Blog Archive

Friday, January 03, 2020

உந்து மதக் களிற்றன் பாசுரம் மார்கழி 18

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக  வாழ வேண்டும் .

மார்கழி 18 ஆம் நாள் 
உந்துமதக் களிற்றன்  ஓடாத தோள்வலியன் 
நந்தகோபாலன் மருமகளே நப்பின்னாய் 
காந்தம் கமழும் குழலி  கடை திறவாய் 
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்  மாதவிப் 
பந்தல்  மேல் பல்கால் குயிலி னங்கள்  கூவின காண் 
ப ந்தார் விரலி உன் மைத்துனன் பேர்பாட 
செந்தாமரைக்  கையால் சீரார்  வளையொலிப்ப 
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்......

ஆண்டாள் திருவடி  இணையடிகளே  சரணம் 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பெருமாள் கோயிலுக்குப் போனால் நேராக சுவாமி சன்னதிக்கு போகக்கூடாது. தாயாரை முதலில் சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைத்தால் “எதற்கடா அதெல்லாம் என்று மீசையை முறுக்குவார். அதையே, அம்மாவிடம் சொல்லி அப்பாவிடம் கேட்கச்சொன்னால், அதே கோரிக்கை பத்தே நிமிடத்தில் நிறைவேறி விடும். இதுபோல் தான் நாராயணனிடம் ஒரு கோரிக்கை வைத்தால்…அந்த மாயன் அவ்வளவு எளிதில் ஏற்கமாட்டான். அதையே தாயாரிடம் சொல்லி வைத்துவிட்டால் அவனால் தப்பவே முடியாது. நரசிம்மரின் கோபத்தைக் கூட அடக்கியவள் அல்லவா அவள்! அதனால், கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி, கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் பெண்கள்.

lமேற்சொன்னது  நான் இணையத்தில் படித்தது.


உந்து மதக்களிற்றான் பாசுரம் ஸ்ரீ ராமாஜுஜர்,நம் திருப்பாவை 
ஜீயருக்குண்டானது.

ஆண்டாள்  அழைத்தது நப்பின்னையை. மதக்களிறுகளை அடக்குபவன், அழகான  பரந்த தோள் களை 

உடைய நந்தகோபன் திரு மருமகளே , நங்காய்,

கோழிகளும் ,குயிலினங்களும் கூவி அழைக்கும் காலைப்  பொழுது 

விடிந்துவிட்டது.,
கிருஷ்ணனுடன் களி
த்திருக்கும் வேளையில் 
உன் கூந்தல் மணம் , மலர்மணம், துளசி  மணம் 
எல்லாம் கமழ,
உன்  மலர்க்கரத்தில்  வளைகளில்  ஓசை ஒலிக்க ,
அன்புடன்,மகிழ்ச்சியுடன் எங்களை வரவேற்பாய்.
என்பது  பாசுரத்தின்   பொருள்.

திருப்பாவை ஜீயர் என்றழைக்கப் பட்ட ஸ்ரீராமானுஜர் 
பாவைப்பாடல்களை  பாடியபடி உஞ்சவிருத்தி செய்யும் காலத்தில் அவரது ஆசான் பெரிய நம்பியின் வீட்டருகில் வரும்போது, அவர் மகள் அத்துழாய் 
என்னும் சிறுமி 

ஜீயரைக் காணும் ஆர்வத்தில் மல்லிகைப்   பூச்சூடிய கூந்தலும்,
வளையல்களும் கங்காணமும் மோதும் ஓசையுடன், வீட்டுக் கதவைத் திறந்த ஒலி யும் ஒளியும்     காட்சி அவரை மூர்ச்சை அடையச் செய்தது.

அவரின் திருப்பாவையின் லயிப்பில் நப்பின்னையே வந்த நினைப்பில் 
மயங்கி விட்டார்.

இதைப் போன்று  நெகிழ்வு நமக்கு நேருமா தெரியாது. ஆனால் பாசுரங்களை அனுபவிக்கலாம்.

நப்பின்னையையும் ,நம்பியையும், அவர்களை இணைத்துப் 
பார்த்த ஸ்ரீ கோதைநாச்சியாரையும் கொண்டாடுவோம்.
















11 comments:

ஸ்ரீராம். said...

படித்தேன், ரசித்தேன், மகிழ்ந்தேன்.

Geetha Sambasivam said...

ஸ்ரீ ராமாநுஜரின் அனுபவத்தை நானும் எழுதி இருக்கேன். அருமையான பாசுரம். தெளிவான சுருக்கமான விளக்கத்தையும் பாடலின் அழகையும் ஆங்காங்கே உள்ள ஓரிரு எழுத்துப் பிழைகள் கெடுக்கின்றன. முடிந்தால் சரி செய்யுங்கள். இல்லைனா விட்டுடுங்க!நன்றி..

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம்.தவறாமல் வந்து படிக்கிறீர்கள்.

வல்லிசிம்ஹன் said...

நீங்கள் சொன்னது சரியே கீதாமா. வெளியில் கிளம்பும் அவசரத்தில் எடிட் செய்யாமல் பதிவிட்டேன்.
இப்போது திருத்தி விட்டேன்.
இராமானுஜர் இல்லாத திருப்பாவையா.
5 மணியாகிவிட்டது. எழுந்திருக்கத் தாமதம்.
இதோ உங்கள் பதிவைப் படிக்கப் போகிறேன். நன்றி மா.

கோமதி அரசு said...

பாடல் கேட்டு மகிழ்ந்தேன். விளக்கம் படித்தேன் அருமை.

துரை செல்வராஜூ said...

இனிய பாசுரத்துடன் அருமையாக பொழுது புலர்ந்திருக்கிறது..

ஸ்ரீ உடையவர்க்கு நேர்ந்த இறையனுபவத்தை முன்பே வாசித்திருக்கிறேன்...

மீண்டும் வாசித்து மகிழ்ந்தேன்...

அருமை... அருமை...

KILLERGEE Devakottai said...

காணொளி பாடல் கேட்டேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி கோமதி மா. இன்னும் பத்து நாட்களுக்கு இந்த சந்தோஷம் நம்முடன்.அதற்கும் மேலும் சொல்லிப் பழகலாம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை,, ஶ்ரீ பகவத் ராமானுஜர் போன்றவர்கள் தழைக்கச் செய்த பக்தி. மார்கம் நம்மை இன்னும் நம்மை வாழ வைக்கும்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, மிக நன்றி மா.

வெங்கட் நாகராஜ் said...

மிகச் சிறப்பான பாசுரம்.

எம்.எல்.வி. குரலிலும் கேட்டு ரசித்தேன் மா. நன்றி.