Blog Archive

Wednesday, November 22, 2017

1961 திண்டுக்கல்/மதுரை/ திண்டுக்கல்

Add caption
Add caption
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
Add caption


Add caption

   எதோ நினைவுகள்    பாடல் பின்னணியில், எழுத  ஒரு ஊக்கம்.
 பாட்டியும் எங்களுடன் வந்து தங்க ஒரு யோசனை இருந்ததால்
 வீட்டை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.
 பள்ளிக்கூடத்துக்கு அந்தப் பக்கம் ,அதாவது பின் வாசல்   வழியாகப் போனால்  ஒரு குறுக்கு ரோடு வரும். அது வழியாக  மெயின் ரோடு. அதைக் கடந்தால் பன்றிமலை சுவாமிகள் பங்களா  வரும்.
அதற்கு எதிராகப் பத்து வீடுகள்   வரிசையாகக் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.
5 ஆம் நம்பர் வீட்டுக்கு நாங்கள்  கிரஹப் பிரவேசம் செய்தோம் .
கார்த்திகை மாதம் என்று நினைக்கிறேன்.
 வீடுகளுக்கு சுற்றி நல்ல சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்தது. அடக்கமான வீடு. வாசலில் மூங்கில் தப்பைகளால் அழி போட்டு அடைத்த பெரிய வராந்தா.
அதற்கப்புறம் ஒரு வராந்தா, முடிவில் பெரிய கூடம். கூடத்துக்கு  இரு  வாசல் ஒன்று தனி அரைக்கும், இன்னொன்று சமையலறைக்கு. பிறகு இப்பொழுது  சொல்லப்படும்   யுடிலிட்டி வெராந்தா.  பாத்திரங்கள் தேய்க்க.
 தண்ணீர் நிரப்ப இரண்டு பெரிய தவலை களும் அண்டாக்களும். கொண்ட நல்ல முற்றம்.
 அங்கே இருந்து இறங்கினால் குளிக்கும் அறையும் ,தோய்க்கும் கல்லும்.
 ஒரு துளி மண்ணோ ,செடியோ இல்லை. அம்மா எப்படியோ துளசி மாடம் வாங்கி துளசியும் நட்டு விட்டார்.
பத்துவீடுகள் முடிவில் ஒரு பெரிய  கிணறு. அப்பாடி  நல்ல தண்ணீர்க்  கிணறு. அதற்குப் பின்னால் வயல் வெளி. அதற்குப்
பிறகு ரயில் பாதை. தூரத்தில்  சவுந்திரராஜா மில்ஸ் வீடு. தனி விமானம் வைத்திருந்தவர்கள்.

பத்து வீடுகளுக்கு வெளியே அழகான பிள்ளையார் கோவில். அரச மரத்தடிப் பிள்ளையார்.
தினம் காலையில் நானும் பக்கத்து வீட்டு  ஜில்லுவும்,
தம்பி ரங்கனும்   8 .15ற்கு கிளம்பிவிடுவோம்.
மாதா மாதம் அப்பா மதுரை சென்று பாட்டியைப் பார்த்துவிட்டு, இரண்டு நாள் காரியங்களை முடித்து வருவார்.
சித்தப்பா நல்லபடியாக வீடு ஒன்று கட்டி முடித்தார். தாத்தா வருஷாப்திகம்  முடிந்ததும்  கிரஹப் பிரவேசம் நடத்த தீர்மானம்.
எங்கள்  நாட்கள்  ஆனந்தமாக விளையாட்டும் தோழர்கள் தோழிகளோடு ஆட்ட ஓட்டத்தோடு
ஓடியது.    நானும் ஒன்பதாம் வகுப்பு போயாச்சு. முரளி எட்டாம் வகுப்பு, ரங்கன் ஆறாம் வகுப்பு செயின்ட் மேரி பள்ளியில் சேர்ந்தாச்சு.
அடுத்த புரட்டாசியில்  மதுரைக்கு நாங்கள் சென்று திரும்பும் போது பாட்டி எங்களோடு வந்துவிட்டார்.
பிறகென்ன ஒரே சந்தோஷம் தான்.

12 comments:

ஸ்ரீராம். said...

இனிய நினைவுகள்.

Bhanumathy Venkateswaran said...

உங்க திண்டுக்கல் வீடு கண்முன் விரிகிறது. இப்படிப்பட்ட ஒரு வீட்டில்தான் என்னுடைய குழந்தை பருவமும் கழிந்தது. இனிமையான நினைவுகளைத் தொடர்கிறேன்.

நெல்லைத் தமிழன் said...

'நினைவோ ஒரு பறவை' - உங்கள் வகுப்புச் சேட்டைகளை நினைவுகூறவில்லை.

வென்னீர் அண்டாவில்தான் எவ்வளவு கலை'நயம்.

தொடர்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி ஸ்ரீராம். நடுவில் ஒரு ப்ரேக் கொடுக்கணும். எல்லாருக்கும் திகட்டி விடும்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி பானு மா. நீங்கள் படித்து கருத்து சொல்வதே எனக்குப் பெருமையாக இருக்கு.
முன்பு ஒரு தடவை வலையுலகில்,தமிழ்மணத்தில் எல்லோரும் எழுத முனைந்ததாக நினைவு.
Well connected ஆக இருந்த காலம். இப்பொழுது மனம் மாறிக் காலம் மாறிக்
காற்றாடி மாதிரி ஏதோ எழுதுகிறேன்.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்.
நம் வீட்டு வென்னீர்த்தவலை இன்னும் பெரிதாக
இருக்கும். இது கூகிள் கொடுத்த படம்.
ஏற்கனவே எழுதி இருந்த சேட்டைகள் அதிகம்.ஹாஹா.
வேறு மாதிரி எழுதுகிறேன். மிக மிக நன்றி மா.

கோமதி அரசு said...

நினைவுகளின் ஊர்வலம் மிக அருமை.

பூ விழி said...

ஆனந்தமான நாட்கள் ஆனந்தமான நினைவுகள்

Thulasidharan V Thillaiakathu said...

கரி அடுப்பு (இந்தக் கால க்ரில்??!!) பித்தளைக் குண்டா வாவ் என்ன டிசைன் அழகு!! ஷேப்பும் அழகு! அப்புறம் மண்ணெண்ணை பம்ப் ஸ்டவ், குதிரை வண்டி எல்லாம் எனக்கும் பழியய நினைவுகளை மீட்டியது...என் அப்பா வழிப்பாட்டி திருக்குறுங்குடியில் கரி அடுப்பில் அந்த மேலே சல்லடை போட்டு அதில் அப்பளம், சப்பாத்தி கூடச் சுட்டுத்தருவார்கள்!!!

குதிரை வண்டி அனுபவம் சூப்பரா இருக்கும். என்ன குடை கவிந்துராம இருக்கணும்னு வேண்டிப்பேன். அப்படியும் ஒரு தடவை குடை கவிழ்ந்து நல்ல காலம் அடி எதுவும் படலி...நல்ல நினைவுகள்!! தொடர்கிறோம் வல்லிமா

கீதா

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் கோமதி. மனதுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி ஆகிறது.
வாழ்க வளமுடன். Happy Thanksgiving Day.

வல்லிசிம்ஹன் said...

அதேதான் பூவிழி.
அன்புக்குக் குறைவில்லை.
ஆனந்தமான நினைவுகள் மறையவில்லை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதா,தில்லைஅகத்து,

அப்பா வழிப்பாட்டியைப் பார்க்க ஆசை.
எங்கள் பாட்டியும் அப்பளம் வீட்டிலியே தயார் செய்வார்.
கரியடுப்பில் தணல் இருந்து கொண்டே இருக்கும்.
அவர்களுக்கு அசதியே தெரியாதோ என்று நினைப்பேன்.
அவர்கள் இட்டுத் தரும் சப்பாத்தியின் மணத்துக்கு ஈடு இல்லை.
குதிரை வண்டி, ஹோல்டால், ட்ரங்க் பெட்டி இவை எல்லாம்
அழியா நினைவுச்சின்னங்கள். மிக நன்றி அம்மா. வாழ்க வளமுடன்.