Friday, March 09, 2018

அனுசரணை,மதிப்பு,அன்பு வாழ்க்கை.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
  விலங்கும் இல்லை பூமாலையும் இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த மன நிலைக்கு வர குழப்பங்கள் வந்து, தீர்ந்து
பெற்ற செல்வங்கள் ஒரு நிலையில் பொருந்தி
அவர்களது குடும்பங்களை ஆரம்பிக்கும் போது

அவர்களுக்குஇன்ப துன்பங்களில் நாம் பங்கேற்குபோது,
நாம் அனுபவித்த  பிரச்சினைகள் எங்கேயோ ஓடி இருக்கும்.
தம்பதிகளின் பொற்காலம் இது என்றே சொல்வேன்.

கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஆகி இருக்கும். மனைவியும் கணவரும்
75 சதவிகிதமாவது புரிந்து கொண்டிருப்பார்கள்.

முன்பு  புத்திமதிகள் சொல்லி நம் எண்ணங்களை ஆக்கிரமித்தவர்கள் முன்னால்,
நம்மீது கொஞ்சமாவது மதிப்பு ஏறி இருக்கும்.

இனி நம் கவலை அவர்களைப் பற்றி இல்லை. வரப் போகும் புது செல்வங்களைப் பற்றி.
 முன் பதிவில் நான் எழுதியது இதைப் பற்றிதான்
//கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,
அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை.  //ஒரு தலைமுறை தாண்டி இன்னோரு தலைமுறையும் தலை எடுத்தாகிவிட்டது.
முன்பு அடிக்கடி காதில் விழுவது, நாங்கள்ளாம் எப்படிக் கஷ்டப் பட்டோம் தெரியுமா.
 இந்த வார்த்தைகளை , நம்மைவிடச் சிறியவர்களிடம், பலவீனமான நேரத்தில் கூடச் சொல்லக் கூடாது.
இவர்கள் சிந்தனைகள் வேறு.
நிற்க நேரமில்லாமல் ஓடுபவர்கள்.
முழு சுற்று வந்துவிட்டது வாழ்க்கை.

நாம் அனுபவிக்காத பலவித அனுபவங்கள் அவர்களுக்குக்
கிடைத்திருக்கிறது.
அவரவர் நிலையில் வலிமை,புத்தி கூர்மை எல்லாம் இருக்கிறது.
நாம் புத்தி சொல்லும் நிலைமையில் அவர்கள் இல்லை.
அவர்கள் நம்மை மதிக்கும் போது நாமும் அவர்களை உண்மையிலேயே மதிக்க வேண்டும்.
உடலால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
நம் நட்புவட்டங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இனிய வார்த்தைகள் செய்யும் மருத்துவம் வேறு ஒன்றும் செய்யாது.
அவர்களின் வயதின் வேகத்தில் சில வார்த்தைகள் கேட்க நேரிடலாம்.
உடனே பதில் சொல்லாமல்
மெதுவே சொல்லலாம். வயது வித்தியாசம் இருக்கிறதே.
அம்மா சொல்வது நினைவுக்கு வருகிறது. நீதானே பெரியவ. தம்பிகள்
  விஷயத்தில் அனுசரித்துப் போகணும்னு சொன்னது என் எட்டு வயதில்.
 அனுசரித்துப் போகலாம். நமக்கு வேண்டும் என்கிற பொறுமையை பகவான் கொடுக்கட்டும்.
நிறைய விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறது மீண்டும் இது பற்றிப் பேசலாம்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்...முற்றும்.

18 comments:

ஸ்ரீராம். said...

அனுபவத்தின் காரணமாக வரும் யோசனைகள். அனைத்துமே சரியான அறிவுரைகள்.

KILLERGEE Devakottai said...

அழகிய விவரிப்பு அம்மா இன்னும் பேசுங்கள் கேட்க காத்திருக்கின்றோம் - கில்லர்ஜி

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அனுபவங்கள் எங்களைப் பக்குவப்படுத்தும். சொல்லுங்கள்மா....

கரந்தை ஜெயக்குமார் said...

அனுபவ வார்த்தைகள்
அருமை
தொடருங்கள்

கோமதி அரசு said...

அனுசரணை, மதிப்பு, அன்பு அதுதான் வாழ்க்கை.
அருமையான தலைப்பு.
அனுபவம் தந்த யோசனைகள் அனைத்தும் அருமை.

தமிழ் அருவி said...

தமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.

தங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.

பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.

உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.

நன்றி .
தமிழ்அருவி திரட்டி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

எங்கள் தாத்தா நாங்கள் சிறியவர்களாக இருக்கும்போது சொன்ன அறிவுரைகள் நினைவுக்கு வந்தன.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் நானும் சொல்ல வந்தேன். முனைவர் திரு ஜம்புலிங்கம்.
தாத்தா,அப்பா இருவரும் ,மெதுவான குரலில் அழுத்தமாக அறிவுரை சொல்வார்கள். அப்படியே மனதில் பதியும்.
நமது பேரச் செல்வங்களுக்கும் அவர்களுக்கு நேரம் இருக்கும் போது சொல்ல வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம் , அவசரப்பட்ட காலம் எல்லாம் ஓடிவிட்டது. மனதில் இருப்பதை அப்படியே சொல்ல இப்போது தோன்றுவதில்லை. யாருக்கும் வேண்டவும் வேண்டாம்.
வாய் மூடி மௌனியாக இருப்பது பலவிதமாக உதவுகிறது. இன்ஸ்டண்ட் ரியாகஷன் அவுட் ஆஃப் சிலபஸ்.
தம்பி வாசுதேவன் அடிக்கடி சொல்வார். தீதும் நன்றும் பிறர் தர வாரா/ந்னு

வல்லிசிம்ஹன் said...

இந்த அன்புக்கு நன்றி கில்லர்ஜி.
எங்கள் பசங்களும் இதையே சொல்வார்கள்.
முடிந்த போது எழுதுகிறேன் அப்பா.

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் சொல்கிறேன் வெங்கட்.
உங்கள் பெற்றோரும் சொல்லி இருப்பார்கள்.நல்லதே நடக்கட்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஜெயக்குமார்.
வழி வழியாக பெற்றோரும், பாட்டி தாத்தாக்களூம் சொன்ன அறிவுரைகள், காலம் கடந்தும்
மனதில் நிற்கின்றன.அதையே பகிர்கிறேன்.நன்றீ அப்பா..

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி. அமைதிக்கு எடுத்துக் காட்டே நீங்கள் தான்.
உங்களுக்குத் தெரியாததா. வாழ்க வளமுடன் அம்மா.

Thulasidharan V Thillaiakathu said...

//கணவனையும், அவனைப் பெற்றவர்களையும் கவனித்து வரும் பெண்களுக்கு ,
அந்தப் பெற்றோரின் ஆதரவு இருந்துவிட்டால் குடும்பம் சுமை இல்லை. //
ஆமாம் ஆமாம் வல்லிம்மா…….மிக மிக உண்மை..

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

// நாங்கள்ளாம் எப்படிக் கஷ்டப் பட்டோம் தெரியுமா…. இந்த வார்த்தைகளை , நம்மைவிடச் சிறியவர்களிடம், பலவீனமான நேரத்தில் கூடச் சொல்லக் கூடாது.
இவர்கள் சிந்தனைகள் வேறு.
நிற்க நேரமில்லாமல் ஓடுபவர்கள்.//
மிக மிக மிகச் சரிதான் வல்லிம்மா…ஆனால் சில சமயங்களில் அடுத்த தலைமுறையினருக்குப் பொறுப்பு வருவதற்கு அந்தக் கஷ்டத்தையும் புலம்பாமல் புலம்பல் போல் சலித்துக் கொண்டுச் சொல்லாமல்…..ஒரு படிப்பினை போன்று கதை சொல்லுவது போன்று சொல்லலாம் மாரல் கதை போல… அவர்களுக்கும் பொறுப்பு வரும் என்று தோன்றும் அடுத்த தலைமுறையினருக்குக் கஷ்டம் என்ன என்றே தெரியாமல் வளர்வதும் அத்தனை நல்லதில்லையே அம்மா. நம் வாழ்க்கை எப்போதும் ஒரே போன்று இருப்பதில்லையே.
என் மகனுக்குச் சிறு வயதிலிருந்தே கதை சொல்லுவது போல என் சிறுவயது கதை அதில் கற்ற பாடங்கள் அனைத்தையும் மகனையும் ஒரு கேரக்டராக வைத்துச் சொன்னதுண்டு..அவன் அதைப் புரிந்து கொண்டதால்..….இன்று எங்கள் கஷ்டங்களுக்கிடையில் அவன் வெளிநாட்டில் சிக்கனமாக இருக்க அது உதவுகிறது……ஒரு சில கஷ்டங்களைச் சொல்லும் போது பிற மனிதர்களை உணர்வு ரீதியாகப் புரிந்து கொள்ள உதவும் என்றும் தோன்றுகிறது. அதாவது புலம்பலாக இல்லாமல்……முன்பு கூட்டுக் குடும்ப வாழ்க்கை. இப்போது எல்லாமே தனித் தனித் தீவுகளாய்க் குடும்பங்கள் என்றானதால் குழந்தைகளுக்குக் கேட்டது எல்லாம் கிடைப்பதால் அவர்களால் கஷ்டம் வரும் போது அதனை எதிர்க்கொள்ள முடியாமல் சோர்ந்து போகிறார்கள். அதனால் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாமோ இல்லையா அம்மா……ஆனால் ஒவ்வொருவரின் அனுபவமும் இதில் வேறுபடும்….என் அனுபவத்தில் சொல்லுவது இது…

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//நாம் அனுபவிக்காத பலவித அனுபவங்கள் அவர்களுக்குக்
கிடைத்திருக்கிறது.
அவரவர் நிலையில் வலிமை,புத்தி கூர்மை எல்லாம் இருக்கிறது.
நாம் புத்தி சொல்லும் நிலைமையில் அவர்கள் இல்லை.
அவர்கள் நம்மை மதிக்கும் போது நாமும் அவர்களை உண்மையிலேயே மதிக்க வேண்டும்.
உடலால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டும்.
நம் நட்புவட்டங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இனிய வார்த்தைகள் செய்யும் மருத்துவம் வேறு ஒன்றும் செய்யாது.//
அப்படியே டிட்டோ செய்கிறேன்…அப்ப்டியே எத்தனை சதவிகிதம் வேண்டுமானலும் முடிவில்லாத சதவிகிதம் …..டிட்டோ டிட்டோ அருமையான வரிகள் அம்மா…

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

//அவர்களின் வயதின் வேகத்தில் சில வார்த்தைகள் கேட்க நேரிடலாம்.
உடனே பதில் சொல்லாமல்
மெதுவே சொல்லலாம். வயது வித்தியாசம் இருக்கிறதே.
அம்மா சொல்வது நினைவுக்கு வருகிறது. நீதானே பெரியவ. தம்பிகள்
விஷயத்தில் அனுசரித்துப் போகணும்னு சொன்னது என் எட்டு வயதில்.
அனுசரித்துப் போகலாம். நமக்கு வேண்டும் என்கிற பொறுமையை பகவான் கொடுக்கட்டும்.
நிறைய விஷயங்கள் விட்டுப் போயிருக்கிறது மீண்டும் இது பற்றிப் பேசலாம்.
அனைவரும் நலமுடன் இருக்க வேண்டும்...முற்றும்.//
யெஸ் யெஸ் யெஸ்…..அம்மா சொல்லுங்க வல்லிம்மா….எனக்கு இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்….

கீதா

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா, அப்பாடி எத்தனை விஷயங்களை
விவரித்திருக்கிறீர்கள்.
நான் சொல்ல வந்தது ,குறிப்பாக வரும் மருமகள்களிடம்.
நாம் நம் பழைய துன்பங்களைச் சொல்ல ஆரம்பித்தால் வரவேற்கப் படுவதில்லை.
என் பெரியவர்கள் அவரது கணவரையும் ,என் கணவரையும் ஒப்பிட்டுப் பேசும்போது நான் எவ்வளவு வருத்தப் பட்டிருப்பேன் என்று நினைத்தாலே
கஷ்டமாக இருக்கு அம்மா.
40களில் உங்களின் வாழ்க்கை வேறு,
70 களில் நாங்கள் நடத்தும் குடித்தனம் வேறு.

அவர்களுக்கு மகன் நிறைய செலவழித்து விடுவானோ என்ற பயம்.
அவசியமானதை வாங்க அனுமதி கேட்க வேண்டும் என்று
எதிர்பார்த்தார்கள்.
இவைகளையே சிறிய முறையில் சொல்லி வைத்தேன்.

குழந்தைகளுக்கு நம் புத்திமதி அவசியமே.அதுவும் பெண்ணிற்கு
மிக அவசியம். என் அம்மா இந்த விஷயத்தில் மிகவும் உதவி செய்தார்கள்
தங்கள் மகன் ,உங்கள் சொல்லால் கட்டாயம் பயன்பட்டிருக்கிறார்.
மீண்டும் வருகிறேன்..