வல்லிசிம்ஹன்
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரிப் பெய்து ஓங்கு பெரும்சேந்நெல் ஊடு கயலுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண் பரப்ப தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய். நற்சொற்கள் என்றால் இவை அல்லவா நற்சொற்கள். இரெண்டாவது பாவையில் அல்லாதன வரை விலக்கச் சொன்னவள் இங்கு அஹத் செய்கையால் விளையும் பலனையும் விளக்குகிறாள் . நாடெல்லாம் மும்மாரி பெய்து வயல்களில் வெள்ளம் ஓட அவற்றில் பெரிய பெரிய மீன்கள் நெற்கதிர்களுக்கு நடுவே ஓடி விளையாடுகின்றனவாம். இங்கு சொல்லப்படும் வள்ளல் பெரும்பசுக்கள் ஆச்சாரிய வள்ளல்கள். மடிக்காமபைத் தொடும் முன்னரே நர் பாலைப் பீச்சியடிக்கும் வள்ளல் பசுக்களை போல ஆச்சார்யர்களும் தங்களை அணுகி வரும் பக்தர்களுக்கு அருளுரை வழங்கி கொண்டே இருப்பார்களாம். நாமும் கேட்டு இன்புறுவோம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருவடிகளே சரணம். |
8 comments:
வள்ளல் பெரும்பசுக்களின் விளக்கம் அருமை, புதுசாகவும் இருக்கு!
ஆண்டாள் திருவடியே சரணம்.
அருமை, சிறப்பு.
அன்பு கீதா மா.
ஆழ்வார்களிலேயே, நம் கோதையும், மதுர கவி ஆழ்வாரும் தான் ஆச்சாரியர்களை முதலில் வழிபட்டுப் பின் அவர்கள் வழிகாட்டலில் தெய்வத்தை ஆஸ்ரயிப்பவர்கள்.
குருமுகமாகத் தான் தெய்வத்தை வழிபடல் வேண்டும் என்று ஸ்தாபிக்கிறார்கள்.
அதனாலயே அவர்களை வள்ளல் பெரும்பசுக்கள் என்றே அழைக்கிறாள்.
மதுர கவியும், நம்மாழ்வரை மட்டுமே துதிக்கிறார்,.கண்ணி நுண் சிறுத்தாம்பு
நம்மாழ்வார்க்காகப் பாடியது.
நன்றி மா.
நன்றி அன்பு ஸ்ரீராம்.
அன்பு முனைவர் ஐயா, மிக மிக நன்றி. தங்கள் 300 ஆவது விக்கிபீடியா
பதிவுகளுக்கும் வாழ்த்துகள்.
பாடல் பகிர்வும், ஆண்டாள் ஓவியமும் அருமை.
விளக்கம் அருமை.
Post a Comment