வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.
எதிர்பாராமல் நடந்தது.
++++++++++++++++++++++++++++++++++++ //மாலை மயங்குகின்ற நேரம் பச்சை மலை வளரும் அருவி ஓரம்//என்று முணுமுணுத்தபடி
வந்த மகளை புன்னகையுடன்
பார்த்தால் அவள் அம்மா பொன்னா .
என்ன உத்ஸாகம் , பாட்டெல்லாம் பலமாக இருக்கிறது
என்று கேட்டாள் .
பள்ளி விழா ஒன்றுக்கு ஆட எனக்கு டீச்சர் அழைப்பு கொடுத்திருக்கிறார்கள்.
இந்தப் பாடல் மனதில் வந்தது. ஏம்மா என்னால்
முடியுமா என்று கேட்டாள் மாலா.
நீதான் நாட்டியம் கத்துக்கிறியே மா. நன்றாக ஆடலாம்.
உடைகள் இருக்கின்றன. நல்ல முத்து மாலை மட்டும் அணிந்து
அளவான அலங்காரம் செய்தால் அழகாக
ஆடலாமே.
இரண்டு வாரங்கள் முன் நாம் பார்த்த படம் தானே
பத் மினி ஆடுவது நினைவில் இருக்கிறதா.
இல்லாவிட்டால் நானும் கற்றுத் தருகின்றேன் .
பதினைந்து வயதுக்கு உரிய , வனப்பும், இயல்பாகவே அமைந்த அமைதியான முகமும்
அம்மாவின் கண்ணே படும் போல அமைந்திருந்தது.
என்றைக்கு ஆண்டு விழா.
இந்த மாதம் 25 ஆம் தேதி மா.
பாடங்கள் எல்லாம் முடிந்த நிலையில்
ஆண்டுத்தேர்வுக்கு முன்னால் இந்த விழா நடக்கும்.
இது வரை சிறு வயதினருக்கான கோலாட்டம்,
போல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட பெண்ணுக்கு இது போல நிகழ்ச்சி அமைவது நல்லதொரு
அனுபவமாக அமையும் என்று அம்மாவுக்கு
மகிழ்ச்சி.
அம்மா அந்தப் பாடல், ரிக்கார்டு இந்திரா விடம் இருக்கிறது.
வாங்கி வரட்டுமா என்று ஆவலுடன் கேட்டாள் மகள் .
உம்ம் ...போயிட்டு வா. பேசிக்கொண்டே நிற்காதே.
விளக்கேற்ற வந்துவிடு..... என்று சொன்னபடி
தன் வேலைகளைக் கவனிக்கக் கிளம்பினாள் .
பொன்னாவுக்கும் வரதனுக்கும் மாலா ஒரே மகள் .
செல்லம் குறைவாகவும் கண்டிப்பு நிறைவாகவும் வளர்க்கப்பட்டவள் .
மதுரையில் எல்லா உறவுகளும் சூழ , வரதனின்
தனியார் கம்பெனி கொடுத்த சம்பளத்தில் நிறைவாகவே வாழ்வு சென்று கொண்டிருந்தது.
பொன்னாவின் அண்ணா ராஜாமணி சென்னையில் இருந்தார்.
வரதனின் அக்கா, தங்கைகள் மதுரை,அதைச் சுற்றி இருந்த
பசுமலை, கப்பலூர் என்று இருந்தனர்.
கப்பலூர் மில்லில் அக்காவின் கணவர் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.
இன்னோர் தங்கையின் கணவர் வரத்தான் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே ,இன்னுமொரு இலாகாவில் இருந்தார்.

19 comments:
இரண்டு காணொளியும் நன்று.
கூடலழகர் அருள் கிட்டும் அம்மா.
//புதுக்கணினியில் பதிவு செய்யும் முதல் பதிவு.//
வாழ்த்துக்கள்!
கதை அருமையாக இருக்கிறது. பகிர்ந்த பாடல்கள் எல்லாம் அருமை.
கிச்சம்மா பாட்டியின் ஆசை நிறைவேறுமா.
பார்க்கலாம்.//
காத்து இருக்கிறோம்.
ஆஹா அடுத்த நினைவோட்டம் ஆரம்பம்.... இனிதான தொடக்கம். பாடல்கள் மாலையில் தான் கேட்க வேண்டும்.
அடுத்த உண்மைச் சம்பவக் கதை தொடக்கமா?
தொடர்கிறேன்!
முதல் பாடல் கேட்டதில்லை. புன்னாகவராளி போல... (நல்லவேளை கீதா ரெங்கன் லீவில் இருக்கிறார்... தைரியமா அடிச்சு விடலாம்!) "நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே" பாடலும் நினைவுக்கு வருகிறது!
குறும்பினிலும் ஒரு எழில் தோன்றும் பாடல் கேட்ட மாதிரியும் இருக்கிறது... கேட்காத மாதிரியும் இருக்கிறது. இன்னொரு பாடல் நினைவுக்கு வந்து வந்து போகிறது... சட்டென சொல்ல முடியவில்லை. குறிப்பாக சரணங்களில்!
இனிய காலை வணக்கம் அன்பு தேவகோட்டைஜி.
இறைவன் கருணை எப்பொழுதும் வேண்டும்.
அன்பு கோமதி இனிய காலை வணக்கம். போராட்டம் இல்லாமல் திருமணமா.
வாழ்த்துகளுக்கு மிக நன்றி மா. உடல் நலம் தேவலையா.
அன்பு வெங்கட், இனிய காலை வணக்கம்.
ஆமாம் சம்பந்தப் பட்டவர்களே
எங்களை சந்திக்க வந்ததால் எழுதலாமே என்று தொடங்குகிறேன்.
நன்றி மா.
வரணும் ஸ்ரீராம்.
இனிய காலை வணக்கம்.
ஆமாம்மா இன்னொரு கதை.
மாலை மயங்குகின்ற நேரம் , ராதா ஜெயலக்ஷ்மி முரலில் அழகான பாடம். எனக்கு ராகம்லாம் தெரியாதுமா.
ஆமாம் கேட்டது போலவே இருக்கிறது.
அது எல்லா ராகங்களுக்கும் அடிப்படை ஸ்வர்ங்கள்
வரும்போது ஒன்றாகத்தான் கேட்கும்.
சாவித்ரி ஜெமினி பாடலும் அதே போல் தான்.
தெலுங்கிலிருந்து வரும் அனேகப் பாடல்கள்
கர்னாடக இசையை அடிப்படையாக வைத்து அப்போது வந்து கொண்டிருந்தது.
எல்லாமே இனிமை. எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை
கண்டிருக்கிறேன் மா. பெண்ணின் பெருமை படத்தில் வரும் ஒரு பாடலும் இந்த
ராகத்தில் இருக்கும். கண்ணா மறையாதடா ந்னு வரும்.
எல்லாரும் வாழ வேண்டும் ..
அதுவும் இன்புற்று வாழ வேண்டும்!...
கதையும் பாட்டுமாக அருமை...
நீண்ட வருடங்களுக்குப் பிறகு இந்தப் பாடல்களைக் கேட்க நேர்ந்ததில் மகிழ்ச்சி...
வாழ்க நலம்...
பாட்டியின் ஆசை நிறைவேறுமா?
காத்திருக்கிறோம்....ஆவலாக...
அன்பு துரை செல்வராஜு. இனிய வெள்ளிக்கிழமைக்கான வாழ்த்துகள்.
கதை சாதாரணமாக எங்கும் நடப்பதுதான்.
பாடல்கள் 60 களில் வந்தவை.இனிமை கூட.
ரசித்ததற்கு மிக நன்றி.
அன்பு மாதேவி,
கிச்சம்மா பாட்டி விவேகமாக நடப்பவர். ஜோதிடம் பற்றிய உண்மைகளை உணர்ந்தவர்.
ஆனால் அவரது மகனும் மனைவியும்
இந்த நம்பிக்கைகளில் அஞ்சுபவர்கள்.
எது நன்மையோ அது நடக்கட்டும். நன்றி மா.
எனக்கு இப்போது உடல் நலம் அக்கா.
பாட்டியின் ஆசை நிறைவேறுகிறதா பார்க்கலாம்.
புதுக்கணினிக்கு வாழ்த்துகள்.
அன்பு கோமதி,
உடல் நலம் குறித்து அறிய மகிழ்ச்சி மா.
அன்பு கீதாமா. உடல் நலமா. கணினிக்கு இப்போதுதான் பழகி வருகிறேன்.
பிழை நிறைய வருகிறது. ஆனால் மிக சௌகர்யம்.
Post a Comment