Blog Archive

Sunday, September 16, 2018

சீதையின் முகத்திலே சிரிப்பு வந்ததோ....

Vallisimhan

தேவகிக்கும் ரங்கனாதனுக்கும் பிறந்த  முதல் பெண் குழந்தை சீதா.
அதன் பிறகு பிறந்தவர்கள்  சேஷனும்  மாதவனும்.

 ரங்க நாதனின் அம்மா முதல் பேரக்குழந்தை பிறக்கப் போகிறது என்றதுமே

ராமாயணத்திலிருந்து பெயர்  வைக்க வேண்டும் என்று விட்டார்.
சரி பிள்ளை பிறந்தால் ராமன் ,பெண் பிறந்தால் சீதை  என்று தீர்மானம் ஆனது.

வைகாசி மாத இளவேனில் காலையில் ஒரு வியாழன் அன்று 
பிறந்தது பெண்தான். அம்மாவைப் போலவே  கரு கரு வென்று
சுருட்டை முடியும், அப்பாவின் நிறமும் கொண்டிருந்த பெண்
பாட்டியை மயக்கிவிட்டாள்.

தாத்தாவோ மைதிலின்னு வைத்தால் என்ன.இல்லை, ஜானகின்னு 
சொல்லலாமே   என்றால் பாட்டி மறுத்துவிட்டார்.

சீதா அழகு வடிவமாக வளர்ந்தாள்.
மேலும் மேலும் படித்துக் கொண்டே இருந்தவள், வரலாற்றில்
 பிஹெச் டி வரை படிக்கும் போது 24 ஐத் தொட்டுவிட்டாள்.
அதுவும் அவள் செய்யும் ஆராய்ச்சி, கோவில்கள், கட்டிய அரசர்கள்,
அவர்களைப் பற்றிய கல்லெழுத்து என்று ஆவணப் படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
இந்தியா முழுவதும் சென்று வரும்  வேளையில், துணைக்கு
அப்பாவும் செல்வார்,.

செல்லிப் பாட்டிக்கு இத்தனை அழகும் அனுபவிக்க ஒரு மன்மதன் வரணுமே, இது இப்படி

கோவில் கோவிலாகப் போய் என்ன சாதிக்கப் போகிறது.
என்றெல்லாம் விசாரப் பட்டாள். 
 தேவகிதான் சமாதானப் படுத்துவாள். 
அவள் எல்லாரையும் போல இல்லை அத்தை.
பெரிய பெரிய ஆராய்ச்சியாளர்களெல்லாம் அவளைப் பார்க்க வருகிறார்கள்.
இவளும் அவர்களுக்கு நிகராப் பேசி விவாதம் செய்யறா.
செய்யட்டுமே. தனக்காப் பிடித்த போது தானே மணம்
புரிந்து கொள்ளட்டும்.
இது போல ஆர்வத்தை நாம் தடை போடக் கூடாது. என்றெல்லாம் சொல்லி
ஆறுதல் சொல்வாள்.
.சீதைக்கு ஏற்ற ரகுராமனும் வந்தான்.  தொடரும்.

No comments: