எல்லோரும்
இனிதாக வாழ வேண்டும்
குளியலறையில் வயதானவர்கள் மயங்கி விழுவதேன்.
பல் காரணங்கள்.
1,
சர்க்கரை அளவு ..அதிகமாக இருப்பதோ ,குறைவாக இருப்பதோ.
2,
இரத்த அழுத்தம் அதிகம் ,அல்லது குறைவு,
3
முந்தின நாள் ஜீரணம் சரியாக இல்லாமல், இழந்த நீர்ச்சத்து,
4,
தூக்க மருந்து உட் கொள்பவர்களின் தூக்கம் தடை படும்போது.
5, இருமலுக்கான ஸிரப் அதிக அளவில் உட்கொண்டு
ஒருவித மயக்கத்தில் இருப்பது.
6,கடைசி எல்லோருக்கும் பொருந்தாது.
Aneurism...முன்பே தலையில் அடிபட்டவர்கள், வேறு விதமான
சங்கடங்களால் ,உடலில், ரத்தத்தில் உலவும் விபரீதமான
இரத்தக் கட்டி.
இனி விளைவுகளைப் பார்க்கலாம்.
இவை எல்லாமே மயக்கத்தில் கொண்டு விடுவதில்லை.
பகலில் விழுந்துவிட்டால் ,சத்தம் கேட்டு வந்து காப்பாற்றப் படும் சாத்தியம்.
இரவாக இருந்தால் விழுந்தபிறகு எங்கிருக்கிறொம் என்று தெரியாத நிலை.
இறைவன் அருளில் எனக்கு பத்து நிமிடங்களில் விழிப்பு வந்ததாக நினைக்கிறேன்
உடல் அசைக்க முடியவில்லை. என் வாழ்க்கையில் இரது வரைக் காண்பிக்காத தைரியம் எங்கிருந்தோ வந்து ,குளியலறையின் வாசலுக்குக் கொண்டுவிட்டது.
வைத்தியர் சொன்ன அறிவுரை.
எப்பவும் அலர்டாக இருக்க ஆக்சிஜன் தேவை. நிதானத்தைக் கடைப்பிடியுங்கள்.
கழிப்பறை வேலை முடிந்ததும் உடனே எழும்பவேண்டாம். ஆஸ்வாசப் படுத்திக்கொண்டு,
பக்கத்தில் இருக்கும் நகராத பொருட்களைப் பிடித்து எழுந்து நின்று,
தீர்க்கமாக மூச்சு விடவேண்டும்.
பிறகு மெதுவே நடந்து வெளியே வரலாம்.
பாத்டப் எங்காயாவது தலையில் இடித்திருந்தால் ரத்தக் காயம் நிச்சயம். உடனே
உதவி தேவை.
அடுத்த ஸ்டெப் எமெர்ஜென்ஸி போவதுதான். எங்கே அடிப்பட்டிருக்கிறது, எலும்பு முறிவு இருக்கிறதா,. ஸ்கான் அவசியமா என்றேல்லாம் வைத்தியர்கள் தீர்மானிக்க வேண்டும்.
வயதானவர்களின் குளியறையில் த்ண்ணீர் தேங்கக் கூடாது. இந்த ஊரில் அந்தப்பிரச்சினை இல்லை.
நம் ஊரில் உண்டு.
டாய்லெட் இருக்குமிடத்தைச் சுற்றி என் மகன் கம்பி போட்டு வைத்து இருக்கிறான் ..சென்னையில்.
குளிக்கும் இடத்திலும் அவ்வாறே.
கீழே வழுக்காத தரை.
தினம் மூச்சுப் பயிற்சி.
நிதானமான அழுத்தமான நடை,
அடிக்கடி நீர் பருகுதல். படுக்கும் முன் இதமான பால்.
அதிக வருத்தம் ,கவலை எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு,கடவுள் பிரார்த்தனை.
என்னக்குத்தெரிந்ததைச் சொல்லி இருக்கிறேன். மருத்துவர்கள் இன்னும் அழகாகச் சொல்வார்கள். நலமே வாழ்க..

10 comments:
நள்ளிரவில் பாத்ரூம் பக்கம் போகும்போது யாருக்கும் தெரியாமல் போகிறது. அப்படி இல்லாமல் யாருக்காவது சொல்லி விட்டுப் போவது நல்லது. தனியாக இருக்கும் நிலையில் இது சாத்தியம் இல்லை. வழுக்காத தரை முக்கியம். சுற்றிலும் பிடித்துக் கொள்ள பிடிமானக் கம்பி நல்ல ஐடியா. பாத்ரூம் கதவு உட்புறம் தாழிடப்பட்டு 15 நிமிடங்களுக்கு மேலானால் வெளியில் ஒரு அலார்ம் அடிப்பது போல செட் செய்யலாம். வயதானவர்கள் எப்போதுமே பாத்ரூம் கதவை உள்ளே தாழிடாமல் செல்வது நல்லது.
குளியலறைக்கு காலையில் வயதானவர்கள் போகும் போது கதவை தாழ்பாள் போட கூடாது என்றும் சொல்கிறார்கள்.
முதியோர் இல்லத்தில் குளியலறையில் உட்புறம் பூட்ட முடியாது. எல்லா அறைகளிலும் காலிங்க் பெல் வைத்து இருக்கிறார்கள் உதவிக்கு அழைக்க.
படுக்கையை விட்டு எழுந்து கொள்ளும் போதும் எழுந்து சிறிது நேரம் அமர்ந்து விட்டுதான் எழுந்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.
நீங்களும் கவனமாய் இருங்கள்.
நல்ல பதிவு.
இதைப் பற்றி நானே உங்கள் இடுகையில் பதிலாக எழுதணும்னு நினைத்தேன். அப்புறம் எழுதலை.
டிசன்டிரி இருந்தால் (45+ வயசு), அவங்க பாத்ரூமிலிருந்து எழுந்து வரும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும். பிரஷர் இம்பாலன்ஸ் இருக்கும். பேதி மாத்திரை சாப்பிடுபவர்களும் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும். அதேபோல் குளித்துவிட்டு வரும்போது, உடம்பு அயர்ச்சி ஜாஸ்தியாக இருக்கும். அதனால் வெளியில் வந்து ஃபேன்/ஏசியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ளவேண்டும். அப்புறம்தான் அடுத்த வேலை.
பெரியவர்களுக்கு எலும்பு முறிவு (பாத்ரூமில் வழுக்கி) எளிதாக வரும். அதனால் கண்டிப்பா பாத்ரூம் வழுக்காமல் அதற்கென உரிய பிளாஸ்டிக் ஷீட் போடணும். (குளியல் தொட்டியில் ஹோட்டல்களில் போட்டிருப்பார்கள்). தங்களுக்குத் தேவையானவற்றை (சௌகரியம், உடல் நிலை) 60 வயது ஆன உடனேயே தாங்கள் இருக்கப்போகும் வீட்டிற்குச் செய்துவிடவேண்டும். (உதாரணம், டாய்லட் சுற்றி எவர்சில்வர் கைப்பிடி-அதன் மீது பிளாஸ்டிக் குழல். வயதான எழுந்துகொள்வது கடினம்-வெஸ்டர்ன் டாய்லட்டா இருந்தாலும், குளியலறையில் கீழே வழுக்காதவண்ணம் பார்த்துக்கொள்வது, ஈரம் உறிஞ்சும் மேட், படுக்கைக்கு அருகில் பெல் போன்று.. எமெர்ஜென்சியில் அடிக்க இதுபோன்று பலவற்றைக் குறித்துவைத்திருக்கிறேன்)
உங்கள் குறிப்புகள் பயனுள்ளவை
உண்மைதான். ஸ்ரீராம். விழும் வரை அது தெரிவதில்லை. இப்போது என் அறையில் நான் அசைந்தால் கூட பெண் தூங்கும் அறையில் ஒலி கேட்கும்.அது போல ஒரு கருவி வைத்திருக்கிறாள்.
எனக்கு மிக சங்கடமாக இருக்கிறது.
இப்படி அவர்களைத் தொந்தரவு செய்கிறோமே என்று.
சென்னையில் 2004 இல் புதுப்பித்தபோது பெரியவன்
சுற்றிப் பிடி கம்பி போட்டுக் கொடுத்து வழுக்காத ரப்பர் விரிப்பையும் போட்டுக் கொடுத்தான்.
என் மாமியார் பயந்து கொண்டே சொல்வார். வயதானால் விழாமல் இருக்கணும் என்று.
நான் எப்போதும் காவலுக்கு நிற்பேன்.
நன்றி மா. எல்லாரும் பத்திரமாக இருக்க வேண்டும்.
வாழ்க வளமுடன் கோமதி.
மிக மிகக் கவனமாக இருக்க வேண்டிய தேவை இப்போது. ஆரோக்கியத்தைக் காப்பாற்றி வந்தால் இந்த மயக்கம் எல்லாம் வராது.
சர்க்கரைக் கான மருந்துகள் பக்க விளைவுகள் ஏற்படுத்துகின்றன.
எதைச் சொல்ல எதை விட. பெரிய மாமா இருந்த ஹோம் இல் கூட இந்த வசதிகள் இருந்தும்
கட்டிலில் இருந்து கீழே விழுந்துவிட்டார்.நல்ல திடமான மனிதர்.
இறைவன் விட்ட வழி.
நாமும் கவனமாக இருக்க வேண்டும்.
நன்றி கோமதி.
அன்பு நெ.த,
நீங்கள் சொல்வது அத்தனையும் நிஜம்.
குளித்து வந்தால் அசதியே.
பெரிய மகன் இன்ஷுரன்ஸ் கம்பெனியில் இருப்பதால்,
எல்லா வித முன்னேற்பாடுகளும் நம் வீட்டில் செய்திருக்கிறான்.
ஒரு தீசிஸ் எழுதும் அளவுக்கு எனக்கு சொல்வான்.
அப்போது காதில் வாங்கவில்லை.
இப்போது புரிகிறது. பெட்டர் லேட் தான் நெவர்.
மிக அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
எதிர்பாராமல் இந்த மாதிரி நிகழும்போதுதான் மண்டைக்கு உரைக்கிறது.
இனி கவனமாக இருக்கும் புத்தியை பகவான் தான் கொடுக்க வேண்டும். மிக நன்றி மா.
பத்திரமாக இருங்கள் எல்லொரும்.
வல்லிம்மா நல்ல குறிப்புகள்....
எங்கள் வீட்டிலும் பாத்ரூம் வழுக்காத தரை. பாசி பிடிக்காமல் தேய்த்து கழுவி விட்டுவிடுவேன். எம் மாமனார் மாமியார் என்னுடன் இருந்தவரை நான் அவர்களிடம் பாத்ரூம் சென்றால் உள்பக்கம் தாழிடக் கூடாது என்று சொல்லிவிடுவேன். இப்போது மாமனார் இல்லை..மாமியாருக்கும் இப்போதும் இதேதான் பாத்ரூம் கதவைத் தாழிடக் கூடாது என்பது. நாங்கள் யாரேனும் அவர் சென்றால் கவனித்துக் கொண்டே இருப்போம்.
பாத்ரூமில் நிதானமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் மருத்துவர் சொன்னதை அதாவது வயதானவர்களுக்குச் சொன்னதை நான் இங்கு இளம்வயதினருக்கும் சொல்லுவதுண்டு....நிதானமாக...எழுந்து ஆஸுவாசப்படுத்திக் கொண்டுதான் வெளியில் வர வேண்டும் என்பது. என் மகன் சிறு வயதிலிருந்தே சொல்லிவிட்டுச் செல்வது வழக்கம்...நானும் அப்படியே...சொல்லிவிட்டுச் செல்வது எந்தவயதினருக்கும் பொருந்தும் அம்மா...இப்பொதெல்லாம் யாருக்கு என்ன நேர்கிறது என்று சொல்லுவதற்கில்லையே...
எங்கள் மாமியாரிடம் ஒரு பெல் கொடுத்திருக்கிறார் மச்சினர். அதை அழுத்தினால் மாடியில் இருக்கும் ஆஃபீஸிற்குக் கேட்கும் உடனே யாராவது வந்து பார்ப்பார்கள். அவருக்குக் காது கேட்கும் திறன் குறைந்திருப்பதால் டிவி பார்க்க அவருக்கென்று வைஃபை ஹெட் செட் வாங்கியிருக்கிறார் என் மச்சினர். அதைப் பொருத்திவிட்டுவிடுவார். நாங்கள் பார்த்துக் கொள்ளும் போதும் அதை எப்படிப் பொருத்த வேண்டும் சார்ஜ் செய்ய வேண்டும் என்று எல்லாம் சொல்லிக் கொடுத்துள்ளார்.
பாத்ரூமில் கம்பி பொருத்திருப்பது மிக மிக நல்ல ஐடியா....மாமியார் வீட்டிலும் கம்பி உண்டு. அது போன்று குளிக்க வைப்பது ஒரு ஸூடூலில் உட்கார்ந்து பக்கெட்டும் கைக்கெட்டும் வகையில் ஸ்டூல் மேல்....தலை குளிப்பது என்பது மட்டும் நாங்கள் குளிப்பாட்டிவிடுவோம்...92 வயது...நடமாடுகிறார் வாக்கர் வைத்துக் கொண்டு...நினைவுத்திறன் இருக்கிறது. நாங்கள் மாற்றி மாற்றி பார்த்துக் கொள்கிறோம்.
ஒன்றே ஒன்று நாம் என்னதான் கவனமாக இருந்தாலும், அதையும் மீறி இப்படித்தான் நடக்க வேண்டும் என்றால் நடந்துதான் தீரும்...ஒரு சில விஷயங்கள் நம் சக்திக்கு அப்பாற்பட்டது. முடிந்தவரை கவனமாக இருக்க வேண்டும். நல்ல மனதுடன் பிரார்த்தித்துக் கொண்டு...எல்லாம அவன் செயல்!
கீதா

அன்பு கீதா. எத்தனை அருமையாக மாமியாரைப் பார்த்துக் கொள்கிறீர்கள்.
நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. யாருக்கு எப்போ என்ன வரும் தெரியாது. நானும் பார்த்து விட்டேன். தினசரி பிரார்த்தனை எல்லோரையும் நன்றாக வை பெருமாளே என்பதுதான்.
பிள்ளைகளும், பெரியவர்களும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
மாமியாருக்கு இத்தனை ஏற்பாடுகள் செய்திருப்பது மிக மகிழ்ச்சி. நன்றாக இருக்கட்டும்.எல்லோருடைய கருத்துக்களும் இந்த விஷயத்தில்
எத்தனை கருத்தோடு இருக்கிறார்கள் என்று தெரிகிறது.
நன்றி மா.
வயதானால் இத்தகைய பிரச்னைகள் அதிகம் தான். அதிலும் நமக்கே நடந்தது எனில் இன்னமும் சிரமம்! படுக்கையை விட்டு எழுந்ததும் சிறிது நேரம் உட்கார்ந்து ஆசுவாசப் படுத்திய பின்னரே கழிவறைக்குச் செல்லவேண்டும் என்கிறார்கள். பொதுவாக நான் எனக்குக் காலில் பிரச்னை வந்ததில் இருந்தே கழிவறையில் கதவைத் தாழ் போட்டுக் கொள்வதில்லை. அதே போல் கழிவறைக்குச் செல்லும்போதும் கணவரிடம் சொல்லிட்டே போவேன். அவரும் சொல்லிட்டே போவார். அவருக்கும் உடம்பு சரியில்லை எனில் உள்ளே தாழ் போட வேண்டாம் என்பேன்.
எங்க மாமியாருக்குப் படுக்கை அருகேயே ஒரு நாற்காலியில் கமோட் மாதிரி அமைத்து வைத்திருந்தோம். அவர் படுக்கையிலிருந்து எழுந்து அந்த நாற்காலியிலேயே அமர்ந்து கொண்டு செல்லும்படி வசதி செய்திருந்தது. பின்னர் நாங்கள் யாரேனும் அதைச் சுத்தம் செய்வோம். அடல்ட் டயபர் கூடக் கட்டிக் கொண்டு விடலாம். பின்னர் தூக்கிப் போட்டுவிட்டுச் சுத்தம் செய்து கொண்டு விடலாம்.
Post a Comment