Blog Archive

Tuesday, October 05, 2021

விக்டோரியா ரீஜியா.

வல்லிசிம்ஹன்

இந்தப் படத்தைப் பார்த்ததும் எந்தப் படப் பாடல் நினைவுக்கு
வருகிறது?

இதுதான்:0) 1962 இல் வந்த வீரத் திருமகன் படம்.

திண்டுக்கல் சக்தி தியேட்டரில்  வெளியடப் பட்ட படம்.

மதியம் மூன்று மணி  ஷோவுக்கு முன்னால்
படப்பாடல்கள்  ஒலி பரப்புவார்கள். அந்த
வருடம் டான்ஸில்ஸ் தொற்றினால் 
அடிக்கடி காய்ச்சல் வரும்.


மாதத்துக்கு இரண்டு மூன்று நாட்களாவது
வீட்டில் இருப்பேன். அந்த ஜுர வேகத்திலும்
இந்தப் பாடல்களும், 'படைத்தானே ஏஏஏஏஏ'' பாடல்
' மாலை சூடும் மண நாள்"  என்று நிச்சய தாம்பூலப்
பாடல்களும் ஒலிக்க , அவைகளைக் கேட்ட படி உறங்கி
விடுவேன்.
இந்தத் தாமரை மலர்கள் அமேஸான் காடுகளில்
மலருமாம்.
பாட்டனி வகுப்பில் அறிந்தது.
மறக்கவே இல்லை.
பின்னாட்களில் தொலைக்காட்சியில் வரும் க்விஸ் 
நிகழ்ச்சியில் கேட்டால் பதில் சொல்லும் கேள்விகளில் 
இதுவும் ஒன்று:)

'உங்க அம்மாவுக்கு சினிமா சம்பந்தமா என்ன கேட்டாலும்
பளீர்னு பதில் சொல்வாள்" என்று மாமியார் சிரிப்பார்.!!!
நமக்கு வேறு ஒன்றும் கற்க நேரம் இல்லையோ
 என்ற குறை தோன்றும் சில சமயம். இப்பொழுதான்
எல்லாம் இணையத்திலேயே கிடைக்கிறதே!!

Nothing Lost!! நிறையப் பெண்களின் கதைகளும் என்னோடு 
ஒத்துப் போகும். 





சாதனையாளர்கள் 
பளிச்சிடுவது சாதாரணப் பெண்கள் மத்தியில் தான்:)


இந்த ஊரில் இன்று ஆசிரியர்கள் தினம்.

என் தோழிகளின் கணவர்கள்  பேராசிரியர்கள்.
என் தோழி ஒருத்தி ஓய்வு பெற்ற பேராசிரியை.

இன்னும் பலவிதங்களில் நம்மை
நல்வழிப்படுத்தும் அத்தனை உயிர்களும் அனைவருமே நம்
குருக்கள் தான். அனைவருக்கும் வந்தனங்களும்
வாழ்த்துகளும்.







15 comments:

Geetha Sambasivam said...

"இயற்கை என்னும் இளைய கன்னி" பாடல் தான் என் நினைவில் வந்தது. அழகான படங்களுடன் அருமையான பதிவுக்கு நன்றி. அங்கேயும் ஆசிரியர் தினம் உண்டா? புதுச் செய்தி!

கோமதி அரசு said...

டான்ஸில்ஸ் தொற்றினால்
அடிக்கடி காய்ச்சல் வரும்.//
எனக்கும் இருந்தது , அடிக்கடி காய்ச்சல் வரும்.
டாக்டர் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றார் அம்மா வேண்டாம் மருந்து , மாத்திரையில் சரி செய்யுங்கள் என்றார். அவர் தொடர்ந்து 30 ஊசிகள் போட்டார். சரியாகி விட்டது.

இந்த பெரிய தாமரை இலைகளை மகன் நியுஜெர்சியில் இருக்கும் போது ஒரு பெரிய பார்க் அழைத்து போன போது பார்த்தேன். பதிவும் போட்டு இருக்கிறேன்.

அந்த பெரிய இலையை பார்த்து வியப்பாய் இருந்தது.

பாடலும் பதிவும் அருமை.
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

//இன்னும் பலவிதங்களில் நம்மை
நல்வழிப்படுத்தும் அத்தனை உயிர்களும் அனைவருமே நம்குருக்கள் தான். அனைவருக்கும் வந்தனங்களும்
வாழ்த்துகளும்.//


நம்மை வழிநடத்திய பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருக்கள், முன்னோர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.
வாழ்த்துக்களை நாளும் சொல்வோம்.





கோமதி அரசு said...

படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

நெல்லைத்தமிழன் said...

முதல் படம், தாய்லாந்து பெண்(?) ஒருத்தியுடன் தாய்லாந்திலோ ஹாங்காங்கிலோ எம்ஜிஆர் பாடும் பாடல் காட்சியை நினைவுபடுத்துகிறது.

வல்லிசிம்ஹன் said...

@ Geetha Sambasivam,

அன்பின் கீதாமா,
அந்த அழகியைப் பார்த்தால் அந்தப் பாட்டுதான்
நினைவுக்கு வருகிறது. ஆனால் சச்ச்வின் கதா நாயகிப்பாடல். ஏ வீ எம்மில்
பெரிய செட் போட்டு,
தாமரை இலைகள் போன்ற வடிவில்

ஆட வைத்தது
அப்போது பெரிய தாகப் பேசப்பட்டது மா.
ஜீனியஸ் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை.
அதனால தான்
இந்தப் பாடலைப் பதிந்தேன்.

மாதேவி said...

எனக்கும் சினிமாபாடல்களுக்கும் வெகுதூரம்.
ஆசிரியர் தின வாழ்த்துகள்.

வல்லிசிம்ஹன் said...

@கோமதி. மா.
""எனக்கும் இருந்தது , அடிக்கடி காய்ச்சல் வரும்.
டாக்டர் ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்றார் அம்மா வேண்டாம் மருந்து , மாத்திரையில் சரி செய்யுங்கள் என்றார். அவர் தொடர்ந்து 30 ஊசிகள் போட்டார். சரியாகி விட்டது.""
எனக்கும் மருந்து கொடுத்துப் பார்த்தார் திண்டுக்கல் டாக்டர்.
அந்த வருஷம் சென்னை வரும்போது,
பாட்டி இந்த அவஸ்தை வேண்டாம் என்று

பூந்தமல்லி ஹைரோடில் மோஹன் ராவ்
க்ளினிக்கில் 2 நாள் தங்கி ஆப்பரேஷன் செய்தாச்சு.

பாட்டுப் பாட முடியாமல் போய் விடுமோ
என்று பாட்டிக்கு பயம்:)

அதுதான் இப்போது கச்சேரிகளில் வெளுத்து வாங்குகிறேன்:)))

வல்லிசிம்ஹன் said...

"நம்மை வழிநடத்திய பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருக்கள், முன்னோர்கள் அனைவருக்கும் வணக்கங்கள்.
வாழ்த்துக்களை நாளும் சொல்வோம்."


அதே தான் மா கோமதி .
வாழ்க வளமுடன். உங்கள் குடும்பமே ஆசிரியர்
குடும்பம்.
எல்லோரும் கடமைப் பட்டிருக்கிறோம். நன்றி மா.
பாடல் உங்களுக்கும் பிடித்தது மகிழ்ச்சி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் முரளிமா,

எம் ஜி ஆர், உலகம் சுற்றும் வாலிபன்
படத்தில் பாடி இருப்பாரோ?
'லில்லி மலருக்குக் கொண்டாட்டம்!!!
மஞ்சுளாவுடன். இதைத்தான் சொல்கிறீர்களா.

நல்ல சாய்ஸ்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் மாதேவி,

உங்களுக்கு சினிமாப் பாடல்கள் பிடிக்காதா!!

ஆமாம், எங்கள் தந்தைக்குக் கூட அவ்வளவாக ரசிக்க முடியாது.

நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

இன்று அந்த திரையரங்கம் இல்லை...

Thulasidharan V Thillaiakathu said...

அந்த
வருடம் டான்ஸில்ஸ் தொற்றினால்
அடிக்கடி காய்ச்சல் வரும்.//

அம்மா எனக்கும் சின்ன வயசில் ரொம்பவே வரும் ஆனால் காய்ச்சல் வராது டான்ஸில் ப்ரச்சனை உண்டு. பாட்டுக்கு வில்லன் அது!!

முதல் படம் பார்த்ததும் ஜாய்ஃபுல் சிங்கப்பூர் கலர்ஃபுல் மலேஷியா பாட்டு நினைவுக்கு வந்தது...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

பாடல் நல்ல பாடல் பிடித்த பாடலும் கூட. இப்படிச் சில பாடல்கள் கேட்கும் போது எனக்கும் என் நினைவுகள் வரும். உங்கள் பழைய நினைவுகள் எல்லாமே சுவாரசியம்.

படங்களும் அழகாக இருக்கின்றன. இலை எவ்வளவு பெரிதாக இருக்கிறது

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறதா! கேட்டு ஆசிரியனான எனக்கு மிகுந்த சந்தோஷம்.

துளசிதரன்

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா அந்த பெரிய இலையில் சாப்பாடு போட்டு இன்னொரு இலையில் உட்கார்ந்து சாப்பிட்டால் எப்படி இருக்கும்னு!! ஹாஹாஹா

என்ன அழகாக இருக்கு இயற்கையில் பிரம்மாண்டம்!

கீதா