Blog Archive

Thursday, January 02, 2020

அம்பரமே தண்ணீரே சோறே அறம் செய்யும்...17 ஆம் பாசுரம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழவேண்டும்.

மார்கழியின் 

17ஆம் பாசுரம்  அம்பரமே தண்ணீரே....

நம் கோதை  அவளது மனத்துக்குப் பிடித்த மணாளனை
அவனது இல்லத்திலேயே தரிசனம் 
செய்ய வந்துவிட்டாள் .

இல்லத்தில்  எல்லோரும் உறங்கி கொண்டு இருக்கின்றனர்.

முதலில் நந்தகோபனை தரிசனம்  செய்கிறாள்.
அவனோ ஊருக்கே  நல்  நீர், உணவும் உடுத்த உடை  எல்லாம் வழங்கும் வள்ளல்.

அவனைப்  பெருமை  கூறி ப் பாடிவிட்டு தாய் யசோதையை 
எழுப்புகிறாள். வருங்கால மாமியார் அல்லவா. இத்தனை பெரிய 

தலைவனின் மனையாட்டி.
பெருந்தனம் கொண்ட எம்பெருமாட்டியே என்று அழைக்கிறாள்.
அம்மா எழுந்திருங்கள்.

அவள் அருகில் உறங்கும்  ஸ்ரீ கண்ணனை 

எழுப்ப அவள் உபயோகிக்கும் இனிமையான சொற்கள் அவனது த்ரிவிக்கிர  அவதாரத்தைபி புகழ்ந்துதான்.
வானத்தையே பிளந்து  ஓங்கி உலகளந்த 
தேவர்களின் தலைவனே நாராயணா உறங்காது எழுந்திருப்பாய்.

செம்பொன்னினால் ஆன  கழல்களை  அணிந்த  மைத்துனர் பலதேவரே 

உங்கள்  இளவலும் நீங்களும்  உறங்காமல் எழுந்து வரவேண்டும் என்று வேண்டுகிறாள்.
ஆண்டாளின்  பக்தி பூர்த்தியாகும் நாள்  வரப்  போகிறது.
பயன் கிடைக்கும் நேரம் அவளுடன்  
நாமும் இருப்போம்.

கண்ணனை  தரிசித்து மகிழ்வோம்.







13 comments:

துரை செல்வராஜூ said...

ஆண்டாள் தன் நல்லாசியால்
அனைவருக்கும் நல் உணவும் நீரும்
உடுக்க உடையும் இருக்க இடமும் சித்திக்கட்டும்..

ஆண்டாள் திருவடிகள் போற்றி...

ஸ்ரீராம். said...

விளக்கங்களை படித்து மகிழ்ந்தேன்.

கோமதி அரசு said...

பாடலை கேட்டு விளக்கத்தை படித்து கண்ணனை தரிசனம் செய்து மகிழ்ந்தேன் பதிவில்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிறப்பு. தொடர்ந்து வாசித்து வருகிறேன்.

மாதேவி said...

கண்ணன் தரிசனம் கிடைகப்பெறுவோம்.

Geetha Sambasivam said...

நல்ல அருமையான விளக்கம். நன்றி.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அன்பு துரை. பாவைப் பாடல்களை எல்லா நாட்களும் வருடம் முழுவதுமெ
ரசிக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.
செய்ய இறையே அருள் புரிய வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,

உங்கள் சார் கூட திருவெம்பாவை உரை எழுதிக் கொடுக்கலாமே.
ஒரு வேண்டுதலாக உங்களிடம் சொல்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா, உங்கள்வேலைகளுக்கு நடுவில்
இங்கும் வந்து கருத்து சொன்னது மிக மகிழ்ச்சி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, கிட்டத்தட்ட இருபது பதிவுகளில் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள்.
உங்கள் அன்பை எப்பட்ப் பாராட்டுவது என்று திகைக்கிறேன்.
உங்கள் பயணம் சுகமாக அமைந்ததா. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
மிக மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விளக்கம். எம்.எல்.வி. அவர்களின் குரலில் பாசுரம் கேட்டு மகிழ்ந்தேன். நன்றிம்மா...