Blog Archive

Monday, January 13, 2020

மன நிம்மதி உன் கையில் 2

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக வாழ வேண்டும் 

முதியோர் ஆவதற்கு முன் கற்க வேண்டியவை  மற்றவர்க்கு அறிவுரை சொல்வதை நிறுத்துவது.
இயன்ற உதவிகள்  செய்வது 
பழமை பேசாமல் புலம்பாமல்  அமைதி கொள்வது.
இறை தியானம் இடைவிடாமல்  மேற்கொள்வது.
இது எனக்கு நான் சொல்லிக் கொள்வது:)

மன நிம்மதி  உன் கையில்  2
++++++++++++++++++++++++++++++



அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கமா நகருளானே
என்றபடி  தொலைக்காட்சியின்  காலை நேரக்காட்சி முடிந்தது.

அலுவலகத்துக்குச் சாப்பாடை எடுத்து வைக்கும் 
அன்னையைக் கண்ட   சந்தர் ,
//அம்மா நாம் எல்லோரும் ஒரு வெள்ளிக்கிழமை 
ஸ்ரீரங்கம் போய் வரலாமா. ஒரு நாள் போதும். இரவு வண்டியில் போய் அடுத்த நாள் இரவு வந்து விடலாம்.//
என்று கேட்டான். என் வனிதாவுக்குப் பெற்றோரைப் பார்க்கணுமா 
என்று மறு  கேள்வி  கேட்டாள்  பர்வதம்.

சலிப்பின் உச்சியை எட்டினான்  சந்தர்.
நான் கிளம்புகிறேன். நேரம் ஆகிவிட்டது.
வனி ,
காய்கறி வாங்கனுன்னு சொன்னியே  உன்னைக் கடையில் இறக்கிவிட்டுப் போகிறேன்  என்று இரைந்து 
சொல்லிவிட்டு  வாயில் கதவைத் திறந்து 
வெளியே சென்று விட்டான்.
 அவசரமாக வெளியே வந்த வனிதா, சாப்பாட்டுப்பையை எடுத்துக்கொண்டு ,அத்தை நான் போய் வருகிறேன்.
என்றபடி வெளியேறினாள்.

"அவ்வளவுதான் மரியாதை. அப்பனுக்கு மேல கோபம் வரதே .
ஏன்  அத்தனை தாழ்ந்து விட்டேனா நான்.
இவன் அழைத்ததும் ஸ்ரீரங்கம் வரணுமா 
எனக்குத் தோன்றினால்  நான் கேட்கிறேன்.
சுகந்தி வரட்டும் ,யார் பக்கம் நியாயம் "என்று சொல்லியபடி,
தொலைபேசியைக் கையில் எடுத்தாள் .
  மணியோசை கேட்டுப்  பதில்  சொன்னது சுகந்தியின் மாமியார்.
சம்பந்திக்குமா எப்படி இருக்கீங்க, இங்கே தான் வாங்களேன் என்று 
உற்சாகமாகக்  கேட்ட சம்பந்தி அம்மாளிடம், அதற்கென்ன வரலாம் 
சுகந்தி இருக்காளா  என்றாள்  பர்வதம்.
பேரனைப் பள்ளியில் கொண்டு விடப்  போயிருக்கிறாள்.
அப்படியே  காய்கறி,மற்ற வேலைகளை முடித்து வருவாள் என்றாள் 
அந்த அம்மா .

என்னிடம்   தொலைபேசச்  சொல்லுங்கள் அம்மா. 

போனை வைத்து விடுகிறேன். வேலை இருக்கிறது. வைத்து விடுகிறேன் 
என்று  சுருக்கமாகப் பேசி வைத்தவள்,
 அழைப்பு மணி கேட்டு  வாயில் கதவு பக்கம் போய் யாரென்று 
பார்த்தாள்.
பக்கத்து வீட்டு அம்மா பிரேமா.

Image result for mom and son

மனதில் அலுப்பு சேர கதவைத் திறந்தாள்.
பிரேமாவின் மருமகளும் வனிதாவும் அலுவலகத்தோழிகள்.

பிரேமாவுக்கு மருமகளை பற்றிச் சொல்ல  எப்போதும் மூட்டை கட்டிக்க கொண்டு வருவாள் .
பர்வதத்துக்கு வம்பு  பேசப்பிடிக்காது.
அதுவும் மருமகளை வீட்டுக் கொடுத்து ஒன்றும் சொல்ல மாட்டாள்.
நம் வீடு நம்முடன் என்று கொள்கை.

கதவைத்திருந்ததும் பொல  பொல வென்று 
கொட்ட  ஆரம்பித்தாள் . 
 ஏன்மா நீங்களே அத்தனை வேலையும் செய்தால் ,வாணி 
என்னதான் செய்வாள். இப்படி உடம்பைக் கெடுத்துக்கிறிங்களே.

//நீங்க உள்ள வந்து கதவைச் சாத்துங்க ஊ ர் இருக்கும் நிலையில் 
எவனாவது உள்ள வந்து உங்க செயின் எல்லாம் அறுத்துடப் போறான்.//

பர்வதத்தின்   கறார் பேச்சைக் கண்டு கொள்ளவில்லை அந்த அம்மா.
 தன்  இஷ்டம் போல் மருமகள் மேல் புகார் சொல்ல ஆரம்பித்தாள்.

எங்கே போறேன்னு சொல்றதில்லை ,எப்ப வரேன்னு சொல்றதில்லை.
பேரனை என்னிடம்  அண்ட  விடறதில்லை .

மகனானா  சரியான தலையாட்டி பொம்மையா இருக்கான்.
நான் சொன்னாலும் ஆமாம் சாமி. அவ சொன்னாலும் ஆமாம் சாமி.

என்று அவள் முடிக்கக்  காத்திருந்த  பர்வதம் 
ஏன்  எதையாவது எதிர்பார்க்கறீங்க, உங்க வீட்டுக்காரரை அழைச்சுக்கிட்டு கோயில் சினிமான்னு போங்களேன்.

இடமா இல்லை இந்த ஊர்ல.
யாரை நம்பி யார்.  மலை போல  எங்க வீட்டுக்காரையே விட்டு நான் இப்ப தைரியமா இல்லையா.

எனக்கு யார் தயவும் வேணாம்.
இந்தாங்க நல்ல வெந்நீர் குடிங்க. நிம்மதியாப்போங்க 
எனக்கு வேலை இருக்கு என்று 
எழுந்தாள்.

ஆனாலும் இந்தக் கர்வம் ஆகாது என்று மனதுக்குள் முணு முணுத்தபடி 
அவள் படி இறங்கிப் போனாள் .

உள்ளே வந்த வனிதாவுக்கு  கொஞ்சம் பயமாக இருந்தது.
புதிதா ஏதாவது பிரச்சினை  வருமோ என்று.

நம் பர்வதம் தான் பேசுவதில்லை என்று சங்கல்பம் கொண்டிருக்கிறாளே !
தன்  அறைக்குச் சென்று விட்டாள் .
பெருமூச்சு விட்டபடி வீட்டைச் சுத்தம் செய்யும் பணியில் ஆழ்ந்தாள் வனிதா,.
சமையலறையைச்  சுத்தம் செய்யவும்,சாப்பிடும் நேரம் வரவும் சரியாக இருந்தது.

தயக்கத்துடன் அறைக்கதவைத் தட்டினாள் ,
அத்தை சாப்பிடலாமா என்று கேட்டதும்,

கதவைத் திறந்து வெளியே வந்தவள் சாப்பிட்டு மீண்டும் தன அறைக்குச் சென்றால் மகளின் அழைப்பை எதிர்பார்த்து.

வனிதாவும் ஓய்வெடுக்கத் தன்  அறைக்குப் போனாள் .
பர்வதம் எதிர்பார்த்தபடி சுகந்தி வரவும் இல்லை.
தொலைபேசவும் இல்லை. அக்காவுக்கு ,
காலையிலியே  சந்தர் பேசி இருந்தான்.

அம்மாவின் போக்கை மாற்றணும் . நிம்மதியே இல்லக்கா.
அப்பா  ஏன்  தான்   மறைந்தாரோ என்று அழாத குறையாகச் சொல்லும் தம்பியின் நிலையை எண்ணி வருந்தினாள்.

தம்பி இருடா. நல்ல யோசனை செய்து ஒன்னு செய்யறேன். நீ கவலைப் படாதே என்று சமாதானப் படுத்தினாள் . மீண்டும் பார்க்கலாம்.



















14 comments:

கோமதி அரசு said...

//முதியோர் ஆவதற்கு முன் கற்க வேண்டியவை மற்றவர்க்கு அறிவுரை சொல்வதை நிறுத்துவது.
இயன்ற உதவிகள் செய்வது
பழமை பேசாமல் புலம்பாமல் அமைதி கொள்வது.
இறை தியானம் இடைவிடாமல் மேற்கொள்வது.
இது எனக்கு நான் சொல்லிக் கொள்வது:)//

உண்மை அக்கா, நீங்கள் சொல்வது அதுதான் வயதான நாம் கடைப்பிடிக்க வேண்டியது.கடைபிடித்தால் அமைதி நிச்சயம்.

கோமதி அரசு said...

அக்காவும், தம்பியும் ஆலோசனை செய்து அம்மாவின் மனநிலையை மாற்றி சகஜ பாவத்திற்கு கொண்டு வர வேண்டும்.

இப்படி நல்ல மகன், மருமகள் இருந்தும் பர்வதம் வீணாக வருத்தப்படுத்திக் கொண்டு மற்ற்வர்களையும் வருத்தப்பட வைப்பது படிக்க கஷ்டமாய் தான் இருக்கிறது.

ஸ்ரீராம். said...

அக்கா சுகந்தி மூலம் எடுகோ வழி பிறக்கும் போல...  தொடர்கிறேன் அம்மா.

ஸ்ரீராம். said...

பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வீட்டுக் கொடுக்காமல் பேசும் அந்த நல்ல குணம் மற்ற விஷயங்களிலும் இருந்தால் நன்றாயிருக்குமே...

Geetha Sambasivam said...

புரிதலுடன் கூடிய சகோதரி இருக்கையில் எல்லாம் நன்றாகவே நடக்கும். பிரார்த்திப்போம். வயதானவர்கள் அதிலும் பெண், பிள்ளையுடன் இருப்பவர்கள் கூடியவரை பேச்சைக் குறைத்துக் கொண்டாலே போதும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பட்டுத் தெரிந்து கொள்கிறோம் இல்லையா மா.

வாழ்க்கை நமக்கு நிறைய கற்றுக் கொடுக்கிறது. அமைதி இன்னும் கற்றுக் கொடுக்கும்.
நல்ல மகனிடம் விரோதம் பாராட்ட வேண்டிய அவசியமே இல்லைதான் அக்கா தம்பி திட்டம் பலிக்கிறதா பார்க்கலாம். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,
ஆமாம் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டாள். ஏதோ ஒரு ஏக்கம் அவள் மனதில் ஏறி விட்டது. அதை எடுக்க அக்கா தம்பியின் முயற்சி பலிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா. அநாவசியப் பேச்சு வேண்டாம். அவசியத்துக்கு ஒரு ஆதரவாக மருமகளிடம் பேசலாம் விரிசல் அதிகம் ஆனால் நஷ்டம் குடும்பத்துக்கு தானே. சரி செய்து விடலாம்.:).

வெங்கட் நாகராஜ் said...

அக்காவும் தம்பியும் பேசி நல்லதொரு முடிவை எடுப்பார்கள் என நாங்களும் காத்திருக்கிறோம்.

அடுத்த வீட்டுப் பெண்மணி - இப்படியும் நிறைய பேர்...

ஜீவி said...

உங்கள் எழுத்து வாகே அலாதி தான்.

உதாரணம்:

1. அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கமா நகருளானே
என்றபடி தொலைக்காட்சியின் காலை நேரக்காட்சி முடிந்தது.

2.. மகனானா சரியான தலையாட்டி பொம்மையா இருக்கான். நான் சொன்னாலும் ஆமாம் சாமி. அவ சொன்னாலும் ஆமாம் சாமி.

குறிப்பு வைத்துக் கொண்டு அல்லது எழுதி வைத்துக் கொண்டு கணினியில் தட்டச்சு செய்து விடுவீர்களா? இல்லை, எந்த
குறிப்பும் இல்லாமல் நேரடியாகவே மனம் சொல்ல கை தட்டச்சு செய்ய அப்புறம் திருத்திக் கொள்ள அல்லது விட்டதை சேர்த்துக் கொள்கிற -- என்கிற வழக்கமா?

ஒரு பகுதியை முடிக்க கணினி முன்
உட்கார்ந்தா ஒரேயடியாகவா இல்லை அப்பப்போ கொஞ்சம் கொஞ்சமா அந்தப் பகுதி வளருமா?

ஹிஹி.. ஆற்றோட்டம் மாதிரி எழுத்து போகிறதேன்னு ஏதோ கேக்க தோணித்து. அதான்.

அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்..

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
சில சமயங்களில் மனம் பேதலிக்கிறது. அது மற்றவருக்கும் காயப்படுத்தும் என்ற யோசனை வந்து விட்டால்
நன்மை தான்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் ரொம்ப ரொம்ப சந்தோஷம் யார் சொல்லுவா இப்படி! திட்டம் எல்லாம் இல்லை.
அதனால் தான் கட்டுப்பாடில்லாமல் அத்யாயங்கள் நீளும்..எனக்கு இந்தக் கதை பாத்திரங்களுடன்
உறவாடி எழுதப் பிடிக்கும். அதனால் அதன் அப்படித் தோன்றுகிறது ஜீவி சார்.

சில வீடுகள் சில நிகழ்ச்சிகள் சுவாரஸ்யங்கள்.நல்ல வேளை இதில் வருபவர்கள்
என் வலைப் பதிவு பக்கம் வரமாட்டார்கள். கதாநாயகி இப்போது இல்லை.
நீங்கள்எ ல்லாம் கட்டுக் கோப்பாக எழுதுபவர்கள். நன்றி ஜி. உங்களுக்கும் குடும்பத்தாருக்கும்
நற் பொங்கல் வாழ்ததுகள்.

வல்லிசிம்ஹன் said...

மீண்டும் மிக நன்றி ஜீவி. நல்ல மனம் உங்களுக்கு. ஹாப்பி போகி!

மாதேவி said...

முதியோராவதற்கு முன் கற்கவேண்டியவை நல்ல செய்தி.
பர்வதம் என்னசெய்கிறார் பார்ப்போம்.