Blog Archive

Wednesday, December 20, 2017

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
   சின்னவன் கண்களைச் சுருக்கி விரித்து
ஹோம்வொர்க் ஒண்ணும் இல்லை பாட்டி
கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக்கட்டுமான்னு கேட்டால் ஏதோ
இருக்குன்னு அர்த்தம்.
கொஞ்சம் உன்னுடைய ஃபோல்டரை செக் பண்ணுடா. ஏதாவது பேப்பர்
இருக்கும் என்பேன்.
நீ யேன் என்னை டிரஸ்ட் பண்ண மாட்டேங்கறே.
ஓகே. உனக்காகப் பாக்கறேன்.
முதல்ல விளையாடணும் என்பான்.
பாவமா இருக்கும்.
15 நிமிஷம் 45 நிமிஷம் ஆகும்.
டேய் பையா. பாத்துடு. இல்லைன்னால் 11 மணி வரை நீதான் முழிச்சு வேலை செய்யணும் என்று கொஞ்சம் கடுமை காட்டுவேன்.
உன் அம்மா அப்பா  உன்னை இப்படி மிரட்டுவார்களா என்பான்.
நானே வேலை முடிச்சுட்டு தான் விளையாடப் போவேன்
என்பேன்.
பட் உனக்கு இந்த மாதிரி இருட்டு விண்டர் டேய்ஸ் கிடையாது.
என்ன வேணா விளையாடலாம் என்று என்னைப் பேசவைத்துவிடுவான்.
திரும்பிப் பார்க்கும் முன் கராத்தே வகுப்பு நேரம் அம்மா வந்ததும்
சுணங்குவான்.
அம்மா I have lots of home work.
give me a break from karate maa.
இத்தனை நேரம் என்னடா பண்ணினே.
பாட்டி ரொம்ப விஷயம் சொன்னாம்மா.
#கிருஷ்ணசேட்டை

12 comments:

ஸ்ரீராம். said...

விவரமான பையனா இருக்கானே... கிருஷ்ணசேட்டை ரசிக்கும்படி இருந்தது.

Geetha Sambasivam said...

குழந்தை தானே. தானே சரியாகும்.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா ஹா ஹா ஹா....ரொம்பவே ரசித்தேன் வல்லிம்மா....குழந்தை குட்டி கிருஷ்ணன் தான்!!!!

கீதா

நெல்லைத் தமிழன் said...

குழந்தையின் பேச்சுக்கள் மிக்க ரசனை மிகுந்தவை. கடைசியில் 'பாட்டி ரொம்ப விஷயம் சொன்னாம்மா' என்று உங்களையும் அவனோடு சேர்த்துக்கொண்டது ரசிக்கும்படி இருந்தது.

வெங்கட் நாகராஜ் said...


ஸ்வாரஸ்யம். முகநூலிலும் ரசித்தேன்.

பூ விழி said...

உங்கள் குட்டி கிருஷ்ணனின் சேட்டையை நானும் ரசித்தேனே

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் குமார். பெரியவன் நேரா விஷயத்துக்கு வந்துடுவான். இவன் கொஞ்சம் டிராமா தான். ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கீதா மா. நான் பேசி இருக்காவிட்டால் கண்ணைக் கெடுத்துண்டு மைன் க்ராஃப்ட்
விளையாடி இருக்கும்.

ஆனால் சரியாக வீட்டுப் பாடம் முடித்துவிடுவான்.
விளையாட்டு புத்தி.

வல்லிசிம்ஹன் said...

ஹாஹா. கீதா ரங்கன். பொல்லாதது.
ஆனால் படிப்பில் படு சுட்டி.
அவன் போகிற வழியில் பெண் அவனை மடக்கி விடுவாள்.

வல்லிசிம்ஹன் said...

பெரிய மனுஷ தோரணையில் பேசுவான்.
பெரிய பெரிய ஆங்கில வார்த்தைகள். மைக்ரோசாஃப்ட், கூகிள் என்று அலசுவான்.
நானும் தலையை ஆட்டிக் கொண்டு ரசிப்பேன்.
மொபைல் ஃபோன் செட்டிங்க்ஸ் அத்துப்படி. நிமிஷத்தில் சரி செய்து விடுவான்.
ஊறுகாய் மாதிரி அப்பப்போ வந்து பாட்டின்னும் ஒரு தட்டு தட்டிவிட்டுப் போவான்.
நன்றி மா. நெல்லைத்தமிழன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட், உங்கள் ரசனை என்னை மகிழ்விக்கிறது.

வல்லிசிம்ஹன் said...

அன்பு பூவிழி, நன்றி ராஜா.