Blog Archive

Friday, May 03, 2019

சித்திரை ,வைகாசி,ஆனி திருமண மாதங்கள்

வல்லிசிம்ஹன்

எல்லோரும்  இனிதாக வாழ வேண்டும்.

மே  இரண்டு அன்பு அம்பி மாமாவும் ஜெயா மன்னியும் இணைந்த நாள்.
அதற்காக  நாங்கள் ஒரு பட்டாளமே சென்னையிலிருந்து கிளம்பி ஆந்திராவின் குண்டூருக்குப் போனோம் இது 1957 இல்.
 மன்னியின்  அப்பா மிகப் பெருந்தன்மையான மனிதர்.
சுற்றம் சூழ வந்திருந்து வாழ்த்தி அருள வேண்டுகிறேன் என்றதும்.
சினிம்மாப்  பாட்டியின் பிறந்தக மனிதர்கள், , என் வயதொத்த நண்டு சிண்டுகள்.
கோடியகத்து நரசிம்மாச்சாரி தான் வரவில்லை.

முதல் முறையாக அகலப் பாதையில் செல்லும்
ரயிலைப் பார்த்தோம்.
எங்களுக்கு ஓடி விளையாட எதுவாக  நிறைய இடம். ஜன்னலோர நீண்ட இருக்கைகள்.

அந்த ஐந்து  மணி  நேர பயணத்தில்  வெய்யிலிலும்
சுகம் காணும் வயது.
அது ஒரு  மதிய  நேர பயணம்.

மாலை வரும்போது குண்டூரில்  வரவேற்க  ஜெயா மன்னியி ன் அப்பா வந்திருந்தார்.
  அம்பி மாமாவின் மாப்பிள்ளைத் தோழன் க்ளாக்ஸோ  கிட்டு, குண்டூர் வந்தாச்சுடா மாப்பிள்ளே பாடியது நினைவில் இருக்கிறது.

ஆழ்வார் மாமா அனைவருக்கும் இளநீர் வாங்கி கொடுத்ததும் நினைவில் நிழலாடுகிறது.

நானும் தோழி ஆண்டாளும்  அந்த மஹா பெரிய பந்தலை வல ம் வந்து அதிசயித்தோம்.
 அம்பி யும் மன்னியும் அழகுப் பொருத்தத்தில் ஜொலித்தார்கள்.

திருமண நாள் வேகமாக ஓடிவிட்டது.
அடுத்த நாள் எங்களுக்கெல்லாம் பஸ்ஸில் சுற்றுலா. சுற்றி இருக்கும் கோவில்கள் சென்று வந்தோம். மறக்க முடியாதது பானக நரசிம்மர்.மங்களகிரி மலை மேல் உத்ஸாக ஏறி.,
ஈ மொய்க்காத   அண்டா நிறைய இருந்த    பானகத்தை பார்த்து  அதிசயப்  பட்டு  அந்தக் குகையின் பின்புறம் ஏதாவது  வழி இருக்கிறதா, நரசிம்மர் வாய் வழியே   சென்ற பானகம் என்ன ஆச்சு என்று  விசாரம். பாட்டி அதட்டவே ஓடுவதை நிறுத்தினோம்.😃😃😃😃?😃😃

அடுத்து  வந்தது 21 வருடங்கள் கழித்து தம்பி முரளி வசந்தி திருமணம். மே 14.
  பிறகு 17 ஆம் தேதி வரும்  பெற்றோர் திருமண நாள்.

இவர்கள் திருமணத்துக்கு நான் செல்லவில்லை.

நம் கீதா சாம்பசிவத்துக்கும்   அதுதான் திருமண நாள் 

அப்புறம் வருவது  சின்னத்தம்பியின் மண  நாள். மே  31.
அனைவரும் நலமே வாழ இறைவன் திருவருள் நிறையட்டும்.





21 comments:

மாதேவி said...

அனைவருக்கும் இனிய வாழ்துகள்.

ஸ்ரீராம். said...

கீதா அக்காவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்!

தொடர்கிறேன் அம்மா.

நெல்லைத்தமிழன் said...

பானக நரசிம்மர் கோவிலுக்கு நாங்கள் சென்றது நினைவுக்கு வந்துவிட்டது...

மறக்குமுன், கீதா சாம்பசிவம் மேடத்துக்கு திருமண நாள் வாழ்த்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவங்களுக்கு நல்ல ஹெல்த்தும், நிறைய கோவில் தரிசனமும் அவன் அருளட்டும்.

ராமலக்ஷ்மி said...

பழைய நினைவுகள் இனிமை.

மணநாள் காணும் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!

Geetha Sambasivam said...

அது என்ன காரணமோ தெரியலை, ஆந்திராப் பக்கம் கோயில்களில் அஹோபிலம், திருப்பதி, திருமலை தவிர்த்து நாங்க போனதே இல்லை. இனியும் முடியுமானு தெரியலை! பார்ப்போம். இங்கு குறிப்பிட்டிருக்கும் உங்கள் சொந்தங்கள் எங்கிருந்தாலும் அனைவருக்கும் வாழ்த்துகள். சந்தடி சாக்கில் என்னோட மண நாளையும் மறக்காமல் சொல்லிட்டீங்க. நன்றி.

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய வாழ்த்துகள்

கோமதி அரசு said...

நினைவுகள் அருமை.
அதை அழகாய் உங்களால் தான் தர முடியும் அக்கா.

கீதாவிற்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்! வாழ்க வளமுடன்.

மண நாள் காணும் மேமாத அன்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவருக்கும் வாழ்த்துகள்...

Srikala Mohun said...

Thanks akka for remembering your mama/mannis marriage day, so vividly. Feel great to be connected with you.

வல்லிசிம்ஹன் said...

அன்பு மாதேவி, நலமாப்பா.
மீண்டும் எழுத ஆரம்பித்து விட்டீர்களா.
எத்தனை நாட்கள் கடந்து விட்டன உங்கள் எழுத்தைப் பார்த்து.
மிக மிக நன்றி மா.என்றும் நலமுடனிருக்க ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் இரு நாட்களாக வெளி வேலையில்
தாமதமாகப் பதில் சொல்கிறேன்.
கீதாவும் அவர் கணவரும் நீண்ட நல வாழ்க்கை பெற்று சௌக்கியமாக இருக்க என் வாழ்த்துகளையும் இணைக்கிறேன்.நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முரளிமா.
அற்புதமான கோவில். இப்போது வியாபாரத்தலமாக
ஆகிவிட்டது. கடைசியாக 2000ஆவது ஆண்டு பார்த்தேன்.

கீதா சாம்பசிவம் சார் இருவரும் தெளிவான ஆரோக்கியத்தோடு
நல் வாழ்வு வாழ வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராமலக்ஷ்மி, நம் ஊரில் சித்திரை வைகாசிகளில்
நிறைய திருமணங்கள் நடை பெறும்
கோடையின் அனல் கூடத் தெரியாமல் பெரிய பெரிய பந்தல்களைப் பார்க்கலாம்.

உங்கள் திருமண நாளும் வருமோ தெரியவில்லை. எப்போதிருந்தாலும் இல்லறம் செழிக்க என் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா.
கொடும் வெய்யில் ஆந்திராவில். நாங்கள் ஒரு டிசம்பர் மாதம் ஐந்தாறு கோவில்கள் பார்த்து
வந்தோம்.
மட்டப்பள்ளியும் அதில் அடக்கம். பக்தி நிறைந்து வழியும் இடங்கள். கிரிஷ்ணா நதி தீரம் பல மலைக் கோவில்கள்..

நல்ல மார்கழி மாதம் மலையேறாத படி சென்று வரலாம்.
நிறைய தெய்வ தரிசனம் கிடைக்க வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கரந்தையாருக்கு நன்றியும் வாழ்த்துகளும்.

வல்லிசிம்ஹன் said...

என் அன்பு கோமதி,
பள்ளி விடுமுறை நாட்களில் அனைவரும் கூடி மகிழும் விதமாய்ப் பல திருமணங்கள்.
அன்பும் அரவணைப்பும் ,சுற்றம்,நட்பு என்று
மிகுந்திருந்த மகிழ்ச்சி வேளைகள்.

நன்றி மா. இது போல அன்பு எப்பொழுதும் நிலைக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
நலமா ராஜா. என்றும் நல் வாழ்வு கிடைத்து பூரண மகிழ்ச்சியுடன் இருக்க என் ஆசிகள்.

வல்லிசிம்ஹன் said...

Dear Kalakutty,
they were my dearset souls apart from my parents.
I owe my my happiest childhood memories to them.
Now you kids are there to boost akkas writings.
God Bless you and Rohini both with long life and Happiness.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மாதத்தின் சிறப்புகளை அறிந்தேன். பல அறியாதனவும் அறிந்தேன்.

Thulasidharan V Thillaiakathu said...

மே மாதத்தில் நிறைய கல்யாணங்கள் நடந்திருக்கிறது போலும் உங்கள் குடும்பத்தில்.

வாழ்த்துகளுட்ன சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கு/கீதாக்காவுக்கு

அட்வான்ஸ் திருமண நாள் வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்

துளசிதரன், கீதா

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் அன்பு துளசி ,கீதா.கல்யாண மாதம் இது. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும்.
நன்றி மா.