வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்
திருப்பாவை பாசுரம் 24 அன்றிவ்வுலகம் அளந்தாய்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஸ்ரீ கோதை நாச்சியார் திருவடிகளே சரணம்.
அன்றிவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி
சென்றங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்றென்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான்
இன்று யாம்வந்தோம் இறங்கேலோ ரெம்பாவாய்.

குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி

என்றென்றும் உன் சேவகமே ஏற்றிப் பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் இறங்கேலோர் . பரிபூரண சரணாகதிப் பாடல். யாதவ சிம்மத்தின் நடை அழகைக் கண்டு அவன் சீரிய சிங்காதனத்தில் அமர்ந்ததும் , அவனின் ஆற்றல்களைப் புகழ்ந்து போற்ற ஆரம்பிக்கிறாள். வாமனனாய் வந்து, த்ரிவிக்கிரமனாய் வளர்ந்து அனைத்துலகத்தையும் அளந்து விட்டாய் உன் பாதங்கள் போற்றி .
உலகைக் காக்க இலங்கைக்கு நடந்தே சென்றாய் ராவணனை வென்றாய் எல்லாம் உன் திறல் அல்லவா போற்றி போற்றி.
சகடமாய் வந்த அசுரனை உதைத்தே கொன்றாய் உன்
கழல் போற்றி.போற்றி போற்றி !
குன்றைக் குடையாய் பிடித்து மக்களைக் காத்தாய்
கண்ணா உன் குணம் போற்றி போற்றி போற்றி போற்றி.
உன் பகைவர்களை வென்று அவர்களுக்கு மோக்ஷ வழி காட்டுகிறாய்.
சிசுபாலன், கம்சன் , ஜராசந்தன் எல்லோருக்கும்
வைகுந்தத்திற்கே வழி காட்டினாய் அல்லவா
உன் நாமம் போற்றி போற்றி,போற்றி ,போற்றி,போற்றி.
உனக்குச் சேவகம் செய்து உன்னை வழிபட வந்திருக்கிறோம் கேசவா
எங்களை ஏற்றுக் கொண்டு
எங்களைக் காப்பாய்.
இந்தப் பாசுரத்தைத் தினமுமே சொல்லி அவனைப் போற்றிக் கொண்டே இருக்கலாம் . கண்ணன் கோதை திருவடிகள் சரணம்,

10 comments:
எளிமை, இனிமை, அருமை!
வரிகளுக்குத் தகுந்த படங்கள் எடுத்துப் போட்டிருப்பது சிறப்பு. படித்தேன், கேட்டேன், ரசித்தேன்!
உன் நாமம் போற்றி போற்றி,போற்றி ,போற்றி,போற்றி...
மிக நன்றி அன்பு கீதா மா.
நன்றி மா அன்பு ஶ்ரீராம்.படங்களுடன் பகிரந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது மா.
ஆமாம் அனும்மா. வணங்கி நலம் பெறுவோம்.
படங்கள் சில வரவில்லை. பகிர்ந்த படங்கள் அழகு.பாடல் கேட்டேன்.
அன்பு கோமதி மா. ஒரு சில படங்களுக்கு மேல் ஏற்க
மறுக்கிறது ப்ளாகர்..இதை எப்படி சீர் செய்வது என்று தெரியவில்லை.
கவனித்துச் சொன்னதற்கு மிக நன்றி மா.
இனிமையான பாடல் - கேட்டு/படித்து ரசித்தேன் வல்லிம்மா...
பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நன்றி மா. வெங்கட். உங்கள் வேலைகளுக்கு நடுவில் இங்கே வந்து படிப்பதே
எனக்கு மகிழ்ச்சி.
Post a Comment