Blog Archive

Tuesday, February 11, 2020

காய்கறி ஸ்டூ!

வல்லிசிம்ஹன்
எல்லோரும்
 வளமாக வாழவேண்டும்.


மருமகள் நல்ல சமையலில் சுவாரஸ்யம் காட்டுபவர்.

குழந்தைகள்  காய்கறிகள் சாப்பிடுவத்தில் 
இன்டரஸ்ட்   காண்பிக்க மாட்டார்கள். எப்பொழுதும் பாஸ்தா, பிரெட் டோஸ்ட், இல்லாவிட்டால் சிரியல்.

நல்ல வேலையாக உருளையும், ப்ரோக்கொலி (sinnavanukku)யும், 
கத்திரிக்காயும்  ,கீரையும்  (அக்கா )
பிடிக்கும்.
Image result for Migro

இருவருக்கும் நேற்று அடித்த காற்று ஒத்துக் கொள்ளாமல்
நல்ல  ஜலதோஷம் பிடித்து விட்டது. 

பள்ளி முடிந்து வரும்போது , சாப்பிட  மிளகு சீரகம் பொடித்து வறுத்த 
நிறைய நெய் கலந்த    பாசுமதி  சாதமும்,
உ.கிழங்கு, ப்ரோக்கோலி,காரட், சிகப்பு குடமிளகாய்,
மஞ்சள் குடமிளகாய், எல்லாம் சின்ன அளவில் நறுக்கி குக்கரில் வேக 
வைத்து,  

மற்ற எளிய  காரம் இல்லாத   வெங்காயம்,
கொத்தமல்லி தழை, நிறையத் தேங்காயத் துருவல் 
சேர்த்து அரைத்து,

இந்தக் காய்கறி கலவையுடன் சேர்த்து 
ஒரே ஒரு கொதி  
வந்ததும் இறக்கி விட்டாள் .

மூடி யே வைத்ததில்  பச்சை வாசனை போய் விட்டது.


சாப்பிட்டு விடுவார்கள் என்று நம்புகிறேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

உபரி செய்தி.
நேற்று  
கிழக்கு  ஐரோப்பா முழுவதும் அடித்த காற்று,

நியுயார்க்கிலிருந்து லண்டன் வந்த  விமானத்தை ஒன்றரை மணி முன்பே  கொண்டு வந்து விட்டதாம். 
ரெகார்ட் ஸ்பீட்.😉😉😉😉😉😉😹😹😹😹



19 comments:

Angel said...

ஆமாம் வல்லிம்மா .இங்கேயும் புயல்காற்று ..நிறைய வீடுகளில் ஷெட்ஸ் கூரைல்லாம் பறந்து போச்சு..காய்கறி ஸ்டூ நல்லா இருக்கு ..நான் கிண்ணத்தில் போட்டு சாப்பிடுவேன் ..அரிசி சாதமில்லாம.

KILLERGEE Devakottai said...

விமானத்தை காற்றே சீக்கிரம் கொண்டு வந்ததா ?

எதிர் பக்க விமானங்களின் நிலை ?

Geetha Sambasivam said...

காய்கறி ஸ்டூ நன்றாக உள்ளது. குழந்தைகள் பிடித்துச் சாப்பிட்டிருப்பார்கள். இங்கே அவ்வளவெல்லாம் காற்று இல்லைனாலும் காற்றடித்தது குளிராக! மற்றபடி காற்றினால் விமானம் ஒன்றரை மணி நேரம் முன்னால் வந்து விட்டது எனில்! நினைக்கவே பயமும், கவலையுமாக இருக்கே! இது உண்மையா?

கோமதி அரசு said...

நானும் இன்று சமையல் குறிப்பு கொடுத்து இருக்கிறேன் அக்கா.

காய்கறி ஸ்டூ நன்றாக இருக்கிறது.
குழந்தைகள் விரும்பி சாப்பிட்டால் போதுமே நமக்கு அதைவிட என்ன வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சல் , அங்கே மகள் வீட்டில் இத்தனை
சமையல் ஐட்டம் செய்து பார்ப்பதில்லை. என் வரையில் செய்து கொண்டு விடுவேன்.
உப்பு, காரம் இரண்டும் அங்கே ஆகாது. இங்கே இவர்கள்
எல்லாம் சேர்த்துக் கொள்கிறார்கள். அதனால்
நிறைய பொழுது போகிறது. ஸ்டூ நன்றாகவே
வந்தது. நீங்கள் கீதாமா சொல்வது போல
சொல்கிறீர்கள்,அவர்களும் இது போல சாப்பாட்டு நேரத்தில்
காய்கறிகள் சாப்பிடுவதைச் சொல்லி இருக்கிறார்கள். இங்கும் சில நாட்கள் டின்னர்
நேரம் சலாட் எல்லோருமே சாப்பிடுகிறார்கள்.'
எனக்கு தான் சாதம் இல்லாமல் தாங்காது. நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

காய்கறி ஸ்டூ... பார்க்கவும் நன்று.

விமானத்தின் வேகம் - கில்லர்ஜியின் அதே சந்தேகம் எனக்குள்ளும்! நல்லதே நடக்கட்டும்.

ஸ்ரீராம். said...

காய்கறி ஸ்டூ பறந்திருக்குமென்று நம்புகிறேன்.  சுவையாய் இருந்திருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம், தேவகோட்டைஜி,
டெயில் விண்ட் நிறைய இருந்தததால்
ப்ரிட்டிஷ் ஏர்வெஸ் விமானம்
5 மணி நேரத்துக்குள் வந்து விட்டது.
நீங்க கேட்ட கேள்வியே எனக்கும் தோன்றியது.
எப்படி சமாளித்தார்கள் என்று நியூயார்க் டைம்ஸில் போட வில்லை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம்,கீதாமா,

சிகாகோ காற்றையும் பார்த்திருக்கேன்.
இங்கே இன்னும் ஜாஸ்தி. நேற்று ராத்திரி ஜன்னலை அது தட்டின வேகத்தின் சத்தம் ஒரு மணி நேரம் தூங்க முடியவில்லை.
இத்தனைக்கும் இங்கே ஜன்னல்களுக்கு வெளியே ஷட்டர்ஸ்
இருக்கும். அதையும் தாண்டி இந்த சத்தம்.
ஆஞ்சனேய ஸ்லோகம் சொல்லி கட்டிலில் உட்கார்ந்திருந்தேன்,.
மூன்று மணிக்கு ஓய்ந்த பின் தூங்கப் போனேன்.
ஹுஸ்டனும் குளிருகிறதா,.சரியாப் போச்சு.
இன்னும் 3 வாரம்.!!!!

வல்லிசிம்ஹன் said...

வேகமாக வந்தால் உள்ளே எவ்வளவு ஆடி இருக்கும்னு நினைக்கவே பயமாக இருக்கு.
நாம் பயணிக்கும் போது பகவான் கூடவே வருவார் கீதா மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இன்னும் போய்ப் பார்க்கவில்லை மா.
கண்டிப்பாகப் பார்க்கிறேன். ஆமாம் குழந்தைகள் விரும்பி
சாப்பிட்டார்கள். தேங்காய் கலந்ததுதான் மிகவும் பிடித்தது.
நன்றி மா.
எனக்கென்னவோ அவியல் மாதிரி தோன்றியது.:)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
ஜெட் ஸ்பீட்,ராக்கெட் ஸ்பீட் மாதிரி இருந்ததாம்.
அதுவும் எனக்கு இந்தப் பயணத்தில் அட்லாண்டிக் கடல் மேல் பறப்பதே பயமாக
இருக்கும்.கடவுள் துணை. ஸ்டு நன்றாக இருந்ததுப்பா.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. அன்பு ஸ்ரீராம். நல்ல பசியோடு வந்தவர்கள் நன்றாகச் சாப்பிட்டார்கள். பறந்துதான் போய் விட்டது காற்றாய்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நான் எங்கள் வீட்டில் மரக்கறி சாப்பிட வைக்க, ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு புதுப்பெயர் சொல்லுவேன்:)... என் வாயில் என்ன வருகிறதோ அதைச் சொல்வேன்... அது சாப்பாட்டின் பெயர்தான் என்றில்லை:)..
புதிசா இருக்கே என நினைச்சு... வட் இஸ் தட்... என்றபடி சாப்பிடத் தொடங்கிட்டால்ல்ல் பின்பு சாப்பிட்டு விடுவார்கள்... ஹா ஹா ஹா

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓம் பிளேன் ஏழியாக வந்தடைஞ்ச நியூஸ் நானும் பார்த்தேன் ஹா ஹா ஹா ஏதோ நல்லபடி லாண்ட் ஆகி விட்டது....

வல்லிசிம்ஹன் said...

அருந்ததி அதிரா! உங்க பெயரும் அழகாத்தான் இருக்கு.
அப்புறம் சாப்பாட்டின். பெயர் கேட் பானேன்:)
அதிலயே மயங்கினாலும் பிள்ளைகள் நல்லா. இருந்தாதானே சாப்பிடுவார்கள்.!
இன்னும் புதுசாப் பல படைக்க வாழ்த்துகள்.

ப்ளேன் விவரம் கொஞ்சம் பயம் தான். நீங்க சொன்னது போல் நல்ல அப்படி டாண்ட் ஆச்சே...அதுக்கே நன்றி சொல்லணும்.

விமானம் வேற இடத்தில இறங்கின சங்கத்த கேட்டுக் கொண்டுதானே இருக்கோம்.

priyasaki said...

நானும் காய்கறி ஸ்டூ செய்வதுண்டு. மகனுக்கு பிடிக்கும். அவருக்கு சின்ன வயதில் எல்லாமே பழக்கியபடியால் எனக்கு(காரம் உட்பட) பிரச்சனையில்லை. உங்க டிஷ் நல்லாயிருக்கு வல்லிம்மா.

Anuprem said...

காய்கறி ஸ்டூ...wow

மாதேவி said...

அருமை.