Blog Archive

Monday, January 13, 2020

கறவைகள் பின் சென்று கானம்.மார்கழி 28 ஆம் நாள்

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
ஸ்ரீ ஆண்டாள் கண்ணன் திருவடிகள் சரணம்.


 28 ஆவது நாள் பாசுரம்
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்.
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்துந்தன்னை
பிறவிப் பெருந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறையொன்றும் இல்லாத கோவிந்தா உந்த
ன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளொம் அன்பினால் உன் தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்//
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கோதையின் இடைச்சி அவதாரம் இன்று கண்ணனுடன்
உணவருந்துவதில் பேரானந்தமாக நிறைவேறுகிறது.
கண்ணா, நாங்களும் உன்னுடன் கறவைகள் மேய்க்க வருகிறொம்
கோதுளி எங்கள் பாவங்களை விலக்கும்.
உன் நாமம் நாங்கள் எப்படிச் சொன்னாலும் எங்களைக் காக்கும்.
எங்கள்
வலது இடது தெரியாத ஆய்ச்சியர் நாங்கள்.
உன்னைப் போற்றிப் பாடும்போது கூட பிழைகள்
எழ வாய்ப்புண்டு. ஆனால் உனக்கு அது ஒரு பொருட்டல்ல.
கருணை வள்ளலான கோவிந்தன் நீ
எங்களுக்குக் கொடுக்கும் பரிசு இந்தக் கலந்த உணவை
எங்களுடன் உண்ணுவதுதான். எங்களுக்கான பறை.
Image result for KaravaikaL pin senru  song images

கானகம் சேர்ந்து உண்போம்  கண்ணனுடன் 
Image result for KaravaikaL pin senru  song images

கோவிந்தன்,கோதை பாதங்களில் சரணம் புகுவோம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
கொசுறு செய்தி,பாட்டி செய்யும் ,பெருமாளுக்குக் கண்டருள
வைக்கும் தயிரன்னம் ,அவரது பெரியவர்களிடம் கற்றது.
குழைய வடித்த அன்னத்தில் , அன்று கறந்து அன்று காய்ச்சிய
பாலைக் கலந்து,துளி உப்பைப் போட்டு வைப்பார்.
கூடவே கொஞ்சம் வெண்ணெய் கலக்கப் படும்.
கொஞ்ச நேரம் கழித்து ஒரு தேக்கரண்டி த்யிர் கலந்து,
கடுகு,பெருங்காயம், கருவேப்பிலை,வெள்ளரித்துண்டுகள்
மாங்காய்த்துண்டுகள் கலந்து பெருமாள் சன்னிதிக்குச் சென்றுவிடும்.
திருப்பாவை முப்பதும்சொல்லி,பல்லாண்டு பாடப்பட்டப் பின்னர்,
ஆராதகர் மணியடித்து நிவேதனம் செய்து மூடிய பின்னர்,
அதிகாலை ஏழுமணிக்குச் சுடச்சுட தயிர் சாதம்
கைக்கு வரும். அந்த அமிர்தம் போல் இதுவரைக்கும் வாய்க்கவில்லை.
அனைவருக்கும் அன்ன  வளம் குன்றாமல்,
அன்பு மணம்  குறையாமல் நிறைவாகவே இருக்க 
கண்ணன் அருள்  புரிவான்.

12 comments:

ஸ்ரீராம். said...

தயிர்சாதக் குறிப்புகளை ருசித்தேன்.  பாடல் விளக்கத்தை ரசித்தேன்.

Geetha Sambasivam said...

பாடல் நீல எழுத்துக்கள் ப்ரவுன் நிற அடிப்படையில் வந்திருக்குப் போல. படிக்க முடியலை. ஆமாம், எங்க வீட்டிலும் இன்று தயிர் சாதம் தான் செய்வார்கள். விளக்கம் நல்லா எழுதி இருக்கீங்க.

துரை செல்வராஜூ said...

அன்ன வளம் குறையாமல்
அன்பு குணம் மாறாமல்
அனைவருக்கும் அரங்கன் திருவருள் புரிவானாக...

Anuprem said...

அனைவருக்கும் அன்ன வளம் குன்றாமல்,
அன்பு மணம் குறையாமல் நிறைவாகவே இருக்க
கண்ணன் அருள் புரிவான்.,,,


நன்றி மா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவன் நாமம் நம்மைக் காக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், மிக நன்றிமா.

கோமதி அரசு said...

//அனைவருக்கும் அன்ன வளம் குன்றாமல்,
அன்பு மணம் குறையாமல் நிறைவாகவே இருக்க
கண்ணன் அருள் புரிவான்.//

வாழ்த்து அருமை அக்கா.
தயிர் சாத பக்குவம் அருமை.
படங்களும், பாடல் விளக்கமும் அருமை.
பாடல் கேட்டு மகிழ்ந்தேன்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் பார்த்தேன் மா கீதா. அழகியில் எழுதி தான் பதிவில் சேர்த்தேன்.. எப்படி மாறியது என்று தெரிய வில்லை. தயிர் சாதம் முன்பே எழுதியது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை அதுவே அனைவரின் பிரார்த்தனையும்.. மக்கள் நலம் பெருகட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனுப்ரேம் நன்றி மா. அதுவே எல்லோருடைய பிரார்த்தனையும். கண்ணன் காப்பான்.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் அன்பு முனைவர் யா. இனிய தைத்தாய் நம் சங்கடங்களைப் போக்குவாள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம்.

ஆஹா... தயிர்சாதம் பற்றி நீங்கள் சொல்லிய விதமே சாப்பிட வேண்டும் எனத் தோன்ற வைக்கிறது.

தொடரட்டும் பதிவுகள்.