Blog Archive

Tuesday, December 17, 2019

Englishபாட்டி 3

வல்லிசிம்ஹன்


பாட்டி  ஒரு காலத்தில் .
எல்லோரும்  வளமாக  வாழ வேண்டும் .
ஆனந்தி க்குப் புரியாதது அந்தக் கிராமத்துப் பெண்களின் திடீர் மாற்றம்.
ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை வந்தாலும்  அவர்கள் இந்தத் தடவை போல வித்தியாசமாக அவளை

பார்த்ததில்லை.  புதுப்பிக்கப் பட்ட வீட்டில் 
கோவிலு க்கு வேண்டிய     பொருட்களை  எடுத்து வைத்துக் கொண்டு 
மகனிடம்  அலைபேசியில்   பேசி அவன்  குடும்பத்தைப் 
பற்றி விசாரித்த படி தன் 
கவலைகளை பகிர்ந்து கொண்டாள் .
ஏன்பா இப்படி நடந்து கொள் றாங்க ,
கலகலப்பா வந்து போக இருக்கற  அக்கம்பக்கத்தார் நான் வெளிய வந்தாலும்  சரியா முகம் கொடுக்கலையேப்பா.
என்ற அம்மாவை எப்படி சமாதானப் படுத்துவது 
என்று தெரியவில்லை அவனுக்கு.

வாசலில் ஏதோ  நிழலாடியது,தொடர்ந்து  பக்கத்து வீட்டுப் பாட்டி வந்தார்.
என்னம்மா பண்ணிட்டிருக்க. அஞ்சு வருஷமாக காணல.
இப்ப கோவில் வரமிரை எல்லாம் மறக்காம  ஏற்பாடு செய்திட்டு இருக்கியா என்று கெட்டவளைத் தொடர்ந்து பாகீரதி மாமி, பர்வதம் என்று 
அவள் வயதொத்தவர்கள் எல்லாம் வந்தார்கள்.
 அவர்கள் அனைவரையும் பார்த்ததும் அவளுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
எல்லாம் எங்க போயிட்டிய்ங்க ரெண்டு நாளா. 


உனக்கு உண்மையாவே புரியலையா. நாங்க சொல்லித்தான் புரியணுமா 
அந்த ஊர்ல  எப்படி இருந்தாலும் நம்ம கிராமத்துல அப்படி இருக்க முடியுமா 
என்றவர்களைப் புரியாமல்  பார்த்தால்.
அவரு தவறி நாலு வருஷம்  ஆச்சு இன்னும் பழைய மாதிரியே 
இருக்கியே.
இங்க பாரு பர்வதத்தை. உன்னை மாதிரியா இருக்கா. நம்ம ஊரு 
முறையைப் புரிந்துக்கலையா .
சட்டென்று   விழித்துக் கொண்டாள்  ஆனந்தி  என்கிற ஆனந்திப்பாட்டி.
இதுவா விஷயம்.   இந்த பெரிய பொட்டு 
நகை எல்லாம் தப்பாகப் புரிந்து கொண்டார்களா.

எப்படி இவர்களுக்கு  விளக்குவது.
தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று.

மீண்டும் பார்க்கலாம்.





.


15 comments:

துரை செல்வராஜூ said...

பழைய தலைமுறை...
புரிந்து கொள்வது கஷ்டம் தான்...

Geetha Sambasivam said...

எனக்குத் தெரிந்து இந்தக் காலங்களில் கிராமங்களில் கூடப் பார்ப்பதில்லை. இப்போதும் இதெல்லாம் பார்க்கிறவங்க இருப்பது ஆச்சரியமா இருக்கு!

ஸ்ரீராம். said...

ஆஹா...    என்ன வழக்கங்கள்...   
 
தொடர்கிறேன் அம்மா.

டிபிஆர்.ஜோசப் said...

எப்படி இவர்களுக்கு  விளக்குவது.

தனக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இல்லை என்று.
//

மற்றவர்களுக்கு எதற்கு விளக்க வேண்டும்? நம் மனதிற்கு எது சரி என்று தோன்றுகிறதோ அதை நாம் செய்ய வேண்டியது தான் நம்முடைய மகிழ்ச்சி தான் நமக்கு முக்கியம்

கோமதி அரசு said...


காலம் மாறி விட்டதே!

இன்னும் மாறத மக்கள் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மையே அன்பு துரை, இது எங்க ஊரிலேயே நான் கவனித்தேன். அவர்கள் எல்லாம் என் வயதுக்கும் குறைந்தவர்கள. நாம் அவர்களைக் குறையே சொல்ல முடியாது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா, எனக்கே. நம்ப. கடினமாக இருந்தது. நாங்கள் சென்ற வண்டியின் ட்ரைவர் உங்க வீட்டு ஐயா வரலியாமா என்றான். அவர் இப்போ இல்லை அப்பா.என்ற பதிலுக்கு அவன் காட்டிய அதிர்சசி. எனக்கு. அதிசயமாகவே இருந்தது. உங்களைப் பார்ததால் அப்படித் தெரியவயே.என்றதும் நான் எனக்குப் பொட்டெல்லாம் வைக்காமல் இருக்க முடியாதுப்பா என்றேன் பிள்ளைகளும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்றதும் பிறகு அவன் பேசவே இல்லை:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ,இன்னும் தற்குப் பக்கம் இதெல்லாம் பார்ககிறார்கள். ஶ்ரீராம்.

Anuprem said...

சட்டென்று விழித்துக் கொண்டாள் ஆனந்தி என்கிற ஆனந்திப்பாட்டி.....


..இப்ப தான் பாட்டி க்கு புரியுது ...பாவம்

வல்லிசிம்ஹன் said...

அன்பு. திரு ஜோசஃப்,

ஊரோடு ஒட்டி வாழ்வதும் ஒரு கொள்கை. இல்லையா. நமக்கு. வெளிநாடுகளில் இந்த வித்தியாசம்
அவ்வளவாகத் தெரிவதில்லை.

என்னைப் பொறுத்தவரை நானும் சில கட்டுப்பாடுகளைப் பின் பற்றுவேன்.

இதெல்லாம் சட்டென்று கடந்து விட வேண்டும்.நம் மனத்திற்கு எது முறை என்று தோன்றுகிறதோ. அப்படி. நடந்து கொள்ள வேண்டியதுதான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பழமையில் ஊறிய மக்கள் நிறைய நபர்களை நிறைய சந்தித்தேன்.

அவரவர்கள் மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறார்கள். வாழ்ககை எப்படி மாறினாலும் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் இருக்கிறது.

நன்றி மா.

திண்டுக்கல் தனபாலன் said...

மாற்றத்தை விரும்பாதவர்கள்...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு அனு மா.
கொஞ்சம் ஸ்லோ கோச்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன் நன்றி ராஜா. அவர்களுக்கு அதுவே பிடித்திருக்கிறது.
நாம் மாறலாம்.

மாதேவி said...

காலம் மாறிவிட்டதே. ஊரவர்களும் மாறுவார்கள் என நம்புவோம்.