Blog Archive

Tuesday, December 03, 2019

திருக்குறுங்குடி பயணம் 7

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழ  வேண்டும் .
திருக்குறுங்குடி  பயணம் 7

மலை மேல் நம்பி யைப்  பார்க்காதது  ஒரு வருத்தம் தான்.


Image result for thirukkurungudi mahendra giri

கண்ணன் அவதார லீலைகள்  மகன் எடுத்த படம்.

அழகிய நம்பி ராயர் தரிசனம்     கோயில்  வாசலிலிருந்து ஆரம்பிக்கிறது.
நம்பாடுவான் என்ற பாணனுக்குத் தரிசனம் தர கொடிமரத்தையே விலக்கி
வைக்கிறார் பெருமாள். அந்தக் காருண்ய மூர்த்தி .

நம்பாடுவான் பாணர் குலத்தைச் சேர்ந்த பக்தன்.
அவன் இசைக்கும் பண்ணிசை ஒவ்வொரு ஏகாதசியும் இறைவனை அணுகும்

மதிலு க்குள் அனுமதிக்கப் படாத நம்பாடுவானுக்குத்
திரு
மாலைக்  காண  ஆசை.

ஏகாதசி, அதுவும் கார்த்திகை வளர்பிறையில் ஏகாதசி நன்னாள் இரவில் பாடியபடி வரும் அவனை அணுகுகிறது
பிரம்மராட்சஸ் ஒன்று.

அது ஒரு பிராமணனாக இருந்து தவறாக வேதம் ஓதியதால் சபிக்கப் பட்டு பிரம்ம ராட்சசன் ஆகிறது.
அதன் பசி அளவிட முடியாதது. உயிர்களைக் கொன்று தின்று
வருகிறது.
அதற்குத் தன்  வினை மறந்த நிலையில் நம்பாடுவானிடம் வந்து
அவனை விழுங்கப் போவதாகச் சொல்லி மிரட்டவும்,
அவனுக்கு பயம் இல்லை பரிதாபம் மேலிடுகிறது.
தன்  நிலையை விளக்கி சத்தியம் செய்கிறான்.
தான் பகவானை தரிசனம் செய்த பிறகு
ராட்சசனுக்கு உணவாவதாக   உறுதி அளித்து கோவிலுக்குச் சென்று கைசிகப் பண்ணை இசைக்கப்  பெருமாள்   மனித வடிவில்
தரிசனம் தந்து நீ வேறு வழியாகப் போ.தப்பி விடு  என்று புத்திமதி சொல்ல ,
நம்பாடுவான் தான் செய்த சத்தியத்தை மீற  வழியில்லை  என்கிறான்

திருமலை நம்பிராயர் தன்னைக் காப்பார் என்று பிரம்மா ராட்சஷ அடைகிறான்.
அவன் பண்ணிசைப் பாடல்களைக் கேட்டு மனம்  உருகிய  ராட்சசன் அவன் பாடல்களின் புண்ணியத்தைத் தனக்குத் தத்தம் செய்தால் தான் மோட்சம் பெறலாம் என்று வேண்ட,கைசிகப் பண்  பாடல்களை நம்பாடுவான் தத்தம் செய்ய
இருவருக்கும் அழகிய  நம்பி பெருமான் காட்சியளித்து வைகுண்டம் அடைய வைக்கிறார்.

இந்தக் கைசிக நாடகம்  உயிர் பெற்று பெரிய அளவில் திருக்குறுங்குடி கோவிலிலும் எளியோர் கூத்தாகவும் நடைபெறும் மாதம் கார்த்திகை.
வரும் 8ஆம் தேதி   கைசிகப் பண்ணையும் நம்பாடுவோனையும் நாம்
நினைப்போம்.

கோயில் வாசலில் உட்கார்ந்திருந்தவர் அந்தப் பிரும்ம ராட்சஸாக உருமாறிய
அந்தணரின் குல

 வாரிசாம்.
அதிசயங்கள்  நடந்து கொண்டுதான் இருக்கின்றன.!!!!!!!!!!!!

அவரைக் கண்டுகொண்டு, வைஷ்ணவ நம்பிராயரைத் தொழ
உள்ளே நுழைந்தோம்.
அழைத்துச் சென்ற திரு ராமானுஜ பட்டர் ,
அழகிய வைஷ்ணவ  நம்பி சந்நிதிக்கு கொஞ்சம் தொலைவிலேயே நிற்கவைத்தார்.

அந்தத் தொலைவிலும் பெருமாளின் நயன அழகுப் பெரிதாக்கத் தெரிந்தது.
உருவமும் உயரம்   கூடித்  தெரிந்தது.நேத்ர தரிசனம் செய்யுங்கோ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

பகவானின் திருமேனி சுதையால்  ஆனது  என்றும்  
 3000
வருடங்கள் பழமை வாய்ந்தது என்றும். சுயம்புவாக உருவானவர் .
வராஹ அவதாரத்திலிருந்து வாமனனாக  (உருவத்தில் குறுகியதாக )மாறிய க்ஷேத்திரம்
என்பதால் குறுங்குடி  என்று  அழைக்கப் படுகிறது .
ஆழ்வார்களில்  தலையாய நம்மாழ்வார், இந்த நம்பிப் பெருமானின் அவதாரம் தான். மாறன் சடகோபன்  என்ற  நாமத்தோடு  பெற்றோருக்கு அரி ய பிள்ளையாய்பி பிறந்து ஆழ்வார் திருநகரியில் புளியமர பொந்தில் வாசம் செய்து  அறிய பிரபந்தப் பாடல்களை  அருளிச் செய்தவர்.




. அவன் அருள்  என்னையும் இங்கே வரவழைத்தது.

தொடர்வோம்.
Image result for NAMMAZHWAR





12 comments:

துரை செல்வராஜூ said...

குறுங்குடிக் கோவே சரணம்..

கோமதி அரசு said...

கண்ணன் அவதார லீலைகள் படம் மிக அருமை.குறுங்குடி கோவில் வரலாறு மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்.

ஸ்ரீராம். said...

பிரம்ம ராட்சசன் குல வாரிசா....   அட...   குறுங்குடி சென்றதில்லை.  ஒருமுறை செல்லவேண்டும்.

கோமதி அரசு said...

கருட சேவை கண்டு மகிழ்ந்தேன். நன்றி காணொளிக்கு.

வல்லிசிம்ஹன் said...

மீண்டும் நன்றி அன்பு கோமதி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம் , பயணம் வாய்க்கும் பாருங்கள். நீங்கள், கீதா மா எல்லோரும் சென்று வாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை வருகைக்கு மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். அதிசயமாக இருந்தது.ஐந்தாம் தலை முறை என்றார்.
எங்கள்தாத்தாவுக்கு இரண்டு தலை முறை முந்தியோ?

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, இன்னும் நிறைய சிற்பங்களை எடுக்கு முடியவில்லைமா. நன்றி.

Geetha Sambasivam said...

கருடசேவைக்காட்சி நன்றாக இருந்தது. பகிர்வுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நான் நேரில் பார்த்ததை விட

வீடியோ காட்சிகள் இன்னும் நன்றாக இருக்கின்றன. நன்றி மா.

மாதேவி said...

குறுங்குடி தரிசனமும் வரலாறும் தெரிந்துகொண்டோம்.