Blog Archive

Wednesday, October 16, 2019

Greta Thunberg

வல்லிசிம்ஹன்

எல்லோரும் வளமாக  வாழ வேண்டும்.


4 comments:

Thulasidharan V Thillaiakathu said...

அம்மா, க்ரேட்டா குழந்தை. இன்னும் பக்குவப்பட வேண்டும். அவள் பேசுவது எல்லாம் பலரது மனதிலும் ஓடிக் கொண்டுஇருப்பது மட்டுமல்ல நிறைய சுற்றுச்சுழல் ஆர்வலர்கள் இதற்கு முன்பும் பேசியும் எழுதியும் சில செயல்களில் இறங்கியும் இருக்கின்றனர்தான். இவள் சிறியவள் பேசுகிறாள், என்பதால் உலகம் திரும்பிப் பார்த்திருக்கறது. அவள் இன்னும் பக்குவப்படாத குழந்தை. பாவம் அவள் நல்லது நினைத்தாலும், அவள் பேசுவது நியாயமாக இருந்தாலும் இப்போது இத்தனை வளர்ச்சி அடைந்த உலகத்தில் அவள் சொல்லும் பல விஷயங்களை நடைமுறையில் கொண்டு வருவது மிகவும் சிரமம். அவளாள் இப்போது அவள் பேசும் பிரச்சனைகளுக்கானத் தீர்வுகளையும் எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்பதையும் சொல்வது கடினம்தான் இல்லையா? என் தனிப்பட்டக் கருத்து இது.

பள்ளிப் படிப்பை விட்டுவிட்டு இறங்கியிருப்பதை விட கொஞ்சம் பக்குவப்பட்டு ஆய்ந்து தன் படிப்பையும் இது சார்ந்ததாகக் கொண்டு நன்கு ஆய்ந்து, இப்போதைய உலகத் தேவைகள் என்னென்ன என்று தெரிந்து கொண்டு இறங்கலாம் என்றும் தோன்றியது.

எபியில் கூட ஏஞ்சல் இந்தக் கேள்வி கேட்டிருந்தார். பதில்களும் சொல்லப்பட்டிருந்தது. அங்கும் இதை போட வேண்டும் என்று நினைத்தேன் அதற்குள் இங்கு வீடியோ நீங்க போட்டிருப்பதை பார்த்ததும் இங்கு சொல்லிவிட்டேன்..

சிறிய தோள்களில் பெரிய சுமையை ஏற்றிக் கொண்டிருக்கிறாள்! குழந்தை. இவள் மீது வலியத் திணிக்கப்பட்ட ஒன்று என்றும் சொல்லப்படுகிறது என்ற கருத்தையும் ஏகாந்தன் அண்ணா எபியில் சொல்லியிருந்தார். அது பற்றி தெரியவில்லை. வாசிக்கவில்லை. ட்ரம்ப் அண்ட் க்ரேட்டான்னும் கூட சொல்லப்பட்டிருந்தது. நான் இன்னும் அந்தக் காணொளி பார்க்கவில்லை ம்மா..

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா பார்த்ததைப் பகிர்ந்து கொண்டேன். இந்தப்
பெண் இன்னும் சிலர் எவ்வளவு சாதிக்க இயலும்
என்பது தெரியவில்லை.
உலக நிகழ்ச்சிகளில் சிலதையாவது என் வலைத்தளத்தில் பதிந்துவிடும் முயற்சி.

சிலர் முன்னரே இது போல் வந்து காணாமல் போயிருக்கிறார்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நானும் இந்தக் காணொளி பார்த்தேன் மா... சில விஷயங்கள் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் வெங்கட்.
இளமை வேகம் அவர்கள் ஊருக்கு உரித்தான வீரம் எல்லாம் இருக்கின்றன.
எவ்வளவு விவேகம் இருக்கும் என்று தெரியவில்லை.