Blog Archive

Friday, October 18, 2019

சப்தஸ்வரங்கள் 7

வல்லிசிம்ஹன்
எல்லோரும் நலமாக  வாழ வேண்டும்.
சப்தஸ்வரங்கள் 7

சாரிகா, 
ரகு நந்தன்,
மஹி, மானசி 
பரணி 
நிகிதா, ஹரன் 
தன்யா 
 கமகம்  வரவில்லை இன்னும்.

ஹரனுக்கு, டாக்டர் உடனே சுபா டிராவல்ஸ் வழியாக அன்றே கிளம்பும்படி டிக்கட் வாங்கி கொடுத்தார் 
காதே பசிபிக் ,ஹாங்காங் வழியாகச் சென்னையை அடைய அடுத்த நாள் ஆகிவிடும். எல்லோரும் சேர்ந்து 
அவனைச் சூழ்ந்து கொண்டு சமாதானப் படுத்தி ,இந்தியாவுக்கும் பேசவைத்தார்கள்.

டாக்டர் சொல்படி ஹரன்  அப்பாவுக்கு வந்திருப்பது மைல்டு இருதய அடைப்பு.

அப்போலோவில்  உடனே சரிசெய்து விடுவார்கள். 
மைசூர்  அப்போலோ மிகவும் பிரசித்தி பெற்றது.

KEEP A CALM FRONT HARAN. YOUR FATHERIS ONLY  49.
HE CAN WITHSTAND  ANYTHING,

HE HAS T GO TO THE DOCTOR IMMEDIATELY.


mysore
அப்போலோ மைசூர்.
நானும் அங்கே பேசுகிறேன் கவலை இல்லாமல் போ என்று வழி அனுப்பி வைத்தார்,.

மதியம் அவனை உண்ண  வைத்து ,விமானத்தில் ஏற்றிவிட்டு வந்தார்.
மற்றவர்களின் மன நிலை 

இசையில் ஈடுபடவில்லை.
டாக்டரின் அம்மா கனகவல்லி 
 மிகச் சிறந்த பாடகி.

அவர் அனைவரையும் அமர வைத்து 
ஆசுவாசப் படுத்தினார்.

லேசான தம்புரா இசை  தவழ  ஆரம்பித்தது.





அதனுடன் இழைத்த   REYKI HEALING இசை,
, டிகே பட்டம்மாளின் ஷாந்தி நிலவ வேண்டும் பாடல் எல்லாமே 

அவர்களைக் கொஞ்சம் நிதானப் படுத்தியது.
கனகவல்லி அம்மாவே இசை தெரபிஸ்ட் தான்.

இசையால் சாதிக்க முடியாததே இல்லை என்பதை 
திடமாக நம்புபவர்.

அடுத்த நாள் கச்சேரிகளுக்கு அவர்களைத் தயார் செய்தார் .
சாரிகாவும்  அவர்களுடன்  இணைய  அமைதியாக
உறங்கப் போனார்கள். 

மஹி மனதில் ஹரனுக்கான  கவலையும் கனிவும் 
பெருகியது.
அவனுக்கு  அமேரிக்கா வந்து விட வேண்டும் என்கிற நினைப்பு வெகு நாட்களாக 
ஆசை. மஹிக்கு அந்த ஆவல் இல்லை.

டிசம்பருக்கு டிசம்பர்  சென்னை வந்து போகும் பக்ஷிகள்  கூட்டமாக இருக்க அவளால் முடியாது.

ஒரு நல்ல துணைவன்  கிடைத்தால் இரண்டு மூன்று வருடங்கள் சென்ற பிறகு  திருமணம் செய்யலாம்.  இசைக்கு முதல் இடம் தருபவனே வேண்டும்.
ஹரன்  தந்தையின் நல்வாழ்வுக்குப் பிரார்த்தித்தபடி  தூங்கிப் போனாள் .
நிகிதாவின் மனம்  ஹரனுடன் சென்று விட்டது.  நல்வீணையும் நாதமும் போல  அவள் மனம்   அவன்பால் சென்றது. 
கிடைத்த இடைவெளிகளில் அவனுடன் , அரிசோனா வந்து 
இசையில் எம் பில், பி  ஹெ  ச்.டி  செய்யலாம் என்ற 
 எண்ணத்தையும் விதைத்தவள்  அவளே.. இப்போது இந்த செய்தி அவளைக் கலங்க வைத்துவிட்டது.

மாநசியும்  ,ரகுநந்தனும்    ஏற்கனவே பழகி இருந்ததால் 
இருவரின்   இலக்கமும் ஒரே மாதிரியாக குழப்பம் இல்லாமல் தொடர்ந்தது.

இருவருக்கும் இசையில் முன்னேற்றம், வாழ்விலும் முன்னேற்றம்.
வீட்டுக் கொடுத்து தாராள மனப்பான்மையோடு இருக்கத்  தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 பரணியும் தன்யாவும் மற்றவர்களை ரசித்தபடி இருந்தார்கள்.

எப்படிச் செல்கிறது என்பதைத் தொடர்ந்து கவனிக்கலாம் 

  








18 comments:

ஸ்ரீராம். said...

ஏகப்பட்ட கேரக்டர்ஸ்...யார் யாரை விரும்புகிறார்கள் என்பதும் குழப்பமாக இருக்கிறது.  49 வயதிலேயே அட்டாக்கா?  பாவம்.  ஆபேரி பாடலையும் ரசித்தேன்.

நெல்லைத்தமிழன் said...

நிறையபேர் கதையில் வருவதால் ரொம்பவும் குழப்பமா இருக்கும்மா.

நாலு ஜோடிகளை வைத்தே வித விதமாக எழுதலாம் எனும்போது இங்க நிறையபேர்..யார் யாரைப் பார்க்கிறார்கள் என்பதிலேயே நினைவில் வைக்கமுடியாதபடி கன்ஃப்யூஷன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,

சரிகமபத நீ
இந்த ஸ்வரங்களில் பெயர்களை அமைத்தேன் மா.
சாரிகா.... வயலின், ஜோடி சேரவில்லை.

ரகுனந்தன், மானசி...சேரலாம் குழலும் நிருத்தியமும்

பரணி ,,தன்யா யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். குழலும் நடனமும்
நிகிதா ஹரனுடன் இணைவதில் விருப்பம் கொண்டிருக்கிறாள். வீணையும் இசையும்.

மஹிகாவுக்கு இசையில் சாதனை செய்த பிறகே
மணம் என்பதில் சந்தேகம் இல்லை. சரியாமா.

வல்லிசிம்ஹன் said...

என் பெரிய தம்பிக்கு 42 வயதிலெயே வந்ததுமா.
will power made him work hard and live for 25 more years. God Bless.

Geetha Sambasivam said...

30 வயதிலேயே heart attack வந்திருக்கிறது. குழந்தையைப்பள்ளியில் விட்டுவிட்டு வண்டியை உதைத்தவர் அப்படியே மடங்கி விழுந்து உயிரிழந்து விட்டார். இது சுமார் 20 வருடங்கள் முன்னரே!

Geetha Sambasivam said...

மஹி ஹரனைக் கல்யாணம் செய்துக்கப் போவதில்லைனு நினைக்கிறேன். மற்றவர்கள் பாடு பரவாயில்லை!

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. ஹ்ருதய அடைப்பு ஒரு பெரிய எமன். யாரை
எப்போது தாக்கும் என்றெல்லாம் சொல்ல முடிவதில்லை. ஆனாலும் முப்பது வயது என்றால்
ஒரு பாதிப்பு வருகிறது. ரொம்பப் பேரூக்கு இப்பொது அந்த வயதில் திருமணம் கூட
நடக்கிறதில்லை. தலைமுறையாக இது வருவது என்று கூட சொல்ல முடியவில்லை. தாத்தா எல்லாம் 80 ஐத் தாண்டி இருந்தார்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளி மா,
நாலு ஜோடிதான் இருக்கு.
மஹி மணம் பற்றி நினைக்கவில்லை.
ஹரன் ,நிகிதா
ரகு நந்தன் மானசி,
பரணி தன்யா.
மற்றவர்கள் வந்து போகிறவர்கள்.
மீண்டும் வந்து சொல்கிறேன். கன்பூஷனுக்கு மன்னிக்கவும்.

கோமதி அரசு said...

இசையால் அனைத்தையும் வசபடுத்தலாம்.நோய் தீர்க்கும் மருந்து இசை. சாந்தி நிலவ வேண்டும் பாடல் பிடித்த பாடல்.
மனம் சாந்தி அடைய கேட்கும் பாடல்.
அவர் அவர் மன நிலைபடி எல்லாம் நடக்கட்டும்.
எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
தொடர்கிறேன்.

KILLERGEE Devakottai said...

இளவயதில் அட்டாக் வருவது தற்பொழுது பெருகி வருகிறது அம்மா.

மாதேவி said...

இசையில் மூழ்கும் மஹியின் வாழ்கை அலைவந்து அடித்து செல்லுமா? ....எப்படி நடந்தாலும் இசைஅவள் வாழ்வில் பிரியாமல் இருந்தால் நலம்.

டிபிஆர்.ஜோசப் said...

நான்கு ஜோடிகளின் காதலையும் அதன் போக்கிலேயே செல்ல வைத்து முடிவில் என்ன நிகழும் என்பதை நீங்கள் கதைச் சுருக்கமாக எழுதி வைத்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். வாசிப்பவர்களுக்கு சற்று குழப்பமாக இருந்தாலும் நீங்கள் தெளிவாகத்தான் இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. பாடல்களுக்கே இந்தப் பதிவு என்றாகிவிட்டது. நான் அறிந்தவரை இரு தம்பதியர்
பிரிந்தே வாழ்கின்றனர்.
இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது
கலாசாரங்கள் மாறும்போது காதலில் இருந்த ஈர்ப்பு திருமணத்துக்குப் பிறகு
திசை மாறுகிறது.
எல்லோரையும் குழப்பி விட்டேனோ என்ற வருத்தம் வருகிறது.

தொடர்ந்து வந்து படிப்பதற்கு மிக மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டைஜி, சரியான நேரத்தில் தூங்காமை, உணவு கொள்ளாமை எல்லாமே

உடலுக்குக் கெடுதிதான்.. இளமையின் வேகம், குடும்பத்தைக் காக்க சம்பாதிக்கும் வாலிபனை
பல்வேறு வழிகளில் வாட்டி விடுகிறது. அவன் இறக்கும்போது பல லக்ஷங்களை வைத்துச் சென்றாலும் தலைவன் இல்லாத குடும்பம் என்ன பாடு படும்..

இருப்பது போதும் என்ற கொள்கை எப்போதும் நன்மை. நன்றி மா. வளமுடன் வாழுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,,
இசை பலவிதங்களில் கை கொடுக்கும். மனம் பக்குவப்பட்டால்
வாழ்க்கையில் அலை அடிக்க சந்தர்ப்பம் இல்லை.

பக்குவப்படுவது சிரமமே. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

வணக்கம் ஜோஸஃப் சார்.
நீங்கள் சொல்லி இருப்பதுதான் உண்மை.
நான் நினைத்ததைக் கட்டுக்கோப்பாக எழுத்தில் வடிக்கவில்லை. பாவம் படிப்பவர்கள்.

உங்களுடைய புரிதல் என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்திவிட்டது.
பயணப்படும் நேரத்தில் கதை எழுத ஆரம்பித்தது என் தவறு..
இன்னும் ஒரு பாகத்தை எழுதிவிட்டு ஸ்விட்சர்லாண்ட்

போனபிறகு கதையைப் பூர்த்தி செய்ய நினைக்கிறேன். இறைவன் சித்தம்..மிக மிக நன்றி சார்.

வெங்கட் நாகராஜ் said...

என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ள ஆவல் அதிகரித்து இருக்கிறது. இதோ அடுத்த பகுதிக்குச் செல்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் நலமாப்பா.
உங்கள் பயணக்கட்டுரைகளைப் பிறகு காணோமே.
இந்தக் கதையை ரசித்துப் படித்ததற்கு
மிக நன்றி.