Blog Archive

Tuesday, July 02, 2019

கடந்த சில நாட்கள்... இங்கே

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமாக வாழ வேண்டும்.

கடந்த சில நாட்கள் ......... இங்கே
++++++++++++++++++++++++++++++++

//Alcohol use disorder. Alcohol use disorder is a medical condition that doctors can diagnose when a patient's drinking causes distress or harm. In the United States, nearly 15 million people have alcohol use disorder.
Beyond these physical and mental health risks, frequent heavy drinking also is linked with personal problems, including losing a driver's license and having relationship troubles.//

இந்த நிலைதான் பக்கத்துவீட்டு அம்மாவுக்கு.
ஏற்கனவே வெயில் மண்டையைப் பிளக்கிறது.
பக்கத்து வீட்டு அம்மா  தன்  ,32 வயது மகனுடன். இருக்கிறார்.
அவரது கணவர் இங்கில்லை.
வேறு திருமணம் செய்து கொண்டு விட்டார்.
தந்தையின் கம்பெனியில்  மகனுக்கு வேலை.
நேற்று மதியம் மகள் தோட்ட வேலை பார்த்துக் கொண்டிருந்த  போது   இந்தப்  பக்கத்து வீட்டுப்  பெண் மரியா 
வந்து ,
//கொஞ்சம் உதவி செய்ய முடியுமா . என் வீட்டில் உள்ளே யாரோ 
புகுந்துவிட்டார்கள். எனக்கு உள்ளே செல்லப் பயமாக இருக்கிறது 
நீ கொஞ்சம் வந்து பார்க்கிறாயா.//என்றாள் 
தனக்கு  உதவி செய்து கொண்டிருந்த  சவுல் என்றவரை அவளுடன் போய்ப் பார்க்கச் சொல்லி விட்டு தன்  வேலையைத் தொடர்ந்த மகளிடம்,
 சாவுல் // அங்கே யாருமே இல்லம்மா,
இந்த அம்மா சுய நினைவில் இல்லை //என்றான்.
மகளுக்கோ அவளப்  பார்த்து பரிதாபம். என்ன ஆச்சு மரியா.
என்று கேட்க, எல்லோரும் சேர்ந்து என்னைக் கொல்லப் பார்க்கிறார்கள்.
நான் சொன்னால் பைத்தியம் என்று சொல்வார்கள் .நீ வா நான் காட்டுகிறேன்,
எங்க அம்மாஇருக்கிறாள்,ஆனால் அவள்  தலையையே காணோம் என்று சொல்லவும் பெண்ணுக்கு கிலி  பிடித்துவிட்டது//
நீ உள்ளே போ. சரியாக உடை உடுத்தவில்லை நீ.
உன் மகனை அழைக்கிறேன்//  என்றதும் 
அவள் போக மறுத்து  வாசலில் நின்று உடலெங்கும் வியர்வை வழிய அடைத்த வாசல் கதவு முன் நின் று யாரையோ   கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
அந்த நிலையிலும் மகன் நம்பரை  ஒழுங்காகச் சொல்லவே என் மகள் அவனை அழைத்தாள் . 
நான் உங்க அம்மாவின் அடுத்தவீட்டு  சோ அண்ட் சோ.
நீ வர முடியுமா. உன்ன அம்மாவின் நிலை விபரீதமாக இருக்கிறது//
என்றதும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருப்பேன் என்று பதில் சொன்னான்  அந்தப் பையன்.
நாங்களும் அது வரை 
அந்த வீட்டின் மேல் கவனம்  வைத்திருந்தோம்.
அவனும் வந்தான் ,
அவனுக்கும் தனி சாவி இருந்ததால்  எளிதாக உள்ளே போக முடிந்ததது 
செடிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த மகள்

அவனிடம் விசாரிக்க, என் பத்து வயதில் இருந்து இதே நிலைதான். வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு  அந்தப் போதையில் வருவாள்.
நல்ல வேலை. நல்ல சம்பளம், நல்ல கணவர் 
எல்லாவற்றையும் இழந்தாள் .
நானும் தனியாகச் சென்று விட்டேன்,
இப்போது, போதை மருந்தையும் //ரம்//என்கிற 
ஆல்கஹாலுடன் குடிப்பதால்  இது போல  நடந்து கொள்கிறாள்.
20 தடவை சிகித்சை கொடுத்தாச்சு.//என்று விரக்தியுடன் சொன்னான்.
மஹா பரிதாபமாக இருந்தது.
பிரென்ச் தேசத்திலிருந்து வந்தவர்களாம் 
நேற்று இந்தப் பதட்டங்களைக் கண்டு என்னை  பிடித்த ரத்த 
அழுத்தத் தலைவலி  இரவு 12 மணிக்கு தான் விட்டது.
அந்த மகனின் முகத்தை நினைத்தாலே மனம் கலங்குகிறது.
இன்று காலை அவன் இங்கிருக்கும் நாயையும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.
அதை நாய்கள் பாதுகாப்பு நிலையத்தில் விடுவானாக இருக்கும்.
நாம் ஒரு அளவைத் தாண்டி கேட்கவும் முடியாது.
யாராயிருந்தாலும் கதவைத் திறக்காதே என்று ஆர்டர் போட்டு விட்டு மகள் வெளியே சென்றாள் .
இறைவன் தான் காக்க வேண்டும்.







16 comments:

ஸ்ரீராம். said...

இப்படியும் ஒரு சூழலா? என்ன பரிதாபம்?கதை தலைகீழாக இருக்கிறதே.... ஆண்களால் வரும் கஷ்டம் இங்கு பெண்ணால்... நீங்கள் ஏன் அம்மா இதற்காகக் கவலைப்படுகிறீர்கள்? விடுங்கள். தத்தம் கருமமே கட்டளைக்கல்.

Geetha Sambasivam said...

தன் வாழ்க்கையைத் தானே நாசம் செய்து கொண்டு விட்டார் இந்தப் பெண். என்ன செய்ய முடியும். இறைவன் தான் நல்வழிக்குத் திருப்ப வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை

திண்டுக்கல் தனபாலன் said...

மன நோய்...

KILLERGEE Devakottai said...

இப்படியும் நிகழ்வுகளா ?

கோமதி அரசு said...

இளகிய மனம் பிறர் துன்பம் கண்டு வருந்துகிறது.
நாம் என்ன செய்வது!
உங்கள் உடல் நலம் முக்கியம் கவலை படாமல் அவர்களுக்கு நல்ல புத்தி வர கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள்.

வருத்தம் போக்க போதை பழக்கம் அது மேலும் வருத்தம்தான் ஏற்படுத்துகிறது.

அங்கு மட்டும் தான் முன்பு இப்படி இருந்தது, இப்போது இங்கும் இப்படி நடக்கிறது.

அன்று தொலைக்காட்சியின் குடியின் தீமையால் ஒரு குடும்பம் சிதறி போனதை குழந்தைகள் நாடகமாய் நடத்தி காட்டினார்கள்.

எத்தனையோ பெரியவர்கள் சொல்லி கேட்காதவர்கள் இந்த குழந்தைகள் சொல்லி கேட்கிறார்களா பார்க்கலாம் என்றார்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அந்தப் பெண் கையில் பணத்துக்குக் குறைவில்லை. குணம் தான் போச்சு.
தனிமை வேறு.
இது வரை எங்களுக்குத் தெரியாமல் இருந்தது. நாலு வீடு தள்ளி இருக்கும் குஜராத்தி தோழியும் சொல்கிறாள்.
அவள் எப்பவும் இப்படித்தான் என்று.

நேற்று முழுவதும் அந்தப் பெண் வந்து விடப் போகிறதே
என்ற கவலை.
அவளுடைய வண்டி சாவியையும்
மகன் எடுத்துச் சென்று விட்டான்.
இது கோடை விடுமுறை என்பதால் குழந்தைகள் தெருவெங்கும் விளையாடிக் கொண்டிருக்கும்.
ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமே.
பகவான் அவளையும் காத்து மற்றவர்களையும் காக்கணும்.
நன்றி ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதா மா.
இது விபரீதம் தான். தனியாக இருக்கிறாள்.
ஊபரில் சென்று, தேவையான எல்லாத்தையும் சாப்பாட்டையும்
வாங்கி வந்து விடுகிறாள்.
நான் கணினியுடன் உட்காரும் அறை அவளுக்குத் தோட்டம் சைட்.
அவள் நிழல் தெரிந்தாலே ஹால் பக்கம் போய் விடுகிறேன்.
ஜன்னல் திரைகளையும் போட்டுவிட்டேன்.
நலமாக இருக்கட்டும் மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கரந்தையாரே. பாவம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன். உலகம் தலைகீழாகிவிட்டது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தேவகோட்டை ஜி.
அவளுடைய அம்மா தன் 86 வயதில் இறைவனடி சேர்ந்தார்.
மகன் சொல்கிறார். நான் தான் தந்தை போலவும் அவள் மகள் போலவும் நிலமை
இருக்கிறது.
ரொம்பப் பாவம் அந்தப் பிள்ளை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. பரிதாபப் படாமல் என்ன செய்வது.
நானும் இது போல நம்மூரில் டிடிகே செண்டரில்
குடிப்பதினால் ஏற்படும் அவதிகளைப் பார்த்திருக்கிறேன்.

குடும்பங்கள் பிரிவதுதான் முதல் படி.
இந்தப் பெண்ணுக்கும் அறுபது வயதுக்குப் பக்கம்.
தானும் கெட்டு மகன் வாழ்வையும்
கெடுத்திருக்கிறார்.
அவன் சுதாரித்துக் கொண்டுவிட்டான்.

இனி அவளை இறைவன் மனது வைத்துக் காப்பாற்ற வேண்டும்.
நாம் என்ன செய்ய முடியும்.

Bhanumathy Venkateswaran said...

உங்களுடைய பதட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறது. படிப்பதற்கே கஷ்டமாக இருக்கிறது, கண்ணெதிரே பார்ப்பது என்றால்? இருந்தாலும் உங்கள் உடல் நலமும் முக்கியம். கவனித்துக் கொள்ளுங்கள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பானு மா,

இந்தக் குடிப்பழக்கம் ஒரு வியாதி. கெமிக்கல்
டிபெண்டன்சி என்று சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் சுயக் கட்டுப்பாடும் வேண்டும் இல்லையா.
அது அவளிடம் இல்லை. அவள் சகோதரனும் அவளை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டான்.
இதோ அவள் அம்மா வைத்த செர்ரி மரத்திலிருந்து
பழங்களைப் பறித்து உண்டு கொண்டிருக்கிறாள்.

தனக்குள்ளேயே ஏதோ பேசியபடி.
நான் சாயிராம் சொல்லியபடி அவள் பக்கம் திரும்பாமல் இருக்கிறேன்.
நன்றி மா.

மாதேவி said...

வாழத்தெரியாமல் போதையில் வாழும் ஜடங்கள்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான்.மாதேவி.
இத்தனை நாட்கள் தெரியாமல் இருந்தது.
மீண்டும் வேலியோரம் நின்று விளிப்பதைப் பார்த்தால்
பயமாகவும் பரிதாபமாகவும் இருக்கிறது.