Blog Archive

Friday, September 20, 2019

எதிர்பாராமல் நடப்பது 5

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  வளமாக  வாழவேண்டும் 


Add caption
எதிர்பாராமல் நடப்பது  5

மாலாவுக்கும் மாதவனுக்கு சிறிய வயதிலிருந்து 

நட்பு உண்டு.  கோவில்கள்,கடற்கரை ,மஹாபலிபுரம் என்று 
மாமா,பாட்டியுடன்  சுற்றிய வருடங்கள்  பல. மாமா ஸ்ரீநிவாசன்,மாமி பத்மா 
இருவருமே  மிக அருமையாக அவளிடம் அன்பைப் பொழிவார்கள்.

பாட்டிம்மா மூவரையும் சேர்த்துக் கொண்டு
கதை சொல்வது, கைகளில்   அமுது படைப்பது என்று 

செல்லமாகவே வளர்த்தாள் .   ராமன், சீதை,லக்ஷ்மணன் என்று 
அலங்காரம் செய்து மகிழ்வாள்.

இதெல்லாம்  பத்து,பன்னிரண்டு வயது வரைதான் .



அவரவர்களுக்குப் படிப்பு, பாட்டு,நடனம் என்று 
தங்களை வளர்த்துக் கொள்ள ஈடுபடும் பொது சந்திப்புகளும் குறைந்தன.

மாதவன் டென்னிஸ்    விம்பிள்டன் ராமநாதன் கிருஷ்ணனிடத்தில் பயின்று நன்றாக விளையாட ஆரம்பித்தான்.

அவனும் தம்பி கேசவனும்   இரட்டையர் போல் பல ட்டூர்னமெண்ட்களில் வாங்கிய  வெள்ளி கோப்பைகள் 
அவர்கள் பெற்றோருக்கு அளவில்லாத ஆனந்தம் 
கொடுத்தது.

மாலா பிறந்த போது   ஏமாந்தது இவர்கள் தான். இபோது  போல  21 ஆம் நூற்றாண்டு இல்லையே.

ஆணா கப் பிறந்திருந்தால்  அரசாளும் நட்சத்திரம். பெண்ணாகி விட்டதே 

என்று பெருமுட்டுச்சு விட்டாள்  மதனி வைதேஹி.

மாலாவிடம் அதிக அன்பு காட்டினாலும் தன மகனுக்கு அவளைத் திருமணம் செய்யும்  எண்ணம் எழவே இல்லை.

பொன்னா  இதை நன்றாக உணர்ந்தாள்.

இப்பொழுது இங்கு வந்திருக்கும் மாதவனின் நல்ல குணம் நடவடிக்கை 
எல்லாம் காணும் போது   அவள் மனம் 
இந்த ஜோடி  சேர்ந்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அனைவரும் சாப்பிட உட்கார்ந்த பொது,
சின்னவர்கள் உட்கார பெரியவர்கள் பரிமாறினார்கள்.

ஒரே குதுகலமாக நேரம் சென்றது.
பிரசாத் ,கல்லூரியில்  நடக்கும்  நகைச்சுவை காட்சிகளை சொல்லச் சொல்ல 

பெண்களிடையே  சிரிப்பு பரவியது.

மாதவன்  சாப்பிடும் இலையிலிருந்து  கண்ணே எடுக்கவில்லை.

மாலா அவனைக் கிண்டல் செய்தாள் . 
சாப்பாட்டு ராமன் தெரியும் . இப்போதுதான் மாதவனைப் பார்க்கிறேன் 
எனவும் அவனுக்கே சிரிப்பு வந்து விட்டது.

இன்று முழுவதும் நாங்கள் நடந்த நடைக்கு  இன்னும் ஒரு 
தடவை கூடச் சாப்பிடுவேன் என்று சிரித்தான்.

பெண்ணை உறுத்து   விழித்தாள்  பொன்னா .


கொஞ்சம் பேசிக்கொண்டே சாப்பிடட்டும் என்று கேட்டேன் மா. சரி மாது.

உன்னைச்  சொன்னால் உன்     அத்தைக்குப் பிடிக்கவில்லை.

சினிமா  எல்லாம் பார்ப்பீர்களா என்று ஆரம்பித்தாள்.
உடனே பிரசாத்   அவனுக்கு  சிவாஜி படம் எனக்கு எம்ஜிஆர்.

எனக்காகப்  பணக்காரக் குடும்பம்  போன வாரம் பார்க்கவந்தான்.
அதில் அவனுக்கு மிகவும் பிடித்தது 

அந்த  டென்னிஸ்  பாட்டுதான்.

சகோதரிகள்  மூவரும் பறக்கும் பந்து பறக்கும் என்று 
பாட ஆரம்பித்தனர்.

இளைஞர்கள் இருவரும்  ஆச்சரிய பட்டார்கள்.
மதுரைக்கும்  அந்த சினிமா வந்துவிட்டதா என்றனர்.


ஏன் எங்க மதுரை  என்ன  குக்கிராமமோ.
எல்லாப் படமும் வந்து விடும்.

என்று அரட்டை நீள



 பொன்னா    தான் முற்றுப்புள்ளி வைத்தாள் .

நாளைக்கு மதியம் வாருங்களேன்  என்று அழைக்க 
அவர்கள் நண்பர்களோடு   வத்தலகுண்டு வரை போய் வருவதாகத் திட்டம் 
வர இரவாகிவிடும். அடுத்த நாள் சென்னை கிளம்ப வேண்டும் என்றனர் 
இருவரும்.

   ஒரு  நொடியில் மாலாவின் முகம் வாடியது.
அதையும் கவனித்தான் மாதவன்.

பெற்றோர்   சொல்லாவிட்டாலும் அவன் நிலைமையை ஓரளவு யூயூகித்து இருந்தான்.

அவன் மனதிலும் வெறுமை சூழ்ந்தது.


பொன்னாவுக்கு,  அவனது வத்தலகுண்டு உறவினர்களைத் தெரியும்.

தன்  மதனியின்   பெற்றோர் அங்கு  இருப்பதும், அவர்கள் வீட்டிலும் 
ஒரு பெண் ,அவனுக்கு   ஏற்ற திருமண வயதில் இருப்பதும் 
அவள் அறிந்திருந்தாள் .


சரிம்மா  நாம் பிறகு சந்திக்கலாம். இந்த பழங்கள் 
எடுத்துக் கொண்டு போ. இங்கே தோட்டத்தில் விளைந்தது என்று சப்போட்டா, கொய்யா, ஆரஞ்சுப் பழங்களை 
பையில் போட்டுக் கொடுத்தாள் .


அங்கே வெறும் கையோடு போக வேண்டாம்  என்றதும் சிரித்தபடியே அத்தையை அனைத்துக் கொண்டான் மாதவன்.

ஹே மாலா, எந்தக் கல்லூரி என்று எனக்குத் தெரிவியுங்கள்.

படிப்பிலும் கவனம் தேவை  என்றபடி  விடை பெற்றான்.

பிரசாத் எதோ முணுமுணுப்   பதைக் கண்டு என்னடா என்றான்.
//ஒரு பெண்ணை ப் பார்த்து நிலவை ப் பார்த்தேன் என்று வான நிலவைக் காட்டினான்.

ஆமாம் அழகுதான் தொட முடியாது என்ற மாதவனின் குரல் கம்மியது.
























21 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் அந்தக்காலம் மட்டுமில்லாமல் எந்தக் காலத்திலும் இப்படியான உறவுகளில் ஏற்றத்தாழ்வுகள் இருந்தால் இணைய விரும்பும் உள்ளங்கள் சஞ்சலத்தில் ஆழ்கின்றன. மாலா --மாதவன் இருவரும் சேரும் நாளை எதிர்பார்க்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ஜோடி சேருமா? தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்...

இனிமையான பாடல்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,

இது ஏற்றத்தாழ்வினால் வந்த துன்பம் இல்லை. மூல நட்சத்திரத்தின் பாதிப்பினால்
வந்தது.

எப்படி இந்தப் பிரச்சினை முடிவுக்கு வருகிறதுன்னு பார்க்கலாம்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் வெங்கட்

அமைதியாக முடிகிறதா. பிடிக்காமல் பூர்த்தியாக
பார்க்கலாம்மா. நன்றி.

ஸ்ரீராம். said...

மறுபடியும் பொருத்தமான பாடல் பொருத்தமான இடத்தில்.   இந்தப் பாடல் நான் இதுவரை கேட்டதில்லை!

ஸ்ரீராம். said...

மாதவன் மாலா காதல் காட்சிகள் மேலோட்டமாக மிக மென்மையாக படிக்க இதமாக இருக்கின்றன.

ஸ்ரீராம். said...

பிரசாத் மனத்திலும் ஏதாவது எண்ணம் இருந்ததா என்று தெரியவில்லை.  மூலநட்சத்திரம் என்றாலே பெற்றோர்கள் தயங்குவார்கள்.ஆண் மூலம் என்றாலுமே கஷ்டம்தான்.எங்கள் வீட்டிலேயே இரண்டு உதாரணங்கள் இருக்கின்றன.

கோமதி அரசு said...

கதையும், அருமையான உரையாடலும், பாடல் பகிர்வும் படிக்க படிக்க நன்றாக இருக்கிறது.
கதையில் நல்ல முடிவையே ஏற்க மனம் துடிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

இது எங்க காலப் பாட்டு ஶ்ரீராம். சிலோன் ரேடியோ வில் அடிக்கடி. கேட்ட நினைவு.

பேசும். விதம் அப்போதெல்லாம் இப்படித்தான். இருந்தது. சொல்ல முடியாத காதலுக்கு. எப்படி. வடிவம் கொடுப்பது.
பிரசாதுக்கு மாதவன் மனம் தெரியும் அதனால்தான் நிலவு சாட்சிக்கு அழைக்கிறான். பார்ககலாம்மா என்ன நடக்கிறது என்று.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா, வலி. தேவலையாமா. நல்லதே. எழுதுகிறேன் மா. கவலை வேண்டாம்:)

நெல்லைத்தமிழன் said...

இந்தப் பழமொழிகளிலெல்லாம் அர்த்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ஆண் மூலம் அரசாண்டதையும் பார்த்ததில்லை. பெண் மூலம் நிர்மூலமானதையும் பார்த்ததில்லை. அவிட்டம் தவிட்டுப் பானை நிறைய தங்கம் என்பதையும் பார்த்ததில்லை. இந்தப் பழமொழியை உருவாக்கினவர்கள், பல பெண்களுக்குக் கெடுதலை உண்டாக்கியிருக்கிறார்கள் அதன்மூலம் அளவிலா பாவம் செய்திருக்கிறார்கள் என்பது நிச்சயம்.

கோமதி அரசு said...

வலி குறைந்து வருகிறது அக்கா.
உங்கள் எல்லோர் விசாரிப்பும், பிரார்த்தனையும் விரைவில் நலம் அடைந்து விடுவேன்.
எல்லோருக்கும் நன்றி.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

படிக்கும் வாசகர் மனத்தில் தாக்கம் ஏற்படுமளவிற்கு அருமையான உணர்வுப் பகிர்வு.

மாதேவி said...

அழகிய மஞ்சள் ரோஜாவுடன் பதிவு மலர்ந்து நிற்கிறது. மங்களகரமாக முடியுமா? பொறுப்போம்......

Geetha Sambasivam said...

பொதுவாக உண்மையான ஜோசியர்கள் சொல்லுவது நக்ஷத்திரத்தைப் பார்த்துப் பொருத்தம் பார்க்க வேண்டாம் என்பதே. அந்தக் காலங்களில் அதாவது சுமார் 100, 200 வருடங்கள் முன்னர் ஜாதகம் பார்ப்பது என்னும் பழக்கமே இருந்ததில்லை எனத் திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் சொல்லுவார். மூல நக்ஷத்திரத்தில் பிறந்து திருமணம் செய்து கொண்டு மாமனார், மாமியாருக்கு சதாபிஷேஹம் செய்து வைத்தவர்கள் உண்டு. பரணி நக்ஷத்திரத்தில் பிறந்து கஷ்டப்பட்டவர்கள் உண்டு.

ஜீவி said...

வாசிப்பவருக்கே மனம் தொய்ந்து போகும் பொழுது மாலாவிற்கு வத்தலகுண்டு போகிறார்கள் என்றதும் எப்படி இருந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை.

//அதையும் கவனித்தான் மாதவன்.

பெற்றோர் சொல்லாவிட்டாலும் அவன் நிலைமையை ஓரளவு யூயூகித்து இருந்தான்.

அவன் மனதிலும் வெறுமை சூழ்ந்தது.//

இந்த மூன்று வரிகளையும் அந்த இடத்தில் நுழைக்காமல்
சஸ்பென்ஸை இன்னும் சில அத்தியாயங்களுக்குக் காத்திருக்கலாம். ஆனால் உங்களாலேயே அதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை என்று தெரிகிறது.

மூல நட்சத்திரத்தை குறிப்பால் உணர்த்தியமை அழகு.

தொடர்ந்து வருகிறேன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முரளிமா.
உத்ராடத்தில் ஒரு பிள்ளையும் ஊர்க்கோடியில் நிலமும்
என்று மாமியார் சொல்வார்.
நிலம் நிலைக்கவில்லை.

நமக்கு இதில் நம்பிக்கை இல்லாவிட்டாலும்
தயங்குபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எங்கள் மருமகளே மூல
நட்சத்திரம் தான். அவரவர் பிறக்கும் போதே
அவரவர் விதி எழுதப் படுகிறது அல்லவா.

இது 60 வருடங்களுக்கு முந்திய கதை.
யாரையும் ப்ரஷர் கொடுத்து திருமணம் செய்ய முடியாது.
நல்ல வேளை வந்தால் நல்லது நடக்கும் மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு முனைவர் ஐயா,

இதெல்லாம் நடப்பவை தானே. மக்கள் மாற வேண்டும்.

இறைவன் எல்லாவற்றையும் கவனித்து நடத்துவான்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி,
அழகான மஞ்சள் ரோஜா அவர்கள் உறவு மலர்வதைக் காண்பிக்கவே.
மற்றவர்களும் அதை அனுசரித்தால் நலமே.
நன்மை விளையட்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
மாமனார் மாமியாருக்கு ஜாதகமே கிடையாது.
அம்மா அப்பாவுக்கும் தான். இவர்களைப் போல சந்தோஷமாக வாழ்ந்தவர்களைப்
பார்த்ததே கிடையாது.
நடுவில் வந்த கோளாறு இவைகள்.
எத்தனை பெண்களின் திருமணங்கள் தாமதமாகின என்று நினைத்துப் பார்க்கிறேன்.

இப்பொழுது இவைகளுக்கு மீறீ எத்தனையோ திருமணங்கள் நடக்கின்றன.
நன்றாகவும் இருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

ஜீவி சார் இனிய காலை வணக்கம்.
என் சின்னப் பாட்டி வீட்டில் நடந்த கதை இது.
இன்னோரு பாட்டிக்கு 11 குழந்தைகள்.
பலவிதமான கதைகள் நிறைவேறிய காலம் அப்போது.

என்னால் சஸ்பென்ஸ் வைக்க மனமில்லை. அப்போதிருந்த மனனிலையை அப்படியே
எழுதிவிட்டேன். உங்கள் எழுத்தாள மனம் கண்டு பிடித்துவிட்டது.

:) மாதவன் மனம் மாறவில்லை எனில் வத்தலகுண்டு என்ன செய்ய முடியும்.
ஸ்திர புருஷன் மாற மாட்டான்.நாளென் செய்யும், கோளென் செய்யும்
பாடல்தான் நினைவுக்கு வருகிறது. நன்றி சார். இத்தனை அழகாக
யார் சொல்வார்கள்.