Blog Archive

Tuesday, September 03, 2019

சென்ற காலம் நிகழ் காலம்.

வல்லிசிம்ஹன்
எல்லோரும்  நலமாக இருக்க வேண்டும் .


காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்.////
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மனதில் உறுதி வேண்டும்.
நினைவு நல்லது வேண்டூம்.



இதுதான் மனிதர்களுக்கு விதிக்கப் பட்டது.
மன சஞ்சலங்கள் ,வயது ஆனதும் விலகிவிடும்  என்று நினைப்பதெல்லாம்
வேடிக்கைதான்.
பந்தங்கள் சொந்தங்கள் என்று சூழும்போது
சில பல சமயங்களில் தொந்தரவுகள்+ ஆனந்தம் எல்லாருக்கும்
உண்டு.

தொந்தரவு மிக்க சஞ்சலம் ஒன்று நேற்றிரவு.
புதல்வர்களில் ஒருவர்  அவரது ஊரிலிருந்து 
இந்தியா வந்து விட்டுத் திரும்பினார்.
என்னுடன் வாட்ஸாப்பில் அம்மா வந்துட்டேன். அம்மாகிளம்பறேன் 
என்று தந்தி மொழியில் சொல்லுவான்..சரிப்பா. பாதுகாப்பா போய் வான்னு
சொல்லிவிட்டுப் படுக்கப் போனபோது. 3 மணி நேரம் தாமதமாகக் கிளம்புகிறது மா. வீடு
திரும்ப நாளை ஆகிடும் என்று எழுதிவிட்டான்.
நடுவில் ஒரு இடத்தில் ட்ரான்சிட். அங்கு  இருந்து கிளம்ப வேண்டும்.
நான் ,அவனுடைய lAST SEEN பார்த்தபோது 8.20 என்றிருந்தது.
 ஊர் போய்ச் சேரூம்போது 2 ஆவது ஆகிவிடும்.
என்று தீர்மானித்து நான் உறங்கப் போனேன். மனதில்
மணி அடித்தது போல 2 மணிக்கு விழிப்பு வந்தது.
 அலைபேசியைத் திறந்து பார்த்தால்  செய்தி ஒன்றும் இல்லை.
அவன் வந்து சேர்ந்திருக்க வேண்டுமே என்று மருமகளுக்கு
சேதி அனுப்பிக் கேட்டேன்.
இன்னும் வரலைம்மா.
நீங்க தூங்கப் போங்கோ. என்று சொல்லியும் மனம் வரவில்லை.
 அவன் வந்துவிட்டேன் என்று சொல்லாமல் இருக்க மாட்டான்.
மீண்டும் மூன்று மணிக்குப் பார்த்தேன். காணொம்.
 இணையம் வழியாகப் பார்க்கலாம் என்றால் கீழே இறங்க வேண்டும்.
பெண் கோபிப்பாள். இன்னும் குழந்தைன்னு நினைப்பா உனக்கு.
கார்த்தால தலை சுத்தும் என்று லெக்சர் தொடங்கும்.

கையில் ஷிர்டி சாயி படத்தைப் பிடித்துக்கொண்டு 
நாம ஸ்மரணையுடன் தூங்கி விழித்த போது தலைவலி.
மருமகளுக்கு மீண்டும் செய்தி.
அம்மா அவர் நேராக அலுவலகம்  போய் இதோ வந்தாச்சு.
 அவர் கைபேசியில் தொடர்பு விட்டுப் போயிருக்குமா.
உங்க உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
இனிய வினாயகச் சதுர்த்தி வாழ்த்துகள் என்று சொல்லி அவளுடைய வேலையைப் பார்க்கப் 
போனாள்.

ஸாரி மா. உனக்கு அப்டேட் செய்ய முடியாமல் வேலை வந்து விட்டது
என்று செய்தி வந்தது மகனிடமிருந்து.
பராவால்லமா. பத்ரம் என்று சொல்லிவிட்டு,
காலைவேலைகளைக் கவனிக்கக் கீழே இறங்கினேன்.

அம்மா நினைவு வந்தது.
நீண்ட தூரம் சென்று கோவில் தரிசனம் செய்வது எனக்கு வழக்கம்.
யாரையும் அழைத்துப் போகும் நிலையிலும் இல்லை.
அம்மா ஒவ்வொரு தடவையும் சொல்வார்.
பகவான் வீட்டிலேயே இருக்கார்.
வாரம் தவறாமல் இப்படி ஐந்து மணி நேரம் 
அந்த வேகமான சாலைகளில் போக வேண்டுமா. நீ சாயந்திரம் வரும் 
வரை கவலையாக இருக்கிறது என்பார்.
சின்னத் தம்பி மறைந்த நேரம். அவருக்கு கவலை மேலிட்ட
நிலையில் நானும் வருத்தி இருக்க வேண்டாம்.
அம்மா மன்னித்துக்கொள்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்ற காலம்  நிகழ் காலம்.

14 comments:

கோமதி அரசு said...

காலங்கள் மாறினாலும் அம்மாவின் பாசங்கள் மாறுவது இல்லை.

இப்போது இத்தனை வசதிகள் வந்தும் நேரில் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டும் , பேசிக் கொண்டு இருக்கும் போதே இப்படி என்றால் அந்தக் காலத்தில் நம் அம்மாக்களின் மனநிலை எப்படி இருக்கும்!

வாரம் ஒரு முறை கடிதம் எழுது, போன் வந்த பின்னே அடிக்கடி போன் பேசு. அக்கறை, பரிவு , பாசம் சென்ற காலத்தை நினைத்து பார்க்க சொல்லும் பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

அடடா... இரவு முழுதும் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் கஷ்டமாக இருக்குமே வல்லிம்மா.... கவனமாக இருங்கள்.

ஸ்ரீராம். said...

பெரியவர்களின் கவலை சிறியவர்களுக்கு சரியாய் புரிவதில்லையோ?​

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. மாறாதது இந்தப் பாசம் ஒன்று தான்.
50 வயது கடந்த பிறகும்
பிள்ளைகளைப் பிந்தொடரும் இந்தக் கவலையை விட்டுவிட நினைத்தாலும் முடிவதில்லை.
அவன் எப்பொழுதும் கட்டுப்பாடுடன்
செய்தி அனுப்புவான். அதனால் தான் நேற்று சற்று திணறி விட்டேன்.
மனம் குரங்காய் அலைபாய்ந்தது.
அம்மாக்களின் பாசம் எப்பொழுதும் மாறுவதில்லை.
பிள்ளைகளும் அப்படியே.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட் , இன்று மீண்டு விட்டேன் .
இதுதான் வாழ்க்கை சொல்லும் பாடம்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீரஆம். அவன் பிறப்பிலிருந்தே. ஞானி . அம்மா குணம் நன்கு தெரியும். வேண்டும் என்று செய்ய மாட்டான் சூழ்நிலை அப்படி மா.

Anuprem said...

அம்மா என்றும் அம்மாவே ...

பிள்ளைகள் நலன் மட்டுமே வேண்டும் அன்பானவள் ..

நாங்க இதுனால் தான் கிளம்பும் நேரத்தை அம்மா மற்றும் அத்தையிடம் சொல்லுவது இல்லை பாதி தூரம் போன பிற்கு கூட ஒரு மணி நேரம் சேர்த்து அப்பொழுது வருவோம் ன்னு சொல்லுவோம் ....இல்லைன்னா கொஞ்சம் நேரம் ஆச்சு னாலே அவங்களுக்கு வேலை ஓடாது ...

'பரிவை' சே.குமார் said...

வாழ்க்கை சொல்லும் பாடம்...
அதை ஏற்றுத்தானே ஆகணும்...

ஜீவி said...

சென்ற காலம் நிலழ் காலம்-- பொருள் பொதிந்த வார்த்தைத் தொடராய் ஆக்கி விட்டீர்கள். நானும் இந்த மாதிரியான கவலைகளைக் கொண்டிருக்கிறேன்.

நிகழ்காலமும் சென்ற காலம் தான். ஒவ்வொருவரும் உணர்ந்து பார்த்தால் தெரிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி,
செய்யும் தவறுகள். மற்றவரைப் பாதிக்கும் போது வருத்தமே.
நீங்கள் சொல்வது போல,
அப்போது எல்லாம் கடிதம்,பிறகு தொலைபேசி.
பிறகுதான் வலைபோல பின்னிக்கொண்ட செல்ஃபோன்.
இதனால் கணத்தில் தொடர்புகொள்ள முடிவது வரப்பிரசாதம்.

செய்தி வராவிட்டால் கவலை.
நானும் ஏன் அவ்வளவு அவஸ்தைஅட்டேன்
என்றே புரியவில்லை.
எத்தனையோ பயங்கள். இரவு தரும் தளர்ச்சி.
இனி இப்படி இருக்கக் கூடாது.
அருமையாகப் புரிந்து கொண்டீர்கள். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு மா.

தங்கள் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் . இவ்வளவு அன்பான
மகள் இருக்க அவர்களுக்குக் கவலை ஏது. நானும் பின்னாட்களில்
இது போல் சொல்லப் பழகிக் கொண்டேன்.
வரும் வழியிலேயே அம்மாவுக்குத் தொலை பேசிவிடுவேன்.

பாவம் அவரும் நிம்மதியாக இருப்பார்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார் உண்மைதான்,
காலம் சொல்லும் பாடங்கள் பலவிதம்.
முழு மனதோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜீவி சார் வணக்கம்.
பெற்றோர் நமக்காகப் பட்ட பாடுகளை என்றும் மறக்கக்
கூடாது என்பத்ற்காகவே இப்படி நிகழ்கிறதோ
என்று தோன்றும்.

என் தந்தை சின்னவன் பள்ளியிலிருந்து சிறிது நேரம் தாமதமாக வந்தாலும்.
அவன் பள்ளி வரை நடந்து போய் பார்த்து விட்டு வருவார்.

நீங்கள் சொல்வது மிக உண்மை. இன்றும் நாளையும்
நேற்றும் சக்கிரமாகச் சுழல்கின்றன.
மிக மிக நன்றி சார்.

மாதேவி said...

காலங்கள் மாறினாலும் அம்மாக்களின் மனம் ஒன்றே. அழகாக சொல்லி இருக்கிறீர்கள்.