Blog Archive

Friday, January 31, 2020

உலகநீதி கதை 3.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் 

உலகநீதி  கதை 3.

//சினம் தேடி அல்லலையும் தேடவேண்டாம்
சினந்திருந்தார் வாசல் வழி சேர வேண்டாம்

தருமத்தை ஒரு நாளும் மறக்க வேண்டாம்//

Image result for avoiding  anger

குழந்தைகளுக்குப் பள்ளியிலிருந்து வரும்போதே 
பசி. 
அவர்கள் அம்மாவும் வேலையிலிருந்து வரவில்லை.

கையில் தான்  அலைபேசி இருக்கிறதே.
என்ன செய்வது என்று அறிவுரை கேட்டுக் கொண்டார்கள்.

அவர்களுக்குப் பிடித்த உணவை செய்து தரட்டுமா என்று 
கேட்டதற்கு  மறுத்துவிட்டார்கள். ஐந்து நிமிடத்தில் 
வாக்குவாதம் ஆரம்பித்துவிட்டது.

அவசரத் தேவைக்குப் பாலைக் கொடுத்துவிட்டு 
இருபக்க விவாதத்தைக் கேட்டு முடிப்பதற்கும் 
அவர்கள் அம்மா, பிடித்த பலகாரத்தை வாங்கி 
வருவதற்கும் சரியாக இருந்தது.

அவர்களுக்கு அதுதான்  தேவையாக  இருந்தது.
சாப்பிட்டு முடித்ததும், கோபம் தீர்ந்ததா என்றதும் சிரிக்கிறார்கள்..

இதுதான்  சரியான சந்தர்ப்பம்  என்று 
அவர்களை  அழைத்து உட்கார வைத்தேன்.
ஸாரி , பாட்டி  , நாங்க ரொம்ப  சத்தம் போட்டுவிட்டோம் என்று 
கேட்ட குழந்தைகள்  மீது   என்ன சொல்வது என்றே 
தெரியவில்லை.
அதற்குத்தான் இந்தப்  பாடலைச்  சொல்ல நினைத்தேன்.

தருமத்தை ஒருநாளும் மறக்க  வேண்டாம் .
இது என்ன சொல்லு என்றேன். 
பேத்திக்குப் புரிந்தது. 
தானம் செய்ய வேண்டும்  என்றாள் .

அடுத்து  சினம் கொள்ள வேண்டாம். வேறு யாராவது கோபப்பட்டால் அந்த இடத்தில்  இருந்து விலகிவிட வேண்டும். என்று சொன்னதும்.

அது முடியுமா பாட்டி. 
முடியும். கண்ணா. 

கொஞ்ச நேரம் முன்னால்  ஒரு பெரியவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன்.

ராமர் கதை தெரியுமா என்றேன்.  என்ன பாட்டி, 
நன்றாகத் தெரியும் என்கிறார்கள்.
அதில ஹனுமான் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்றதும்.
நல்ல புத்திசாலி,பலவான், மெதுவாகப் பேசுவார், தைரியம் அதிகம். 
வீர தீர பராக்கிரமசாலி என்று அனுமன் சாலிசா 
போல சொல்ல ஆரம்பித்தனர்.:)

"அவர் ஒரு தடவை நல்ல  சிக்கலில் மாட்டிக் 
கொள்ள நேர்ந்தது. அவரின் அளவில்லாத 
பாசத்துக்கு ஆட்பட்டிருந்த ராமருக்கும் சுக்ரீவனுக்கு கருத்து பேதம் "
என்று விபீஷண  சரணாகதி  பற்றி சொல்ல ஆரம்பித்தேன்.

விபீஷணன், அண்ணன் ராவணனை விட்டுவிட்டு ராமனிடம் அடைக்கலம் கேட்கும் போது,
சுக்ரீவன் மறுக்க,
கருணாசாகரனான  ராகவன் , தன்னைச் சரணமடைந்தவனைக் காக்க வேண்டும் என்கிறார்.
சுக்ரீவனோ  விபீஷணனை  நம்பக்கூடாது. அவன் உங்களைக் கொன்றாலும் கொல்லுவான் 
என்று சொன்னதும் ராமர் மனம் வாடுகிறது.
இது வரை சும்மா இருந்த   அனுமன்,

சுக்ரீவனிடம் சென்று  அவனிடம் சினத்தை அகற்றி நிதானமாக இருக்கச் சொல்கிறார்.
உனக்கு ராமர் உயிர் மேல் எவ்வளவு அக்கறையோ அதே போல அவர் தம் சரணாகதித் தத்துவத்தின் மீது 
உயிர் வைத்திருக்கிறார்.
நீ விபீஷணனை வேண்டாம் என்றால் அவர் உயிரை விடுவது நிச்சயம்.
உனக்கு அது  தர்மமாகப் படுகிறதா "
என்றதும்  சுக்ரீவனின் சினம் சட்டென்று  தணிந்தது.

என் மேலும் ராமருடைய இரக்கத்தின் மேலும் நம்பிக்கை வை.
இரு உயிரைக் காப்பாற்றுவாய் என்கிறார்.


பிரச்சினை தீர்ந்தது என்றேன்.Image result for VIBHISHANA SARANAGATI

நீ கோபம் இருக்கும் இடத்தில் இருக்கக் கூடாது என்றல்லவா சொன்னாய் என்று சமயோசிதமாகக் கேட்டான் சின்னவன்.

உண்மைதான் பா. அனுமனால் கோபத்தை விரட்ட முடிந்தது.
நிதானமாக யோசித்துப் பேச முடிந்தது.

எல்லோரும் கோபம் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது.
நல்ல வேலையும் நின்று போய்விடும்.

இருவரும் யோசித்தார்கள்.

பசி வரும்போது  பேசாமல் இருக்கணுமா ?
நிதானமா இருக்கணும் என்றேன்.
கொஞ்சம் கஷ்டம் பாட்டி.!
ஆமாம் பா. இப்போதிலிருந்தே  பழக ஆரம்பிக்கலாம்.

இன்னும் கொஞ்சம் வயதானால் தெரியும் என்றேன்.
 உனக்கு கோபம் வராதா என்றாள்  பேத்தி. வரும்பா .
இப்பதான் பேசுவதைக் குறைத்து வருகிறேன் என்றேன்.

ஓஹோ. அப்பா எங்களுக்கும் நிறைய நாள் ஆகும் என்றான் சின்னவன்:)




12 comments:

ஸ்ரீராம். said...

சினத்தைக் கட்டுப்படுத்த நான் என் தந்தையையும் தனயனையும் பார்த்துக் கற்றேன்.  அவர்களுக்குப் பிரமாதமாக .கோபம் வரும்.  அதன் விளைவுகளை எண்ணியே நான் குறைக்க ஆரம்பித்தேன்!

Geetha Sambasivam said...

உண்மை தானே, அந்தக்காலத்தில் நாம் இருந்ததை விட இப்போதைய குழந்தைகள் இன்னமும் கொஞ்சம் புத்திசாலிகள். நமக்கெல்லாம் அம்மா வீட்டிலேயே இருந்து கவனித்தார்கள். பள்ளியிலிருந்து வரும்போதே தோசையோ, இட்லியோ, அடையோ, சேவையோ கிடைக்கும். இப்போதைய அம்மாக்கள் வேலைக்கும் போய்க் கொண்டு குடும்பத்தையும் பார்த்துக்கொள்வதால் கொஞ்சம் சிரமம் தான். நம்மைப் போல் பாட்டிகள் இருந்தால் கதை சொல்லித் தேற்றலாம். நல்ல புத்திமதி. எனக்கும் தேவை தான்! கோபத்தை அடக்க! :))))

KILLERGEE Devakottai said...

நல்லதொரு பாடம் அம்மா.

திண்டுக்கல் தனபாலன் said...

விவரமான சின்னவன்...

கோமதி அரசு said...

சினத்தை அடக்க கற்றுக் கொண்டால் அனைத்தும் நலம்.
அருமையான புராண கதையோடு குழந்தைகளுக்கு பாடம்

நல்ல கதை பகிர்வு.

அழகாய் கேள்வி கேட்டு குழந்தைகள் கதை கேட்பது மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், கோபம் வராத மனிதர்கள் யார்..
வந்த பிறகு அதற்குப் பலன் இருந்தால் பரவாயில்லை.
கோபம் வந்து அதற்குப் பலனும் இல்லை
என்றால் வருத்தமே மிஞ்சுகிறது.
இருந்தாலும் ரௌத்திரம் பழகுன்னு நம்ம மீசைக்காரர் சொல்லி இருக்கார்.
குடும்பத்தில் காண்பிக்க முடியாதுதான்.
வேலை செய்யும் இடத்திலும் முடியாது.
ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக் கொண்டு அடங்கி விட வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
சினம் கொள்ளாமல் யாருடைய காலம் செல்லும். ?
இந்தப் பதிவை எழுத வைத்ததே
ஒரு மனத்தாங்கல் தான்.
அதுவும் இப்போது இந்த உலகத்தில் இல்லாத ஒரு நபர் மீது:)

ஆனால் ஒன்று பார்த்தீர்களா. யார் கோபமும் யாரையும்
பாதிப்பதில்லை.
நம் வயிறு கெடுவதே தான் பயன்.
இன்னும் எத்தனை காலமோ.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, சினம் கொள்ள வேண்டிய இடத்தில் கொள்ளாமல் இருப்பதும் தவறுதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். ரொம்ப சுட்டி இந்தச் சின்னவன். படு நேர்மை.
கேள்வி எல்லாம் நறுக்கென்று கேட்பான்.:)
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
அவர்களைத் தொலைக்காட்சி, மற்றும், கைபேசியில் இருந்து பிரிக்கவே கதைகள் பயன்படுகின்றன. நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாமல்
சுவையாகவும் சொல்ல வேண்டும். இளம் மனதில் பதிய வேண்டும்.
பிறகு இறைவன் அருள்.
உங்கள் பேரன் அழகாகக் கேட்டுக் கொள்வான் என்று தோன்றுகிறது.
எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் அம்மா. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல சிந்தனைகளை சிறு வயதிலேயே கற்றுக் கொள்வது சிறப்பு.

கோபம் தான் பலருக்கும் எதிரிகளை உருவாக்குகிறது. சினம் கொள்ளாமல் இருக்கப் பழகிக் கொள்வது நல்லது.

தொடரட்டும் நல்ல சிந்தனைகள்.

தொடர்கிறேன்.

மாதேவி said...

உங்கள் பேரப்பிள்ளைகள் நல்ல அறிவான சுட்டிகள்.