Blog Archive

Thursday, December 19, 2019

இங்கிலிஷ் பாட்டி 4

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழவேண்டும்.


இங்கிலிஷ் பாட்டி  4

ஆனந்திப்பாட்டியின்  அடுத்த அதிர்ச்சி,
30  வயது      சீதாலட்சுமி.
ஆனந்தியின் தோழி செல்லம்மாவின் கடைசிமகள். 
வெறும் சீதா என்று பெயர் வைத்தால் வாழ்வில் அவதியுறுவாளோ 
என்று  பயந்து  சீதாலட்சுமி  என்று பெயர் வைக்கப் பட்ட மங்கை.

ஒரு இளவயதுப் பெண்ணுக்குரிய   லட்சணங்கள் எதுவும் இல்லாமல் சமூக சேவகி போல கரையிட்ட    புடவையுடன் வந்தவள் முகத்தைப் பார்த்து மீண்டும் அதிர்ச்சி என்னாச்சு மா என்றவள் குரல் தழுதழுத்தது.

பர்வதம் தான் விளக்கினா ள்    .வங்கியில் வேலை செய்த சீதாவின் கணவன்  லாரியில் அடிபட்டு  மரணித்ததை.

சட்டென்று எழுந்த ஆனந்தி, இப்படி இருக்கச் சொல்லி வற்புறுத்தினார்களா உன்னை.? என்று வினவினாள்.

இல்லை   மாமி, எனக்கு இப்படி இருப்பது பாதுகாப்பாக 
இருக்கிறது.
நான் அதே வங்கிக்குப் போகிறேன். 
வேலை கொடுத்திருக்கிறார்கள்.     அவரது மனைவி என்று எனக்கு கௌரவம் கொடுத்திருக்கிறார்கள்.

அதை மாற்ற எனக்கு விருப்பம் இல்லை என்று நிதானமாகப் பேசியவளின் கண்களில் 
கலக்கமோ, கண்ணீரோ  தென்படல்லை
"கோரிக்கையற்றுக் கிடைக்கனுதண்ணே.   இங்கு வேரில் 
பழுத்தபலா "பாடல் தான் நினைவுக்கு  வந்தது ஆனந்திக்கு.
ஒரு பெருமூச்சுடன்  மற்றவர்களை நோக்கியவள்,
நானும் இது போல் இருந்திருந்தால் உடனே விசாரிக்க வந்திருப்பீர்கள் 

இல்லையா என்று  கேட்டாள் .
ஆமாம் கண்ணு  முறைப்படி நடந்தால் 
யாருக்கும் பயப்பட வேண்டாம்   இல்லையா. நீ திடீர்னு அந்நியமான மாதிரி    எங்களுக்குத் தோணுகிறது என்றாள்  பாட்டி.

இந்தப் பொண்ணுக்கு  குழந்தை கூட   இல்லை.

இப்படியே இருந்துடப் போறாளோ  என்று கணை தொடுத்தாள் 
ஆனந்தி. நாங்க எல்லாம் இருக்கோம்  அப்புறம் என்ன.
என்றால் பர்வதம்.
எத்தனை நாளைக்கு  எத்தனை வருடங்கள் காப்பீர்கள். அவளுக்கு என்று 
ஒரு துணை வேண்டாமா. வாழ்க்கை வேண்டாமா .

யாருமே யோசிக்கலையா  என்றவளை அதிசயமாகப் பார்த்தார்கள் தோழிகள். நம் வழக்கத்தில் வேற வழி கிடையாதே 
இப்படியே தான் இருக்கணும் 
என்றவர்களைக் கண்டு அவளுக்குத் துக்கம் மேலிட்டது.

இங்கே இவளுக்காவது ஒரு வழி காட்டாமல் கிளம்பக் கூடாது 
என்ற நோக்கத்துடன்,
அவர்கள் எல்லோரையும் பார்த்து என்னால் கோவில் காரியங்கள் கெட வேண்டாம்.
இதோ பாக்கியம் செய்தவளாக நிற்கும் செல்லமே இந்த வேலைகளை செய்யட்டும்.
நான் கோவிலுக்கு பார்வை    இட  மட்டும் வருகிறேன்.
என்று அவர்களுக்கு விடைகொடுத்தாள் .

அடுத்தப்பக்கம் நீளும். ஆனால் முடித்துவிடலாம்.




.



18 comments:

KILLERGEE Devakottai said...

ஒரு நல்ல நிகழ்வு காத்திருக்கிறது ஆவலுடன் நானும்...

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு தேவகோட்டை ஜி. நல்லதே. நடக்கட்டும் இனிய பிறந்த நாள் வாழ்ததுகள்.அமைதியும் ஆரோக்கியமும் கூடி வரட்டும்.

Anuprem said...

பாட்டியின் அன்பு செயலை காண ஆவல் மா...

Geetha Sambasivam said...

இப்போ இரண்டு நாட்கள் முன்னர் தான் எங்கேயோ, எதிலோ படிச்சேன். கணவனை இழந்தவர்களை நடத்தும் விதம் பற்றிய கேள்வியை யாரோ கேட்டிருக்க அதற்கு ஒரு பெரியவர் பதில் சொல்லி இருந்தார். கணவனை இழந்தவர்கள் சந்நியாசினி மாதிரி. ஆண் சந்நியாசிகளை எப்படி மதிப்போமோ அப்படியே அவர்களையும் மதிக்க வேண்டும். அதோடு கோயில் போன்ற பொது இடங்களில் அவங்களுக்கும் பிரசாதமாகக் குங்குமம், பூக்கள், மஞ்சள் போன்றவற்றைக் கொடுப்பதில் தப்பில்லை. அவர்களும் பெற்றுக்கொண்டு வீட்டில் உள்ள மற்றப் பெண்களுக்குக் கொடுக்கலாம். வெற்றிலை, பாக்கும் அவங்களுக்குக் கொடுக்கலாம். என்றெல்லாம் படித்தேன். இரண்டு நாட்களாக அந்தச் சுட்டியைத் தேடியதால் உடனே பதில் கொடுக்க முடியவில்லை. தேடிட்டு இருக்கேன். கிடைச்சதும் தரேன்.

Geetha Sambasivam said...

இந்த விஷயத்தில் நாங்க எங்க வீடுகளில் அனைவருக்கும் ஒரே மாதிரித் தான் வெற்றிலை, பாக்கு, பரிசுப்பொருள் எல்லாமும் கொடுப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு மா. நன்றி. நல்லதே நடக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.,
அப்படி இருந்தால் உண்மையிலியே நன்றாக
இருக்கும்.
நான் சொன்னெனான்னு தெரியலை.
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில்
தாயாரைக் கண்டு கண்ணில் நீர் விழ நின்றபோது,நாங்கள் சமர்ப்பித்த புடவையை
அவளுக்கு சார்த்தி, அவள் கழுத்தி இருந்த மாலையை
எடுத்து, மகனிடம் கொடுத்து என் கழுத்தில் போடச் சொல்லி விட்டார்.
அவன் தயங்க ,அம்மாவுக்குப் போட என்ன தயக்கம்னு சொல்லி இரண்டு கிளிகளையும் கைகளில் கொடுத்து விட்டார்.
நான் தான் கூசிப் போனேன்.
இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா.வெளியே வந்ததும்
பிரமிப்பு அடங்காமலியே பிள்ளைகளிடம் கழற்றிக்
கொடுத்து அங்கேயே உட்கார்ந்துவிட்டேன்.
நல்ல வேளை மற்ற சன்னிதிகளில் ஒன்றும் நடக்கவில்லை.
எதற்கு சொல்கிறேன் என்றால்,
யாராவது இப்படிச் செய்தால் ஏற்றுக் கொள்ளும் மன நிலை கூட இல்லாமல்
ஆகிவிட்டது.இன்னமும் அந்தக் குற்ற உணர்வு போகவில்லை.
எல்லோருமே மாற வேண்டும்.என்னையும் சேர்த்து:)

வல்லிசிம்ஹன் said...

உயர்ந்த அணுகல் முறை கீதாமா.
மிக மிக நன்றி.ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

கோமதி அரசு said...

சீதாலட்சுமிக்கு நல்ல வாழ்க்கை அமையட்டும்.

நானும், எங்கள் குடும்பத்தில் எல்லோரும் எல்லோர்க்கும் வெற்றிலை பாக்கு, மஞ்சள் குங்குமம் கொடுப்போம். சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள் நானு அவர்களை எடுக்க சொல்லி அன்புடன் கேட்டுக் கொள்வேன். எடுத்துக் கொள்வார்கள்.

காலம் மாறுது. கருத்தும் மாற வேண்டும்.

ஸ்ரீராம். said...

எங்கள் வீட்டிலும் எல்லோருக்கும் வெற்றிலை பாக்கு கொடுக்கும் பழக்கம் உண்டு.  இத்தனை நாட்கள் வந்து வாங்கிச் சென்றவர்கள் இப்படி நிகழ்ந்ததும் கொடுக்கா விட்டால் அவர்கள் மனதில் எழும் வேதனையை நினைத்துப் பார்க்க முடியவில்லை.   என் அலுவலகம், வீடு சம்பந்தப்பட்டநிகழ்வு உண்டு.  ஆனால் அங்கு எழுத முடியவில்லை.  காரணம் சம்பந்தப் பட்டவர்களும் படிப்பார்கள் என்கிற தயக்கம்தான்.  நாங்கள் அழைத்தும் அந்தப் பெண் வரவில்லை.

திண்டுக்கல் தனபாலன் said...

காத்திருக்கிறேன்...

டிபிஆர்.ஜோசப் said...

அடுத்தப்பக்கம் நீளும். ஆனால் முடித்துவிடலாம்.//

கதைக்கருவுக்கு எத்தனை நீளம் வேண்டுமோ அது வரை நீங்கள் எழுதலாம் யாருக்காகவும் எதற்காகவும் முடித்துவிட வேண்டாம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா,இதுதான் நற்பண்பு நம்முடையது. இந்தப்பரிவும. கவனமும் எத்தனை உள்ளங்களுக்கு அமுதமாக இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம்,

முதலில் நானும் வருத்தப் பட்டேன். இப்போது பழகி விட்டது. இந்தப் பிரச்சினை இர்ரண்டு பக்கமும்
சங்கடமே.

உங்கள் வருத்தம் புரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நல்லது நடக்கட்டும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு திரு. ஜோஸஃப், உண்மையே. சுருக்கினால் அழகு கெடும்.

எழுத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். உங்கள் கருத்துக்கு மிக நன்றி.
அதே போல் செய்கிறேன்.

மாதேவி said...

இனிதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி மிக மிக நன்றி மா.