வல்லிஸிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.
உலக நீதி.
//////மனம்போன போக்கெல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவென்று நம்ப வேண்டாம்
தனம்தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
சினம்தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்திருந்தார் வாசல்வழிச் சேர வேண்டாம்
வனம்தேடும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே///
இந்தப் பாடல் குழந்தைகளுக்குப் புரிவது கடினமாக இருந்தது.
இந்தக் குளிர் நாட்களில் பள்ளிக்குச் செல்வதைத் தவிர
வேறு வேலை இல்லை.
நானும் கணினியின் மூடிவைத்துவிட்டால் பேத்தியும் பேரனும்
உடன் வந்து அமர்ந்துவிடுவார்கள்.
அவர்கள் தொலைகாட்சி ரிமோட் எடுப்பதற்குள்,
நான் கதை ஆரம்பிக்க வேண்டும்,
பெரியவளுக்கு அமர்சித்ர கதா அனைத்தும் மனப்பாடம்.
அதனால் அந்தக் கதைகளைச் சொல்ல முடியாது.
புதிதாகத் தான் சொல்ல வேண்டும்.
அதனால் உலக நீதி பாடல்களை படிக்க ஆரம்பித்தேன்.
மேலே இருக்கும் பாடலின் சிலவரிகளை விளக்கி
அலிபாபா கதையில் வரும் அவன் அண்ணன் காசிம்,,
பணத்திப் பதுக்கி வைத்ததையும், மேலும் பணத்துக்கு ஆசைப் பட்டதையும் , கடைசியில் அந்தப் பேராசையிலேயே
உயிர் துறந்தையும் சொல்ல
அவர்களுக்கு கொஞ்சம் புரிந்தது.
பணம் அவசியம் தானே பாட்டி என்கிறார்கள் இருவரும்.
பேராசை வேண்டாமே என்று இடை மறித்தாள் பேத்தி.
உண்மைதான் மா.
செல்வம் எப்போது பெருகும் தெரியுமா
என்று கேட்டேன் .பாங்கில் போடலாம் என்றான் சின்னவன்.
நீ சொல்லு பாட்டி.
நம் ஊரில் ஒரு ஏழை விவசாயி இருந்தான்.
அவன் நிலத்தில் கிடைக்கும் வருமானம் கொஞ்சம் தான்.
இரண்டு மூட்டை நெல்லே கிடைத்தது.
அறுவடை முடிந்தபிறகு நெல்லை அரிசியாக்கி,
நிலத்தைப் பார்வையிடப் போனான். அங்கே அணில்களும்,காகங்களும் சிந்தியிருந்த நெல்மணிகளைப் பொறுக்கி உண்டு கொண்டிருந்தன.
அப்போது அங்கே இன்னொரு வயதானவரையும் பார்த்தான்.
அவரும் தானியங்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.
பெரியவரை அணுகி, வணக்கம் சொல்லி ஐயா நீங்கள் ஏன் இங்கே எடுத்துக் கொள்கிறீர்கள் ?என்று வணக்கத்துடன் கேட்டான்.
நானும் பண்ணை,நிலம் என்று இருந்தவன் தான் அப்பா.
மேலும் மேலும் நிலங்கள் வாங்கினேன்.
மனைவிகூடச் சொன்னாள் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து. என்றாள் . நான் கேட்காமல்
பலவிதமாக நெல் வியாபாரங்கள் செய்து, பதுக்கிவைத்து விற்று
குற்றம் புரிந்தேன். ஆண்டவனுக்கு என் நிலையை மாற்றத் தோன்றிவிட்டது.
காலம் மாறி மாரி பெய்து அழித்தது. பெய்யாமல் அழித்தது.
ஒரே மழையில் நிலங்கள் பாழடைந்தன .
பிறகு வறட்சி. எனக்கோ மக்கள் இல்லை. மனைவிக்கு நோய்.
நிலம் விற்றால் வாங்க ஆளில்லை .
"ஏன் பாட்டி ,அப்பர்சாமி அபார்ட்மெண்ட்ஸ் கட்டி இருக்கலாமே என்றாள் இந்தக் காலத்து பேத்தி :)
அந்தக் காலத்தில் அதெல்லாம் கிடையாதுமா என்றேன் நான்.
பெரியவர் சொன்னார்,
"இது போல அறுவடையான நாட்களில் கிடைக்கும் எல்லா வகை தானியங்களும் காய்கறிகளும் எனக்கு உதவும் என்றார்.
இதெல்லாம் எப்படிப் போதும் ஐயா.
"
என் பழைய குடியானவர்கள் உதவுவார்கள்.
என் பங்கும் இருக்கட்டும் என்றே இந்த வேலை செய்கிறேன்."
விவசாயி முருகனுக்குச் சட்டென்று தோன்றியது. ஐயா எங்கள் குடும்பமும் சின்னதுதான். நீங்கள் எங்களுடன் வந்து இருங்கள். நாமிருவரும் உழைத்து முன்னேறலாம் என்றான்,
சொன்னதோடு இல்லை அவரை அழைத்துச் சென்று உணவை உண்ண வைத்தான்.
அவரையும் அவரது நோய் கொண்ட மனைவியையும் தன் வீட்டில் இருக்க வைத்தான்.
பெரியவர் உடல் வலுவால் முருகன் நிலம் செழித்தது. முருகன் அவன்
மனைவி செந்தாமரையின் கவனிப்பில்
பெரியவரின் மனைவியும் எழுந்து நடமாட ஆரம்பித்தாள்
படிப்படியாக முன்னேறி ஊர் முழுவதும்
அவர்களால் நலம் பெற்றார்கள்.
என்று நிறுத்தினேன்.
இதுக்கும் அந்தப் பாட்டுக்கும்
என்ன சம்பந்தம் என்றால் பேத்தி.
பாடுபட்டு பணத்தைச் சேர்த்தால் மட்டும் போதாது.
அதை ஒளிக்காமல் எல்லோருடனும் பங்கு கொண்டால் அது மேலும் மேலும் வளரும்.
மனம் தாராளமாக இருந்தால், செல்வமும் நம்மிடம் தங்கும்
என்பதுதான் அர்த்தம். என்றேன். OK, I WILL SHARE MY CHOCALATES WITH
you akka.
Ok I will share all my colour boxes with you //
என்றாள் பேத்தி. நலமுடன் வாழ்க. இன்னமும் கேள்விகள் அவர்களுக்கு
இருக்கின்றன அவர்களுக்கு.

16 comments:
குழந்தைகள் மனம் தான் எவ்வளவு சீக்கிரம் நல்லதை ஏற்றுக்கொள்கிறது. நல்ல கதை. நல்ல பாட்டி. பேரன், பேத்திக்கு எங்கள் ஆசிகள்.
நல்ல கதை. குழந்தைகளுக்கு இப்படி கதை சொல்லவும் ஆள் வேண்டுமே...
நீங்கள் சொன்ன கதையில் இருந்த நீதியை குழந்தைகள் சரியாக புரிந்து கொண்டது சிறப்பு.
அன்பு கீதாமா,
கேட்கும் ஆசை இருந்தால் சொல்லத் தடை
இல்லை. மகன் கேட்டுக் கொண்டதாலயே
செய்கிறேன். அவர்களுக்கு அலுக்காமல்
சொல்ல வேண்டும் .இப்போ நடக்கிற மாதிரி சொல்ல வேண்டும்.
மிகப் புத்திசாலிக் குழந்தைகள். நன்றி மா.
அன்பு ஸ்ரீராம். சிகாகோவில் பேரன் ,
கதை கேளாமல் தூங்க மாட்டான்.
இங்கே முன்பேயே ஆரம்பித்திருக்க வேண்டும்.
மிக மிக நன்றி மா.
நல்ல கதை
அன்பு பானுமா.
வந்து படித்ததற்கு மிக மிக நன்றி. குழந்தைகள் நல்ல வார்த்தைகளுக்குக் கட்டுப்படும் வயதில் இருக்கிறார்கள் மா.
கதை அருமை அம்மா...
குழந்தைகளுக்கு மட்டுமல்ல. அனைவருக்குமே ஏற்றது.
அருமையான கதை.
கேட்க குழந்தைகள் பிரியபட்டால் சொல்ல கதைகள் நிறைய இருக்கே!
அதுவும் உங்களை போல் குழந்தைகளுக்கு ஏற்றார் போல கதைகள் சொல்லி மகிழ்விக்க பாட்டி இருந்தால் அப்புறம் என்ன !.
மிக மிக நன்றி கரந்தை ஜெயக்குமார்.
அன்பு தனபாலன்,வந்து படித்து கருத்து சொன்னதற்கு
மிக நன்றி.
அன்பு முனைவர் ஐயா,
உண்மையே. நீதி எல்லோருக்கும் எப்போதும் வேண்டும்.
உரைகளைக் குழந்தைகள் ஏற்கவேண்டும்.
அன்பு கோமதிமா,
என்ன ஒரு அழகான பாராட்டு.
எனக்கும் பேச வாய்ப்பு கிடைக்கிறது. அவர்களுக்கும் தமிழ்ப்
பழக்கம் வருகிறது.
சிலசமயம் நல்ல நேரங்கள் வந்து வாய்க்கின்றன.
அவர்கள் பொறுமை ஒரு அரைமணி நேரம் தாங்கும். சுவையாகச் சொன்னால்
நீடிக்கலாம்.நன்றி மா.
நல்ல கதை.
பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...
குழந்தைகளுக்கு நற்போதனை தரும் கதைகளை சொல்கிறீர்கள் வாழ்த்துகள்.
Post a Comment