Vallisimhan
சீதாவின் அகழ்வாராய்ச்சி குழுவுக்கு சுற்றுலா செல்ல ஹரப்பா /சிந்து வாய்ப்பு
கிடைத்தது. வெளி நாட்டிலிருந்தெல்லாம் வந்து அங்கே முகாமிட்டிருந்தார்கள்.
முக்கால்வாசி கண்டுபிடிக்கப் பட்ட அகழ்வுகளிலிருந்து கிடைத்த தகவல்களே
மிக அதிகமாக இருந்தது.
அந்த நாகரீகம் இன்னும் எல்லோரையும் ஈர்த்துக் கொண்டிருந்தது.
எல்லோரும் ஒவ்வொரு விதமான துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் கலாசாரம், பொருளாதாரம், போக்கு வரத்து, ஆயுதங்கள்,
அவர்கள் காலமும் மஹாபாரதக் காலமும் ஒன்றா என்று வெவ்வேறு
வித ஆராய்ச்சிகள்.
பார்க்கப் பார்க்கப் பிரமித்துப் போனாள் சீதா.
இதுவரை செய்த ஆராய்ச்சிகளீலேயே பிரம்மாண்டமானது.
அவளுக்கு முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டியது, மஹா பாரதத்துக் காலமும்
சிந்து சமவெளி நாகரீகமும் ஒன்று தானா.
துவாரகையில் கண்டெடுத்த கண்ணன் உலகத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு.
வருடங்கள் கணக்கில் ஒத்து வருவதாக முந்தின ஆராய்ச்சிகள்
சொல்லிக் கொண்டிருந்தன.
வந்திருந்த குழுக்களில் ஒரு குழு மரிஷியஸ் தீவிலிருந்து வந்தவர்கள்.
அதில் ஒருவன் தான் ரகுராம் ஜகன்னாதம்.
அவனது முன்னோர்கள் குஜராத்திலிருந்து 100 வருடங்களுக்கு முன்பெ
மாரிஷியஸ் சென்று விட்டனராம். கொஞ்சம் ஹிந்தி தெரியும்
போல இருந்தது. ஃப்ரென்சும் ஆங்கிலமும் நன்றாகப் பேசும் மொழியாக இருந்தது.
இந்திய பாரம்பரியம் தெரிந்து கொள்ளவே இந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துப்
படித்ததாகவும், தான் படித்த கல்லூரியிலேயே பேராசிரியராக இருப்பதாகவும்
அவனுடன் பேசிய போது தெரியவந்தது.
இதுவரை ஆராய்ச்சி, அதைப் பற்றி எழுத்து, ,கட்டுரைகள் அனுப்புவது
என்று மும்முரமாக இருந்ததில்
வேறெதிலும் நாட்டம் இல்லாமல் இறுகலான முகத்துடன்
உலவிக் கொண்டிருந்த சீதாவின் மனமும் கொஞ்சம் இளகியது. தொடரும்
No comments:
Post a Comment