Blog Archive

Thursday, April 05, 2018

மாசி மாதக் கதைகள்

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்

 மாசி மாத வற்றல் வடாம் கதையல்ல. சீனு இன்னும் நம் வீட்டுக்கு
இலை வடாம் ,மற்றும்  ஜவ்வரிசி வடகம் ,மாவடு எல்லாம் கொண்டு வந்து
கொடுப்பவர். நன்றாகவே இருக்கிறார்கள்.
அவருக்கு
70 வயதாகிறது. ஜயம்மாவுக்கு 65.இப்பொழுது  உதவி செய்பவர்கள்
இருக்கிறார்கள். இருக்கிற இடத்தை வாங்கிக் கொண்டு விஸ்தரித்தார்கள்.

கீதுவும் மாதவன், செங்கமலம் பக்கத்து அபார்ட்மெண்டை
வாங்கிக் கொண்டார்கள்.
கீதுவின் பேரன்,பேத்திகள் நல்ல பள்ளிகளில்
படிக்கிறார்கள்.
ஆனாலும் எல்லோருக்கும் வாய்க்கு ருசியாகப் பலகாரங்கள், உணவு
கொண்டு வந்து கொடுப்பது எல்லாம் நடக்கிறது.

செய்வது ஒரு குழு. கொண்டு போய்க் கொடுப்பது ஒரு குழு.
வெவ்வேறு இடங்களில் நடக்கும்படியான  அமைப்பு.

எளிமை அவரை விடவில்லை. உழைப்பில் தோய்ந்த முகம்.
வலுவேறிய கைகள். ஜயம்மா, உடல் பருக்காமல்
அதே அழகுடன் ,முதிர்ந்த முகத்துடன் இருக்கிறார்.
இன்னும் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை.வாழ்க வளமுடன்.

9 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எப்பொழுதும் நன்றாகவே இருப்பார்

வெங்கட் நாகராஜ் said...

நலமாகவே இருக்கட்டும்.

தொடர்கிறேன் மா.

ஸ்ரீராம். said...

சுபம்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன் : பல நாட்கள் ஆயிற்று தங்கள் தளம் வந்து. வல்லி அம்மா நலம் தானே? பணி ஓய்வு பெற்றதால் சென்ற மாதம் கொஞ்சம் வேலைப்பளு. பழைய பதிவுகளின் கதை எல்லாம் அறிந்தேன். அந்த உண்மைச் சம்பவங்களில் வரும் அன்பான மனிதர்கள் இப்போது நலமுடன் இருப்பது பற்றி இங்கு குறிப்பிட்டுள்ளீர்கள் இல்லையா. எல்லோரும் எப்போதும் மகிழ்வுடன் இருக்கட்டும். பிரார்த்திப்போம்.

கீதா: எல்லோரும் இப்போது நன்றாக இருப்பது கேட்டு மிக்க சந்தோஷம் வல்லிம்மா. அன்புடன் சேர்ந்த உழைப்பின் பலன் இது. நல்லதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
அன்பு வெங்கட்,
அன்பு ஜெயகுமார் மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன், தங்கள் ஓய்வு நாட்கள்
தங்கள் எழுத்தை வளம் பெறச்செய்யட்டும்.

தங்கள் பதிவுகளைப் படிக்கக் காத்திருக்கிறேன்.
ஆமாம் அந்தக் குடும்பம் நாணயத்துடனும் நேர்மையாக வளமாக இருக்கிறார்கள்.

@ கீதாமா, நல்லபடியாக இருப்பர்கள். உழைப்பு பொய்த்ததாக வரலாறே இல்லையே.

கோமதி அரசு said...

உழைப்பு உயர்வு தந்து விட்டது.
இன்னும் உழைப்பு கேட்டு மகிழ்ச்சி.
நலமாக இருக்கட்டும், வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி மா. அடக்கமான தம்பதிகள்.
நான் சென்னையில் இருக்கிறேன் என்றால்
உடனே பார்க்க வந்துவிடுவார் ஜயம்மா.
ஏதோ ஒரு பந்தம்.நன்றாக இருக்கட்டும்.

Geetha Sambasivam said...

உழைப்பாளிகள், பழசை மறக்காமல் வாழ்வது அழகு.