Blog Archive

Friday, January 10, 2020

மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய்.

வல்லிசிம்ஹன்

எல்லோரும் இனிதாக வாழவேண்டும் 


மார்கழித் திருப்பாவை 25 ஒருத்தி மகனாய்.

ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்  திருவடிகளே சரணம்.

Image result for THIRUPPAVAI IMAGES

Image result for THIRUPPAVAI IMAGES


Image result for SRI KRISHNA LEELA IMAGES

ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓரிரவில் 
ஒருத்தி மகனாய் ஒளித்து  வளர
தருகிலனாகித் தான் தீங்கு நினைத்தக் 
கருத்தைப் பிழைப்பித்துக்  கஞ்சன் வயிற்றினில் 
நெருப்பென நின்ற  நெடுமாலே  உன்னை 
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்,
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி 
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
 கோதை  பிறந்து  கலக்கம் தீர்த்தாள். வாழியே!!!!!


ஆண்டாள் கண்ணனைப் போற்றிப் பாடிக்கொண்டிருக்கிறாள்.

அதில் அடுத்ததாக வருவது அவனது குலச்  சரித்திரம்.
விருஷ்ணி  வம்ச அரசன் வசுதேவருக்கும்  அவரது மனைவி தேவகிக்கும் எட்டாவது மகனாகப் பிறக்கும் கண்ணன்,
தன்னை அழிக்கப் பிறந்தவன் என்று அறிகிறான் 
தாய் மாமான் கம்சன்,
அவன் கைகளிலிருந்து தப்பிக்க வசுதேவர் விஷ்ணு அவதாரமாகப் பிறந்து கண்ணனைத் தன் 
 சகோதரனான  நந்தகோபனின் ஆயர்பாடியில்  விட்டு விடுகிறார்.
ஒளித்து வளர்கிறான் கண்ணன். 
அவனைத்தாக்க வரும் கம்சனின் 
அசுரர்கள் அனைவரையும் 
சிறு குழந்தையாக இருக்கும் போதே   அழித்து விடுகிறார் கிருஷ்ண பரம்பொருள்.

தருக்கிலானாகிதான்  நினைத்தக்  கருத்தைப் 
பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பென நின்றான்--------
கண்ணனைக் கொல்ல  வேண்டும் என்னும் பகைத்தீ 
கம்சன் நெஞ்சில்  எரிந்து கொண்டிருக்க  
அவன் அழைப்பின் பேரில் மாமனைக் காண வந்த 
கண்ணன் அவன் வயிற்றினில்  ஏறி நின்று அவனை மாய்த்து 
மோக்ஷம் அளித்தார்.
அப்படி நின்ற பெருமானே உன்னை 
மோக்ஷப் பொருளாக வரித்து அணுகி இருக்கிறோம் 

எங்களை மதித்து  எங்கள் நோன்பை  மதித்து 
எங்கள்  வருத்தம் தீர்ந்து மகிழுமாறு  செய்வாய் கண்ணா என்று வேண்டுகிறாள்.

விஷ்ணுசித்தரின் மக்களும் ஸ்ரீரங்கராஜனின் பிரிய மனைவியுமான கோதை நாச்சியாருக்கு  நம் வணக்கங்கள்.






11 comments:

Geetha Sambasivam said...

நந்தகோபன் வசுதேவரின் சகோதரனா? இது எனக்குப் புதிய செய்தி! அருமையான விளக்கத்துடன் கூடிய பகிர்வுக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

// ஒழித்து வளர்கிறான் கண்ணன். //

ஒளிந்து வளர்கிறான் கண்ணன் என்று வரவேண்டுமோ அம்மா?    அல்லது மறைவில் வளர்கிறான் என்று சொல்லலாமோ!

படித்தேன், ரசித்தேன்.

கோமதி அரசு said...

இன்று பாடல் பகிர்வு காணொளி இல்லையா?
பாடலும் விளக்கம் படித்தேன்.
படங்கள் அழகு.

கோமதி அரசு said...

கோதை நாச்சியாருக்கு நம் வணக்கங்கள்.

ஜீவி said...

இந்தத் திருப்பாவை பாடலின் முதல் வரிச் சாயல் தான் கண்ணதாசனின் 'ஒருத்தி மகனாய் பிறந்தவனாம், உருவில் அழகாய் வளர்ந்தவனாம்' திரைப்பாடல். படம்: தாய் சொல்லைத் தட்டாதே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
ப்லாகர் மறுத்து விட்டது மா.
அதற்கு எழுத்தை ஏற்கும் அளவு வீடியோக்களை ப்பதிய மனமில்லை.'
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஜீவி சார். அந்தப் படம் வந்த போதே என் தோழி அதற்கு ஆடுவாள்.
கண்ணனும் எம்ஜிஆரும் ஒண்ணாப்பான்னு தீவிர வைஷ்ணவப் பெண் ஜானு கேட்பாள்.
எல்லாம் ஜாலிதான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா, எனக்கே புது சேதி இது.
வ்ரிக்ஷ்ணி வம்சம் என்று விவரித்துச் சொன்னார்.
உபன்யாசகர் கல்யாண்புரம் ஆராவமுதாச்சாரியார்.
ஒரு பழைய வீடியோ.அப்போ ,யசோதா,
தேவகி எல்லாம் ஓர்ப்படிகள் ஆகிறார்கள்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் , பிழையம்மா திருத்தி விட்டேன்.
நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான விளக்கம்.

தொடர்கிறேன் மா...

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு வெங்கட். சனிக்கிழமையும் ஞாயிறும் குழந்தைகளோடூ வேகமாகப் போகையில் இணையம் வருவது தடைப்படுகிறது.
இதோ அவர்களுக்கும் வேலை எனக்கும் என் வேலை. நன்றிம்மா.