Wednesday, March 07, 2018

மாசி மாதமும் வடாம் பிழிதலும் 5...

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
மாசி மாதமும் வடாம் பிழிதலும் 5
++++++++++++++++++++++++++++++++++++++++++ ஆட்டோவில் எலுமிச்சம்பழமும் வந்து சேர்ந்தது.
ஊற வைத்த ஜவ்வரிசியைப் பெரிய அடுக்கில் கொதிக்கும் தண்ணீரில் போட்டு மரக்கரண்டியையும் போட்டார் ஜயம்மா. ஒரு கிலோ வேக எத்தனை நேரம் ஆகும் என்று தெரிந்தவராகையால்
ஒரு பக்கம் புழுங்கலரிசியை நன்றாக அலம்பி ஊறவைத்தார்.
செங்கமலமும்,வேதாவும் ஜவ்வரிசியைக் கவனிக்க,

கீதுவின் மகனை வண்ணான் துறைக்கு அனுப்பித் தான் கொடுத்திருந்த வேட்டிகளை சலவை செய்திருந்தால் வாங்கி வரச் சொன்னார். அங்கு பழக்கமான சலவைக்காரர் கிருஷ்ணன்
மிகச் சிறப்பாகச் செய்து கொடுப்பார்.

கீது ,நாலு மணி ஆகப் போகிறது. மாடியைப் பெருக்கித் தூசியில்லாமல் செய்து வரலாம்.
மழை வராமல் இருக்கணும் பகவானே என்று
சொல்லியபடியே பெருக்கும் துடைப்பங்களை எடுத்துக் கொண்டு
மாடிக்குச் சென்றார்கள்.
மன்னி, ஒரே ஒரு கட்டில் தானே இருக்கு. போட வேண்டிய அளவோ
பிரம்மாண்டமா இருக்கும் போல இருக்கே என்ற படி சுத்தம் செய்ய ஆரம்பித்தார்கள்.

ப்ளாஸ்டிக் துண்டுகளைக் கீழே விரித்து ,மேலே வேஷ்டிகளை விரித்துக் கல்லும் வைத்து விடலாம்.
அழுக்குப் படாமல் இருக்கும்.,பழைய பாய்கள் கிடைத்தால் கூட நன்றாக இருக்கும்.
பார்த்தியா இப்ப தான் நினைவுக்கு வரது, நாளைக்கு முறுக்குப் பண்ணப் போகிறோமே, அந்த மாமி
வீட்டில் முன்பு தென்னம் கீற்றுகள் பின்னிய ஓலையில், வடாம்
பிழிவார்களாம். மாமியிடம் இருந்தால் வாங்கிக்கொள்ளலாமே என்றார் ஜயம்மா.
நல்ல யோசனை தான். அவர்கள் இந்தச் சின்ன வீட்டுக்கு வந்து 7 வருஷம் இருக்குமே.
இன்னமுமா வைத்திருப்பார்கள் என்று விசாரப் பட்டாள் கீது.
அந்தப் பாட்டி எதையும் தூக்கிப் போட மாட்டார். கேட்கலாம். கிடைத்தால் லாபம் தானே.
 உண்மைதான். வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய ரஜாய் பெட்டி இருக்குமே. அதில் பார்த்திருக்கிறேன் என்றாள் கீது.  அடுத்த நாளும் வந்தது. தொடரும்.

10 comments:

ஸ்ரீராம். said...

வடாம் வைபவம்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தூக்கி எறிந்த பொருள்களின் முக்கியத்துவத்தை பின்னர்தான் உணரமுடியும்.

ராஜி said...

இங்க இன்னும் ஆரம்பிக்கல

KILLERGEE Devakottai said...

வடகம் வறுபடட்டும் தொடர்கிறேன்...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம், வைபவம் தான்.
உற்சாகமா தொடரலாம்.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் முனைவர் ஐயா. அவசரமாக எறியக் கூடாது.

வல்லிசிம்ஹன் said...

பங்குனில ஆரம்பிக்கலாம் ராஜி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கில்லர்ஜி, உங்க ஊர்ல வெய்யில்லயே வறுத்து விடலாம்.

கோமதி அரசு said...

எவ்வளவு வித விதமாய் வத்தல்(வடாம்) போட்ட காலங்களை நினைத்து பார்த்துக் கொள்கிறேன்.
இப்போது ஒரு மாமி வடாம் வீட்டுக்கு கொண்டு வந்து விற்கிறார்கள் அவர்களிடம் வாங்கி கொள்கிறேன்.
மொட்டை மாடியும் மூடி வைத்து இருக்கிறார்கள். உபயோகத்திற்கு இல்லை.

கதை அருமையாக செல்கிறது தொடர்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வடாம் இன்னும் ஆரம்பிக்கலை வல்லிமா..உங்கள் அனுபவம் ஸ்வாரஸ்யமாக இருக்கு.....திருவிழா போல...

ஓலைப்பாயில் எங்கள் பிறந்த வீட்டில் மரச்சீனிக் கிழங்கு அப்பளம் இடுவோம்...

கரிமத்து/குழம்பு வடாம் மட்டும் செய்யலாம் என்று அன்று கொஞ்சம் செய்தேன்....நாளை கொஞ்சம் கூடுதல் போட்டுச் செய்யலாம் என்று இருக்கேன் பார்ப்போம்...அதன் பின் வடாம் ஆரம்பிக்கனும்....உங்கள் அனுபவங்களையும் தொடர்கிறோம்

கீதா