Blog Archive

Monday, August 26, 2019

நேயர் விருப்பம்

வல்லிசிம்ஹன்
நேயர் விருப்பம் .

தீன் தேவியான் 
படம்  தேவ் ஆனந்த் ,நந்தா நடித்த படம்.  மும்பைக்கு, நாங்கள் சென்று வந்த காலங்களில் பழைய  தியேட்டர் ஒன்றில் 
பார்த்த படம்.
சிங்கத்துக்கு தேவ் ஆனந்த்  என்றால் ஒரு  பரவசம்.
மிகவும் பிடிக்கும். 
இது வெகு நீளமான  படமாக இருந்தது,.
தன்னுடைய இருபதுகளில் இந்தப் படைத்த ரசித்தவருக்கு நிறைய நேரம் உட்கார முடியவில்லை.

பாடல்கள் மிக இனிமை யாக இருக்கும்.
என்னிடைய  சென்னை விடுமுறை பொது விவி த பாரதியில்  கேட்டிருக்கிறேன்.
அட...இந்தப் பாட்டு கூட இந்தப் படத்தில் தானா 
என்று ஆச்சரிய பட்டேன் .

//வாம்மா ,போகலாம், இந்த சத்தம்  எனக்கு ஒத்துக்கவில்லை.
மெ து மெதுவே நடந்து பாந்த்ரா   போகலாம் என்று வெளியே வந்தோம்.

 எனக்கோ கதா நாயகன் தன்னைக் காதலிக்கும் மூவரில் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்று தெரியவில்லையே 
என்றிருந்தது.

அப்பொழுது இணையம் எல்லாம் அவ்வளவு  பழக்கம் இல்லை.1996
என்று நினைக்கிறேன்.

பிறகுதான் மகன் கணினி வாங்கி கொடுத்து ஈமெயில் எல்லாம் கற்றுக் கொடுத்தான்.

வெளியே வரும்பொழுது  மழை பிடித்துக் கொண்டது.
கடற்கரைச் சாலையில் விற்ற நிலக்கடலையை வாங்கி கொறித்தபடி 
தான் மும்பையில் இருந்த பொது பார்த்த படங்கள்,
அப்பாவின் மிரட்டல், அம்மாவின் ஆதரவு எல்லாம் சொல்லிக் 
கொண்டே வந்தார்,

இந்தப் படத்தில்  தேவ  ஆனந்த் 
முதலில்  நந்தாவைச் சந்திக்கிறார். மோதலில் ஆரம்பித்து 
நல்ல தோழியாக அமைவார் நந்தா. படத்திலும் அதே பெயர் தான்.

ஒரே இடத்தில் குடியிருப்பதால நந்தாவுக்கு தேவ் ஆனந்த் மீது ஈர்ப்பு 
ஏற்படுகிறது.
தொழில் முறையில்  அவர் சிமியையும்,கல்பனாவையும் சந்திக்க நேர்கிறது 

இருவரின்  சோகப் பின்னணி  அவரைச்   சிறிது 
சஞ்சலப் படுத்துகிறது.

ஆனால் வெற்றி பெறுவதென்னவோ நந்தாதான் .

இதே பாடலை என்  நாத்தனார் மகளுக்கும் மிகப் பிடிக்கும்.
அவள் கேட்டதற்கு இணங்க இங்கே பதிகிறேன்.


உங்களுக்கும் பிடிக்கிறதா என்று பார்க்கிறேன் 
எல்லோரும் வளமுடன்  வாழ என் பிரார்த்தனைகள்.

இரு பாடல்களையும்  யூ டியூப்பில்தான்  கேட்க வேண்டும்.

இரண்டாவது பாடலில் நந்தா, ஆனந்தைக் கேள்வி கேட்டுத் திணறடிக்கிறாள். 
உன்புத்தகத்தில் ஒரு பெயரை எழுதி இருக்கிறாய்.  நேரெ
பார்க்கும்போது வேறு மாதிரி பேசுகிறாய்.
உன் எண்ணம் தான் என்ன என்று.
நீயீ கண்டுபிடி என்று சவால் விடுகிறான்.
ஏன் எல்லாப் பெண்களும் உன்னிடம் சுற்றி வருகிறார்கள்
என்று கேட்க, எனக்கு உதவி செய்யப் பிடிக்கும் என்றதும் 

இப்போது உன்னைத் தெரிந்து விட்டது என்று சிரிக்கிறாள். இனிமையான படம்.
ஐசே  தொ ந தேகோ// பாடலில்  கதாநாயகியின் பார்வை தன்னை 
மயக்குவதாகச்  சொல்லி,அப்படிப் பார்க்காதே என்று சொல்வது 
அழகு.



13 comments:

ஸ்ரீராம். said...

லிக்கா ஹை தேரி ஆக்கோன் மெயின் பாடல்முதல் தெரிவாகப் பிடிக்கும். கிஷோர்! அப்புறம் அந்த முதல் பாடல். ரஃபி!

தேவ் ஆனந்த் வித்தியாசமான ஸ்டைல் செய்பவர். கொஞ்சம் ஆங்கில நடிகர் ஒருவரை இமிடேட் செய்வாரோ? நான் அவர் படங்களில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, வாரண்ட், அப்புறம் ஓரிரு படங்கள் பார்த்திருக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம்.

உண்மைதான். கிரிகரி பெக் மாதிரி
காலர் வைத்து,அவரை மாதிரி நடப்பார்.
சிங்கம் கூட 15 ,16 வயதில் அப்படி
தன்னை மாற்றிக் கொண்டதாக
அவருடைய அக்கா சொல்வார்.
என் தம்பி ரங்கன்,சிவாஜியைப் பின்பற்றுவான்.
தலை முடியைப் பார்த்து இது எந்தப் படம் டான்னு கேட்பேன்.

வேலைக்குப் போனதும் அதை எல்லாம் நிறுத்திவிட்டான்.1964 யில் //லிகா ஹை// ரிகார்டை மாமா வாங்கிக் கொடுத்தான். அர்த்தம் தெரியாமலியே கேட்டுக் கொண்டே இருப்பேன்.
அவனுக்கு பாலாஜி ,தோழன். நாடகங்களில் நடிப்பார்.
இந்த மாமாவும் அவர்கள் வீட்டுக்குப் போகும்போது
இது போல ரிக்கார்டுகளைக் கொண்டு வருவார்.

Geetha Sambasivam said...

இந்தப் பாடலை அடிக்கடி கேட்டிருக்கிறேன். தேவ் ஆனந்த நடித்த மற்ற பல படங்களையும் பார்த்திருக்கேன். ஹேமமாலினியுடன் நடித்த ஓர் படம் கூட, நினைவில் இல்லை. நல்ல நினைவலைகள். நாங்க மும்பை சென்றதே 90 களில் தான் உறவினர் பலர் இருந்தாலும் போனதில்லை. 90 களில் சென்றதும் மறக்கவே முடியாத ஓர் கதையாக ஆகிவிட்டது.

கோமதி அரசு said...

பாடலை கேட்டு மகிழ்ந்தேன்.
தேவ் ஆனந்த் படங்கள் நிறைய பார்த்து இருக்கிறேன்.
மலரும் நினைவுகள் அருமை.

KILLERGEE Devakottai said...

பழைய நினைவோட்டங்கள் அருமை பாடல் கேட்டேன் அம்மா

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் அருமை அம்மா....

வெங்கட் நாகராஜ் said...

இரண்டுமே இனிய பாடல்கள்.

இங்கே கேட்க முடியாததால் ஒவ்வொன்றாக யூவில் கேட்க வேண்டும்.

நேயர் விருப்பம் சிறப்பு. தொடரட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. மும்பையிலியே பார்த்திருக்கலாமோ.
தே ஆனந்த் ஹேமமாலினி படம் ஜானி மேரா நாம்.
நம் தமிழில் ராஜான்னு வந்தது. ஜெயலலிதா, சிவாஜி.

ரஃபி குரல் மிகவும் பிடிக்கும். அதுவும் இந்தப் பாடலை
தானே மயங்கிப் போவது போல இனிமையாகப் பாடி இருப்பார்.
இன்னோரு பாடல் ஸ்ரீராமுக்குப் பிடித்த கிஷோர்.
உத்சாகத்துக்கு ஒரு பாடல்.
நீங்கள் ரசித்தது எனக்கு மிகவும் பிடித்தது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, எப்பொழுதும் வானொலி கேட்பது
பாடலுடன் ஒன்றிப் போவது இதுவே வழக்கம்.
பார்த்து...பார்த்து....ரேடியோக்குள் தலை போயிடும்னு அப்பா
கேலி செய்வார்.
உங்களுக்கும் இந்திப் பாடல்கள் பிடிக்கும் என்பது மிக மிக மகிழ்ச்சிமா.
எது இனிமையாக இருந்தாலும் நாம் ரசிப்பவர்கள் தாமே.
ஆமாம் மும்பை காலம் இனிமை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவ கோட்டைஜி,
பாடல் கேட்க முடிந்ததா. மிகவும் மகிழ்ச்சி
மா. நன்றி.நினைவோட்டங்கள் என்னை உயிர்ப்பிக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

மிக மிக நன்றி அருமை தனபாலன்.

sarav said...

Teen Deviyan had couple more good songs like Are Yaar meri tum bhi ho gazhab... and Kwaab ho tum ya koi haqeeqat sung by Kishore da
dev anand , Md Rafi combination has lot more beautiful songs ....
like Abhi naa jaavo chodkar ....

as mentioned by you dev saab looks lot more like gregory peck so that's why we feel that he was following Gregory pecks style ...

Nice reading your post will try to read other posts as well

வல்லிசிம்ஹன் said...

Thank you Sarav.
please continue writing.
Ofcourse I love all music. Especially
Are yaar meri and Kwaab tum ya koyi haqeekath
too. they represent my teen years. All Dev saabs songs of 50s and then onwards were my husbands collection. Just by listening to them his memory is with me. Thank you and God Bless.