Blog Archive

Sunday, April 28, 2019

மதுரை அருள்மிகு செல்லத்தம்மன் கோவில் ,Simmakkal

வல்லிசிம்ஹன்
எல்லோரும் வளமுடன் வாழ என் பிரார்த்தனைகள்.

மதுரை  அருள்மிகு செல்லத்தம்மன் கோவில்

திரு துரை  செல்வ ராஜு   அவர்களின் ஸ்ரீ கண்ணகி  காளி
பதிவைப் பார்த்து படித்ததும்
மதுரையில் கண்ணகிக்கு  கோவில் இல்லையா
என்ற துக்கம் ஏற்பட்டது.

அவள் சினத்தால் எரியுண்ட  மதுரைக்காரர்களுக்கு அவளிடம் பயமே  இருந்திருக்குமோ.

மன்னனும், பொற்கொல்லனும் செய்த தவறு
மக்கள் மீது விடிந்தது.

இதை எல்லாம் தாண்டிவந்து, அந்தக் கற்புக்கரசிக்கும் கோவில் கட்ட முனைந்திருக்கிறார்கள் மதுரைக்காரர்கள் .
 ஒரு தடவை கட்டி அந்த இடமே எரிந்து விட்டதாம்.
பிறகு   கண்ணகி அம்மா சிலையோடு
அன்னை பராசக்தியின்  வடிவத்தையும்
ஸ்தாபித்தார்களாம்.  அதன் பிறகு  அந்தக் கோவில் செழிப்படைந்ததாம்.

செண்பகத்தம்மன் மருவி செல்லத்தம்மன்  ஆனதாம்.

என் சித்தி மதுரையில் பிறந்து இப்பொழுதும் மதுரையில் இருப்பவர்.

பழைய காலங்களில் ,நாங்கள் சிறுவர்களாக, அவர்கள் கையில் பிசைந்து போட்ட தயிர் சாதம் சாப்பிடும்போது
பல  மந்திர தந்திர கதைகள் சொல்வார்.
அதில் இந்தக் கதையும் கேட்டிருக்கிறேன்.
இப்போது  கூகிள்  சித்தியிடமும் கேட்ட பொது படங்களுடன் செய்திகள் வந்தன.
இப்பொழுது புரிகிறது , எங்கள் உறவினர்களின் பெண் குழந்தைகளுக்குச் செல்லி என்று
பெயர்  வைத்தார்கள் என்று. எனக்கும் இன்னும் ஒரு தோழி அந்தப் பெயரில் மதுரையில் இருக்கிறாள் .

https://temple.dinamalar.com/en/new_en.php?id=479
இந்த இணைப்பில் படங்களும் புராணமும்
இருக்கின்றன.

ஒரு நிம்மதி. மதுரைக்காரர்கள்  கண்ணகியை
மறக்கவில்லை. கீதா சாம்பசிவம், துரை செல்வராஜு, கோமதி அரசு ,எங்கள்பிளாக் ஶ்ரீராம் அனைவருக்கும்.  நன்றி.

26 comments:

கோமதி அரசு said...

பாடலும் செல்லத்தம்மன் விவரங்களும் மிக அருமை.

ஸ்ரீராம். said...

ஓ... நானும் மதுரையில் இருந்திருக்கிறேன். எனக்கும் தெரியவில்லை. நீங்கள் சொல்லிதான் தெரிகிறது.

ராமலக்ஷ்மி said...

கூகிள் சித்தி மூலமாக அறிந்து தந்த தகவலுக்கு நன்றி. செல்லி இனிய பெயர்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி , போக முடிந்தால் போய் வாருங்கள்.

நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இனிய காலை வணக்கம். கீஈதா சாம்பசிவம் ,துரை அவர்கள் பதிவில் சொல்லி இருந்தார்கள்,
அதனால தான் மதுரை சித்தி சொன்ன கதை நினைவுக்கு வந்தது.

எனக்கும் தெரியாது,இந்தக் கோவில் பற்றி. கூகில் ,தினமலர் சுட்டியைக் கொடுத்தது மா.

வல்லிசிம்ஹன் said...

செல்லி மிகப் பழக்கப்பட்ட பெயர். என் உறவினரைக் கேட்டபோது எங்கள் குலதெய்வத்தின் பெயர் என்றார். அன்பு ராமலக்ஷ்மி அது செல்லா, பொன்னா என்று கூட
பெயர் வைப்பார்கள். நன்றி மா.

Geetha Sambasivam said...

நான் இந்தக் கோயிலுக்கு நிறையப் போயிருக்கேன். இங்கே ஒரு எண்ணெய்ச் செக்கும் (மாடு வைத்து ஆட்டுவது) இருந்தது, அதோடு என் பெரியப்பா, பெரியம்மா எல்லோரும் கொஞ்ச வருடங்கள் இங்கே குடி இருந்தார்கள். அவர்களைப் பார்க்கச் செல்லும்போதெல்லாம் இந்தக் கோயிலுக்கும் போயிருக்கோம்.

துரை செல்வராஜூ said...

தங்கள் அன்பினுக்கு நன்றியம்மா..

மதுரை ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயிலைப் பற்றி நானும் அறிந்திருக்கிறேன்..
ஆயினும் தரிசித்ததில்லை...

தஞ்சை - கரந்தையில் கூட ஸ்ரீ செல்லியம்மன் கோயில் அமைந்துள்ளது..

எனது பதிவு கண்டு மேலதிக தகவல்களுடன் மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி.. வணக்கம்...

துரை செல்வராஜூ said...

>>> அவள் சினத்தால் எரியுண்ட மதுரைக்காரர்களுக்கு அவளிடம் பயம் இருந்திருக்குமோ...<<<

நிச்சயம் இருந்திருக்கும்... அது இயல்பு தானே!...

வெங்கட் நாகராஜ் said...

செல்லி - இந்தப் பெயரில் நானும் ஒருவரை அறிவேன். ஆனால் காரணம் அறிந்ததில்லை.

நல்ல பகிர்வு. நன்றிம்மா...

ஏகாந்தன் ! said...

கண்ணகியின் மதுரை! புதுத் தகவல்கள்..

KILLERGEE Devakottai said...

//கூகிள் சித்தியிடமும் கேட்ட பொது//
ஹா.. ஹா.. ஸூப்பர் ரசித்தேன் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் துரை,
நீங்கள் ஸ்ரீ காளி கண்ணகி என்று விரிவாக ஒரு புனிதப் பதிவைக் கொடுத்திராவிட்டால்
நான் கண்ணகியைத் தேடி இருக்க மாட்டேன் அம்மா.
அவளை நினைக்கும் மனதில் சோகமே மேலுறும்.
இப்பொழுது அதை விட மலினமாகக் குற்றங்கள் பெருகிவிட்டன.

நீங்கள் பதிவிட்ட காளி தேவிதான் தீயவர்களை அழிக்க வேண்டும். செய்வாள் மிக மிக நன்றி மா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா மா. நீங்கள் மதுரையை அறிந்தது போல.
யார் அறிவார்கள். உங்கள் அனைவர் வழியாகவும் எத்தனை நற்செய்திகள் கிடைக்கின்றன.

தெய்வங்களையோ வரலாற்றையோ மறந்தால் நம் வாழ்வு செழிப்பது சிரமமே.பாட்டியும், சித்தியும் டவுன் பக்கம் போனால்
செக்கு எண்ணெய் வாங்கி வருவார்கள்.
வாசனை இதமாக இருக்கும். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
செல்லி எவ்வளவு அழகான பெயர் இல்லையாம்மா.
அவள் அருள் எல்லோரையும் ரட்சிக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன் ஜி, வருகைக்கு மிக நன்றி.
மதுரை என்றும் புதியது.
அதன் வரலாறு பெரியது.
அந்த ஊர் நலம் பெற வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பின் தேவகோட்டை ஜி, எத்தனை நாளைக்கு கூகிள் அம்மா என்று கூப்பிடறது. அதுதான் சித்தி என்றேன்.ரசித்ததற்கு மிக நன்றி.மா.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

நெல்லைத்தமிழன் said...

மதுரையிலிருந்து கண்ணகி கேரளா நோக்கிச் சென்ற இடங்களில் கோவில்கள் இருப்பதாகப் படித்திருக்கிறேனே.... நல்ல தகவல் வல்லிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு வணக்கமும் நன்றிகளும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் முரளிமா.
மதுரையை விட்டு நகர்ந்து சென்ற கண்ணகிப் புயல் அப்போது தமிழகத்தோடு சேர்ந்திருந்த சேர நாட்டுக்குச் சென்று உயிர் துறந்ததாகப் படித்திருக்கிறேன்.

அங்கே கண்ணகி கோட்டம் என்றும் அங்கே கண்ணகியை
சித்ரா பௌர்ணமி அன்று மட்டும் வழிபடுவதாகவும் நினைவு.
2000 வருடங்களுக்கான வரலாறு என்று நினைக்கிறேன். சேரன் செங்குட்டுவன் கட்டிய
கற்கோவில்.

இதெல்லாம் மெரினாவில் கண்ணகி சிலை வைத்த போது
படித்த சமாசாரம்.

Geetha Sambasivam said...

கேரளா குமுளி, தமிழ்நாட்டின் கூடலூர் இரண்டுக்கும் அருகே மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது.சித்ராபௌர்ணமி அன்று தமிழ்நாட்டில் இருந்து கால்நடையாகச் செல்வார்கள். கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதிகம் கெடுபிடிகள் உண்டு. ஆனால் கோயில் இருப்பது தமிழகப் பகுதி எனச் சொல்கின்றனர். சுமார் 5000 மீட்டர் உயரத்தில் உள்ள இங்கிருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளையும் பார்க்கலாம் என்பார்கள். பழனி அருகே தான் கிழக்கு, மேற்கு இரண்டு மலைத்தொடர்களும் சேர்கின்றன. இந்த மலையைத் திருச்செங்குன்றம் என்னும் பெயரில் அழைத்ததாகவும் இங்கிருந்து தான் கண்ணகி கோவலனோடு விமானத்தில் ஏறி மேலுலகம் சென்றதாகவும் ஐதிகம்.

Geetha Sambasivam said...

இது குறித்து ஒரு காலத்தில் மின் தமிழில் விவாதங்கள் நடைபெற்றன.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா,
ஆமாம் கண்ணகி தெய்வம் பற்றி நிறைய படித்தேன்.
மங்கல தேவி ...எத்தனை அழகான பெயர். இதுதானே இடுக்கி பக்கத்தில் இருக்கிறது.

கேரளாவில் மட்டுமில்லாமல் இலங்கையிலும் புத்த தெய்வமாக வழிபடுகிறார்களாம்.
தமிழர்களுக்கு அவள் பத்தினி தெய்வம்.

உங்கள் வழியாக நான் அறிந்து கொள்ள வேண்டியது எத்தனையோ இருக்கிறது.
நன்றி கீதாமா.
கொடுங்கல்லூர் பகவதி வேறு என்று நினைக்கிறேன்.
அவளிடம் கண்ணகி இணைந்ததாகவும் விக்கிபீடியாவில்
படித்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே தமிழ்நாட்டில் தேனியில் மதுரையில் யுஜி படித்தேன் என்றாலும் இந்த விவரங்கள் அறிந்திருக்கவில்லையே.

மிக்க நன்றி வல்லிம்மா இப்போது அறிந்து கொண்டேன்.

துளசிதரன்

கீதா: வல்லிம்மா புதிய தகவல். விவரங்கள் எல்லாம் அறிய முடிகிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசி, நானும் தாத்தா வீட்டிலும், பிறகு பசுமலையிலும் இருந்தவள் தான்.
சேய்த்திரம் எல்லாம் அறிய முற்படவில்லைம்மா.
இப்போது ஓய்வு நேரம் கிடைக்கிறது.
மீண்டும் படிக்க ஆசை வருகிறது. கண்ணகி தேவிக்கு நமஸ்காரம்.
அன்பு கீதா, நன்றி மா.எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் இப்போது.