நிலையில் அவர்களும் என்னதான் செய்வார்கள்.

எங்கள் காலத்தில்  ,பெரியவர்கள் இ ட்டதுதான் கட்டளை. உடனே செய்ய வேண்டும் மகிழ்ச்சியுடன் செய்தொம்.
வேறு ஒன்றும் நினைக்காத தெரியாது.
இப்போது பிறக்கும்போது கையில் அலைபேசி  மற்றும் தொலைக் காட்சி.
 ஜுராசிக் பார்க் சம்பந்தப் பட்ட  எல்லா விவரங்களும் 
அவனுக்கு கரதலைப் பாடம் .

அதேவேகத்தில்  ஓடும்போது காலில் அடிபட்டுவிட்டது.
துடித்துப் போய் விட்டான் வலி யில்.

என்னுடன் உட்கார வேண்டிய நிர்ப்பந்தம் வந்ததும்.
''உன்னுடன் கொஞ்சம் பேசலாமாப்பா' என்று கேட்டுக் கொண்டேன்.
அவனும் தலை ஆட்டினான்.
ஏற்கனவே முட்டியில் அடிபட்டு இருக்கிறது இல்லையா 
என்று கேட்டேன்.
ஓடி ஆடி  விளையாட வேண்டியதுதான்.
கண்மண் தெரியாமல்  ஓடக்கூடாது என்றேன்.
"
ஓடாமல் விளையாட முடியாது பாட்டி."
தாத்தா கூட சொல்லுவாரே . நிறைய  ஓடணும் டான்னு.
சரிதான் அவர் சொன்னது பெரிய மைதானத்தில் ஓடணும் னு கண்ணா.
நீ சின்ன  வீட்டில்  இவ்வளவு  சோஃபா, நாற்காலிகள் மத்தியில் 
கண்ணைக்  கட்டிக் கொண்டு 
ஒரு அறையிலிருந்து  மற்ற அறைகளுக்குச் சென்று  வருவது சரியான்னு பாரு என்றேன்.

மாடிக்கு கூடத்தான் போய் வந்தேன். கீழேயும் போனேன் என்றான் நேர்மை வீரன்.😊😊😊😊😊
''குழந்தைகள்னா ஓடத்தானேம்மா  செய்யும்'',கோரசாகப் பாடிய 
மகன்,மருமகள்,மகள் .:)

ஆஹா. இளையோர்  வார்த்தைகளை நாமும் கேட்க வேண்டியதுதான்.
''எப்பொருள் யார் யார் வாய்''... நமக்கு மனப்பாடம் ஆன விஷயமே.
என் மதுரைத்தாத்தா  சொன்னது எல்லாம், பெரியவர்கள் வார்த்தையைக்  கேட்டு நடக்க வேண்டும் என்பதே. 

இப்பொழுது 65 வருடங்களுக்கு மேல்  விதிகள் 
மாறுகிறதோ.

ஆனாலும் நான் சொன்ன பிறகு  இரு பேரன் களும் 
நிதானித்து நடந்தார்கள் என்றதால்  நிம்மதியே  எனக்கு.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

















18 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

மீதான் 1ஸ்ட்டூ வல்லிம்மா:)).. இல்ல ஆராவது முந்திட்டினமோ தெரியல்லியே...

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா ஹா ஹா உண்மைதான், வெளியே போகும் நேரம் தவிர்த்து வீட்டுக்குள்ளே வேறு என்னதான் பண்ணுவார்கள் அவர்கள். கொஞ்சம் வளர்ந்திட்டால் படிப்பில் நேரம் செலவாகும்... எங்கள் வீட்டிலும் மைண்ட் கிராஃப் தான் கொஞ்சக்காலம்.. ஹோட்டேல் என்ன தங்கச் சுரங்கம் என்ன:).. ஹா ஹா ஹா இப்போ அதை விட்டு விட்டு.. ஃபுட்போல் கேம்ஸ் தான் சின்னவர் விளையாடுகிறார் எக்ஸ் பொக்ஸ்ல்.

இப்போதைய குழந்தைகள் எங்கும் அப்படித்தான் வல்லிம்மா.. கூப்பிட்டால்ல். 2 மினிட்ஸ்.. 5 மினிட்ஸ்... இப்படிச் சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

மூத்தோர் சொல் வார்த்தை எல்லாம் முன்னர் பொய்யாகும், காலம் வந்து பாடம் சொன்னால் பின்னர் மெய்யாகும்... சின்னனில் படிச்ச வாக்கியம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா வரணும் வரணும். நீங்க தான் ஃபர்ஸ்டூ.:)
இந்தியால எல்லாம் வேலைக்குப் போயிருப்பார்கள்.
நூத்துக்கு நூறு உண்மையான வார்த்தைகள்.
பெரிய பேரன் கல்லூரி போயாச்சு. இரண்டாமத்தவன் ரொபோடிக்ஸ்.
இங்க இருக்கிற சின்னவன் லெகோ மைண்ட்ஸ்டொம்.

ஓடி விளையாடு பாப்பா சொன்ன வாயால்
ஓடாதே பாப்பான்னு சொல்லக் கூடாது.
நீங்க சொல்வது அத்தனையும் இங்கே நடக்கிறது. 2 நிமிஷம் ,5 மினட்ஸ் இதுதான்
உருட்டுப் போட்டு சொல்கிறார்கள்.
அதிரா உங்க ஊர்ல மழை இருக்காப்பா.
இங்கே ஒரே ஊழிக்காத்து. காதே பிஞ்சிடும் போல.
லண்டன்ல மழைன்னு பார்த்தேன்.
எப்படியாயினும் பத்திரமா இருங்கோ.

KILLERGEE Devakottai said...

மூத்தோர் சொல் கேட்டு நடக்கும் பிள்ளைகள் இன்று அரிதாகி விட்டதே...

நெல்லைத்தமிழன் said...

வல்லிம்மா... இப்போ உள்ள குழந்தைகள் அப்படித்தான் என்றாலும், நம்ம காலத்தில் அப்படியே சொன்னபடி நடந்தோமா என்று யோசித்தால் சந்தேகமாகத்தான் இருக்கு. நம்ம காலத்தில் நமக்குத் தெரிந்த அளவில் படிக்காமல் பொழுதைக் கழித்தோம். (கிரிக்கெட் விளையாடறோம், ஃப்ரண்ட் வீட்டுக்குப் போறோம் என்று). இப்போ உள்ளவங்க கையிலேயே உலகம் இருப்பதால் அதில் ஆழ்ந்துவிடுகிறார்கள்.

என் இளைய வயதில் மனிதர்களோடு பழகினேன், சண்டையிட்டேன், சிரித்தேன், அன்பு செலுத்தினேன். இப்போ உள்ளவங்களுக்கு இணையம், அலைபேசியே உலகமாக இருக்கு. அதுவரையில் இப்போது உள்ளவங்க பரிதாபமானவங்கதான்.

ஸ்ரீராம். said...

அறிவுரை சொல்லும் பெரியவர்கள் எதிரியாகிப் போகும் காலம்.  அளவோடு சொல்லி நகர்ந்துவிட வேண்டுமென்றே எனக்கும் தோன்றும்.  ஆயினும் உங்கள் பேரன்கள் சமர்த்தாக இப்போது நிதானமாக நடக்கிறார்களே... பாராட்ட வேண்டும்.

முற்றும் அறிந்த அதிரா said...

அதேதான் வல்லிம்மா.. சனிக்கிழமை ஈவினிங் தொடங்கி காத்து மழை இருட்டு குளிர்.. இன்று ஹேல் ஸ்டோனும்.. ஸ்னோவும் சேர்ந்து மழையும் கொட்டுது.. நல்லவேளை ஸ்கூல் ஹொலிடே.. வேர்க் போவோர் பாவம்:(..

பிரித்தானியாவின் சில இடங்களில் வெள்ளமும்.. எங்களுக்கு அவ்வளவு மோசம் இல்லை... நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மூத்தோர் சொல் கேட்டு நடப்பதே நன்று.

நல்ல பகிர்வு....

கோமதி அரசு said...

இப்போது இருக்கும் வீட்டுக்குள் ஓடி ஆடினால் எங்காவது இடித்துக் கொள்வார்கள்தான்.

ஆனாலும் என்ன செய்வது குழந்தைகள் ஓடத்தான் செய்வார்கள்.
உங்கள், மகன் மருமகள், மகள் சொல்வது போல.

கவனமாய் விளையாடுங்கள் எங்கும் இடித்துக் கொள்ளாமல் என்று மட்டும் தான் சொல்லமுடியும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி,
பதின்ம வயது வரை செல்லுபடியாகும். அப்புறம் தெரியவில்லை மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா,
இப்போது உள்ள குழந்தைகள் உலகமே மாறிவிட்டது.
கடந்த ஆறு மாதங்களுக்கு உள்ளேயே மாறுதல்களைக் காண்கிறேன்.
எங்கள் காலத்தில் பெற்றோர் சொல்லை மீறுவது என்பது
நடவாத காரியம்.
எங்கள் பசங்க வளரும்போதும் நிலைமை மோசமில்லை.
நாங்கள் அறிவுறுத்தவும் இல்லை. இப்போது ஓரளவுக்குக் கட்டுப்
படுகிறார்கள்.
ஆனால் bargaining நடக்கிறது:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
நாம் சொல்வதைச் சொல்லி வைக்கலாம். ஏதாவது ஒரு பயன்
துளி கிடைத்தாலும் போதும்.

ஏனென்றால்,அவர்களுக்கு ஒவ்வாமல் ஏதாவது சிறு சங்கடம் வந்தாலும் என்னால்
தாங்கிக் கொள்ள முடியாது என்பதே என் சுய நலக் கவலை.:)
மற்றது பகவான் இஷ்டம்..நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அதிரா, நன்றி மா.
இந்தச் சத்தமே ஒத்துக் கொள்ளவில்லை.
லண்டன் வெள்ளத்தை நானும் பார்த்தேன்.
பத்திரமாக இருங்கள் விரைவில்
குளிர்காலம் முடியட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் வெங்கட்.
நாம் அவர்கள் நலனுக்குச் சொல்கிறோம் என்பது அவர்களுக்குப்
புரிய வேண்டும். நன்றி மா.

சிகரம் பாரதி said...

எல்லாம் நவீன காலம் என்று ஒற்றை வரியில் அனைத்தையும் கடந்து விடுகிறோம். தொழிநுட்பம் நன்மை என்றாலும் தீமைகள் தான் அதிகம் நிறைந்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

நமது வலைத்தளம் : சிகரம்
இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

Geetha Sambasivam said...

இப்போதுள்ள குழந்தைகளிடம் நாம் கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டி இருக்கு! அவங்க சொல்வதைத் தான் நாம் கேட்டாக வேண்டும். நான் விளையாட்டாச் சொல்லுவேன், கல்யாணத்துக்கு முன்னால் அப்பா, அம்மா, பின்னர் மாமனார், மாமியார், கணவர், இப்போக் குழந்தைகள், பேத்திகள்! :)))))இவங்க சொல்வதைத் தான் கேட்டு நடந்துக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே கீதா மா. நான் சொல்லாமல் விட்ட வார்த்தைகளை நீங்கள் சொல்லி விட்டீர்கள்.
அதுதான் இன்றைய நிலைமை.

மாதேவி said...

உங்கள் அன்பான வார்த்தையில் நிதானித்து நடப்பது மிகுந்த ஆறுதல்.