எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
மார்கழிப்பாவை 26 ஆம் பாசுரம் மாலே மணிவண்ணா !
நம் கோதையோடு 27 ஆம் நாளுக்கும் வந்து விட்டோம்.
கண்ணனைக் கண்டதும் போற்றிப் பாடி விட்டாள் .
இருந்தும் அவள் தாகம் தீர வில்லை.
மீண்டும் அவனை ஆராதித்துப் பாடுகிறாள்.
திருமாலே நீல மணியின் வண்ணம் கொண்டவனே!
மார்கழி நீராடுவதற்காக எங்களுக்குச்சில நற்பொருட்கள்
உன்னிடமிருந்து பெற வேண்டும்.
எங்களுக்கு முன் ஆயர்பாடியில் கோபிகைகள்
மேற்கொண்ட கார்த்தியாயினி விரதம் போல ,
நாங்கள் விரதம் இருந்து உன்னை வந்து அடைந்திருக்கிறோம்.
இந்த நல்ல தினத்தைக் கொண்டாட வேண்டாமா.
அதற்கு ஒரு கொடி , விதானம் மற்றும் அழகான விளக்கு எல்லாம் வேண்டும்.
ஆளின் இலையில் பிரளய காலத்தில் உறங்குவது போல ஒரு குழந்தையாக இருப்பவனே,
நீ உன் வாயில் பொருத்தி நுழைந்தும் சங்கு போல ஒரு வெண்சங்கும்,
ஒரு சிறு பறையும் சேர்ந்தால் எங்களால் உனக்குப் பல்லாண்டு இசைக்க முடியும்'
மனமுவந்து எங்களை மகிழ்விக்கும் படி
இந்த நற்பொருட்களை த் தந்து அருள்வாய் கண்ணா என்று
பிரார்த்திக்கிறாள்.
இன்றும் போகி அன்று காலை சிறு பறை அடிக்கும் வழக்கம் சென்னையில் பார்த்திருக்கிறேன்.
வாழ்க கோதை நாமம். வாழ்க கண்ணன் நாமம்.
3 comments:
நன்று அம்மா... திரு ஸ்ரீனிவாச மூர்த்தி நேற்று அப்லோட் செய்திருக்கும் பாலமுரளி 76 ம் வருடத்திய கச்சேரி கேட்டுக் கொண்டிருப்பதால் இந்தக் காணொளியைப் பின்னர்தான் கேட்கவேண்டும். பாலமுரளியை நிறுத்தவே மனம் வரவில்லை. உ...ருக்.....குகிறார்...
இனிய காலை வணக்கம் ஶ்ரீராம். பதிவே காணவில்லை . பாட்டு எங்கள் வேணுமானாலும் கேட்கலாம் பா. நன்றி.
இன்றைக்கு பாடலாகக் கேட்க மட்டும்! கேட்டு ரசித்தேன் மா...
Post a Comment