Friday, April 06, 2018

தொடரும் வைத்தியங்கள். வாழ்க்கையின் சுவாரஸ்யம்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
           பழைய கால முழங்கால் வலிக்கும் ,இப்போது
எடுத்துக்கொள்ளூம்  பயிற்சிகளுக்கும் வித்தியாசம் இல்லை.,
அப்போது ஆழ்வார்பேட்டை வைத்தியர் சொன்னதையே இன்று
இந்த கொரிய டாக்டரும் சொன்னார்.

நீங்க ஏன் வலது பக்கமே விழுகிறீர்கள்  என்று யோசித்தீர்களா. என்று கேள்வி
கேட்டார்.
வலது முழங்கால் சரியில்லையோ  என்று கேட்டேன்.
அங்கதான் தப்பு செய்கிறீர்கள்.

உங்கள் இடது முழங்காலே காரணம்.
உங்கள் முதுகுத் தண்டில்  அந்த அழுத்தம் தெரிகிறது.
என்றாரே பார்க்கணும்.
1997 லிருந்து வருடம் தோறும் பூமா தேவியைக் கையினாலும்
முகத்தாலும், முழங்காலாலும், வணங்கி வந்திருக்கிறேன்.

2017இல் விழவே இல்லை.நல்லதைச் சொல்லணும் இல்லையா.
 கீழே கொடுத்திருப்பது
2012 இல் நம்மூர் வைத்தியர் சொன்னது.

////////////////எலும்பு வைத்தியரிடம் போகவேண்டிய கட்டாயம்..
 ஆழ்வார்ப்பேட்டையிலியே இருந்திருக்கிறார்.
இதை இன்னோரு நண்பர் சொல்லித் தெரிந்து கொண்டு  நேரமும்  குறித்துக் கொண்டு
போனோம்.

ஒன்றுமே சேய்யவில்லை. முழங்காலையும், குதிகாலையும் முன்னும் பின்னும் ஒரு அழுத்தம் கொடுத்துப் பார்த்தார்.
அலற இருந்த   வாயைக் கட்டினேன்.
பிறகை முதுகில் எலும்பில் கைவைத்து அழுத்தி இப்ப கால்,''வலிக்கிறதாம்மா''
என்று கேட்டார். அதிசயம்!!  ஆனல் உண்மை. வலிக்கவே இல்லை.

உங்கள் வலிக்கு எல்லாம் காரணம் நீங்கள் 2000இல்  உங்கள்  முதுகு தரையில் பட விழுந்ததுதான்''என்றாரே பார்க்கணும். அதிலிருந்தே உங்கள்   தசைகள் இறுக்கமாகி விட்டன.
வலது பக்கமாக நீங்கள் விழுந்ததால் வலது முழங்காலும் ,பாதமும்
பலவீனமாகிவிட்டன'' நீங்கள் அடிக்கடி விழுவதற்கும்  அதுவே காரணம்.

தசை  நார்கள்   பலப்பட  ஃபிசியோதெரபி   எடுத்துங்கள்.  30 நாட்களீல்  பயமில்லாமல் நடைப் பயிற்சிக்குப் போகலாம் என்று சொன்னதுதான்  ஹைலைட்.
11 வருட முழங்கல் வலிக்குப் பின்னால் இத்தனை பலமான  காரணம்
இருக்கிறதா என்று அதிசயமாக இருந்தது.

கால் வலித்தாலும் நடந்தால்தான் கொழுப்புச் சத்து குறையும்.குறையாவிட்டல் நான் பொறுப்பில்லை என்ற   சர்க்கரைக்கான வைத்தியர் கிளப்பின பயமே என்னைக் காலுக்கான டாக்டரிடம் துரத்தியது.
காரணம் தெரிந்துவிட்டது. இனி பீடு நடை போட்டு ப் பழக வேண்டியதுதான்..
ஏற்கனவே நானானி சொன்னது போல நடைப் பதிவாளர் சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்.
அப்போது தினமுமே பதிவர்கள் மீட்டிங் நடக்கும். நடப்பதால் பதிவுலகமும் ஆரோக்கியமாக இருக்கும்.:)

ஆமாம், மேலே போட்ட படத்திலிருப்பவருக்கும் ,பதிவுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால்  அவர்தானே எங்க வீட்டுக் காரரும், வாகன ஓட்டியுமா அவதாரம் எடுப்பவர்:)
Add caption

19 comments:

ஸ்ரீராம். said...

முதுகு கீழே பட விழுந்ததுதான் முழங்கால் வலிக்குக் காரணமா... இப்படி யோசித்துப் பார்க்கவே இல்லை. சீக்கிரம் குணம் அடைய பிரார்த்தனைகள்.

கரந்தை ஜெயக்குமார் said...

இனி பீடு நடை போடத் தொடங்குங்கள் சகோதரியாரே

கோமதி அரசு said...

அக்காவிற்கும், தங்கைக்கும் ஒரே பிரச்சனைதான்.(கீழே விழுவது)
தரையைப் பார்த்து நடக்க மாட்டாயா? என்பது தான் சார் சொல்லும் வசனம்.
நானும் எல்லா மருத்தவர்களியயும் பார்த்து கடைசியில் ஒரு டாகடர் சொன்ன நடைபயிற்சியை மட்டும் இப்போது கடைப்பிடிக்கிறேன்.
உடலை வருத்திக் கொள்ளாத உடற்பயிற்சி செய்து வருகிறேன்.
வாழ்க்கையின் அனுபவ பதிவுகளை பகிர்ந்து வருவது அருமை.
உங்கள் இருவர் படமும் அருமை. எப்போதும் சார் இருப்பது போல் தான் தோன்றுகிறது.
நினைவுகளில் வாழ்வதால்.

நெ.த. said...

இதைப் படித்தபின்புதான் நானும் கழுத்து வலிக்கு மருத்துவரைப் பார்க்கச் செல்வதுநினைவுக்கு வந்தது. இதற்கும் பத்து வருடங்களுக்கு முன்னால் துபாய் ஹோட்டல் குளியலறையில் வழுக்கி விழுந்ததுதான் காரணமாயிருக்கும்.

Thulasidharan V Thillaiakathu said...

துளசிதரன்: வல்லிம்மா உங்கள் கால் வலி எல்லாம் சரியாகி நன்றாக நடந்திட பிரார்த்தனைகள். இப்போதும் ஃபிசியோதெராப்பி போவதாக அறிந்தேன். வீழ்வேனா இனி?! இல்லையா வல்லிம்மா?

கீதா: வல்லிம்மா ஒரு வயதிற்கு மேல் கீழே விழுந்தால் அடி பட்டால் ஏதேனும் ஆர்த்தோ ப்ராப்ளம் வந்துவிடுகிறது. சிறுவயது என்றால் சீக்கிரம் சரியாகிவிடுகிறது. ஒரு வயதிற்கு மேல் என்றால் மெதுவாகத்தான் ஆனால் சரியாகிவிடும். உங்கள் கால் வலி 11 வருடங்கள் என்பது கேட்டு எப்படிச் சமாளித்தீர்கள்!! வில்பவர்!! நம்பிக்கை! சூப்பர் வல்லிம்மா...

பாருங்கள் எல்லாம் சரியாகிவிடும்! பிரார்த்தனைகள் வல்லிம்மா..

ராஜி said...

விரைவில் குணம் பெற இறைவனை பிரார்த்திக்குறேன்

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
உண்மைதான். டாக்டர் புகழேந்தி அப்படித்தான் சொன்னார் .ஸ்பார்க் செண்டரில்
ஒரு மாதம் போய் பயிற்சிகள் கற்றுக் கொண்டு அங்கேயும் விழுந்து விட்டு வந்தேன் ஹாஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி அன்பு ஜெயக்குமார்.
நடந்தால் தான் இனி வாழ்க்கையே. வைத்தியருக்குக் கொடுத்து
கரியாகிறது காசு.

Avargal Unmaigal said...


நடைப்பயிற்சி தனியாக செல்வதுதான் நல்லது அப்போதுதான் நம்க்கு தகுந்த வேகத்தில் நடக்க முடியும் அதுமட்டுமல்லாமல் நன்றாகவும் சிந்திக்கவும் முடியும். குருப்பாக சென்றால் ஒருதருக்கு ஒருத்தர் அட்ஸ்ஸ்ட் செய்யனும் அதுமட்டுமல்ல நடைப்பயிற்சி முடிந்ததது வாங்களே அப்படியே நம் வீட்டில் ஒரு வாஉ காபி குடிக்கலாம் என்று சொல்லுவோம் சரி என்று காபி குடித்து சற்று பேசி வரலாம என்று நினைத்து போனால் கூப்பிட்டவர் காபி மட்டும் கொடுத்தால் நன்றாக இருக்காது கூடவே சாப்பிட ஏதாவது ஒரு ஜங்க் புட் ஸ்நாக் தருவார்கள் அதையும் நாம் நாகரிகம் கருத்தி சாப்பிட்டு வைப்போம் அதனால் நடைபயிற்சியால் இழந்த கலோரியை விட இப்படி நாம் சாப்பிடும் ஐட்டங்களினால நம்மக்கு அதிக கலோரி ஏறிவிடும் அதனால் கொழுப்பு குறையாது....

வல்லிசிம்ஹன் said...

அன்பு தங்கை கோமதி. இனி விழக் கூடாது.
சார் சொல்வதை சிங்கமும் சொல்வார். தரையைப் பார்த்து
நட என்று. தரையைப் பார்த்தால் எதிரில் வருபவர் மேல மோதிக்க மாட்டொமா..

சின்ன கல் கூட தடுக்கி விடும். அதெல்லாம் தனி பகுதிகளாக எழுதணும் அம்மா.
ஜாக்கிரதையாக நடக்கவும்.
சார் கூடவே நடங்கோ. தனியாக வேண்டாம்.

நீங்கள் சொல்வது சரிதான் எப்பவும் கூடத்தான் இருக்கிறார்.
ஜன்ம பந்தம்.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துளசிதரன்,
கவனம் இன்மையே விழுவதற்குக் காரணம். வெளியே சென்றால்
வேடிக்கை பார்ப்பது ஒரு காரணம். நடைப் பயிற்சியின் போது அது தப்பு இல்லையா. இனிக் கவனமாக இருக்கத்தான் வேணும். இந்த வலியை யார் தாங்குவது. நன்றி ராஜா. வாழ்க வளமுடன்.

அன்பு கீதா,1997 இல் வீட்டுக்கு முன்னால் பள்ளம் தோண்டியிருந்தார்கள். அந்தப் பலகை ரொம்ப சிறியது. அப்போ ஆரம்பித்தது இந்த பிரச்சினை.

இனி தாங்காது. கவனமாக இருக்கிறேன். நன்றிம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ராஜி. நண்பர்களே என் உண்மையான சொத்து. உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கும். நன்றி கண்ணா. வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெ.த. 2013இல்
ஒரு தடவை தோழிக்கு, ஏதோ வாங்க கடைக்குப் போனபோது அதன் க்ரில் கதவில்
சுண்டு விரல் மாட்டி நசுங்கியது.
அவள் பதறிப் போய் ஐஸ் வைத்து எல்லாம் சரிசெய்தாள். வைத்தியர் விரல் முறிவு என்று வைத்தியம் செய்தும் இன்னும் அது கேள்விக்குறி போல்
வளைந்தே இருக்கிறது. அந்த வலி தோள் வரை நீடித்தது.
டாக்டர் பதில் you are well connected. hahaha.// in half treatment he left for his holidays.
I am the loser. the previous Devaki hospital in luz church road.

நான் சொல்ல வருவது எந்த வலியையும் அப்படியே விட வேண்டாம் என்கிற பொன் மொழி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு துரை, நான் சொல்வது வயதானவர்களுக்கும்
ஏற்கனவே வலி உள்ளவர்களுக்கும்.
40 வயதில் நான் சென்னையில் யாரோ ஏதோ சொன்னார்கள் என்ற கோபத்தில்
ஃப்ளவர் பசாரிலிருந்து வீட்டுக்கு நடந்தே வந்தேன்.

கண் சிகித்சைக்குப் பிறகு இன்னும் பாதை சரியாகத் தெரிவதில்லை.

நீங்கள் சொல்வது இளைஞர்களுக்கு சரியே.
நடைக்குப் பிறகு அப்படி எல்லாம் சாப்பிட்டால் கலோரீஸ் கூடத்தான் செய்யும்.

உங்கள் நடைக்கு என் வாழ்த்துகள் ராஜா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

விரைவில் குணம் பெற்று, இயல்பு நிலைக்குத் திரும்ப இறையருளைப் பரவுகின்றேன்.

Anuradha Premkumar said...

நலம் வாழட்டும் அம்மா..

நீங்க புத்துணர்வோடு எழுதுவதை படிக்கும் போதே..எங்களுக்கும் அந்த பலம் வருகிறது..

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு, நல்லமனம் படைத்த தம்பதிகள். எத்தனையோ
குழந்தைகளுக்குக் கல்வி உதவி செய்கிறார்கள்.
வாழ்க வளமுடன் அனும்மா.

வெங்கட் நாகராஜ் said...

விரைவில் குணம் அடைய எனது பிரார்த்தனைகள்.

Geetha Sambasivam said...

ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு காரணம். என்னவோ போங்க! நாங்க மொட்டைமாடியில் தான் நடைப்பயிற்சி செய்வோம். தெருவில் செய்வதில்லை. போக்குவரத்துதான் காரணம். அம்பத்தூர் வீட்டிலும் மொட்டைமாடியே நடைப்பயிற்சிக்கு! அங்கே இன்னமும் கடுமையான போக்குவரத்து! ஆட்டோக்காரங்க கண், மண் தெரியாமல் வருவாங்க!