Blog Archive

Sunday, October 29, 2017

பெண் பார்த்து நிச்சயம் செய்தாச்சு 1965 October 31st.

picture coutesy   Mangai.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 அக்டோபர் 29 ஆம் தேதியும் வந்தது.
எனக்கு இருந்த சந்தோஷம் ,சென்னைக்குச் சென்று
தோழிகளைப்  பார்ப்பதுதான்.
மதுரையில் எங்களை வண்டி ஏற்றிவிட வந்திருந்த சித்தப்பா அப்பாவிடம்
 நிறைய விஷயங்களைச் சொன்னார்.
எப்படிப் பேச வேண்டும். திருமணத்துக்கு என்ன என்ன செலவு,
இது போல விஷயங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். நம்மால் முடிந்தது இது தான். இதற்கு மேல் செலவழிக்க முடியாது  இது போல விஷயங்களே.
எனக்கு இதெல்லாம்  உரைக்கவில்லை.

அடிமனதில்  அடுத்த நாளைப் பற்றிப் பயம் இருந்தது.
யாரும் அதைப் பற்றி எல்லாம் பேசிக்கொள்ளவில்லை.
  முன் பின் தெரியாத மனிதர். எப்படி,என்ன குணம் என்றேல்லாம் தெரியாது.

திண்டுக்கல்லில் இருந்து எதிராஜில் படிக்க சந்தர்ப்பம் அமைந்ததைப் போல இதுவும் ஒரு
சவால். வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தது.
டாக்சியையை விட்டு இறங்கினதுமே தோழி வீட்டில் சொல்லி விட்டுத்தான் பாட்டி வீட்டுக்கு விரைந்தேன்.
 ஏன் பாப்பா உன் பெண்ணுக்கு இப்படிச் செல்லம் கொடுத்திருக்கிறாய் என்று
பாட்டி கோபித்துக் கொண்டார். அவர்கள் பார்த்துப் பிடிக்கவில்லை என்றால்
 சங்கடமாகிவிடாதா என்று பாட்டிக்குக் கவலை.

 என் மனதில் ஏற்கனவே தீர்மானமாகிவிட்ட திருமணம்.
இது நடக்காது என்று நான் எண்ணவும் இல்லை,.
 டெல்லி மாமா வந்திருந்தார். ஜயா மன்னி என் உற்ற தோழி.
என்ன ஆண்டாள் உன் கல்யாணத்தை நீயே முடிவு செய்துட்டயா என்று பரிகாசம் செய்தார்.
  அப்பாவும் மாமாவும் போய்ப் பழங்கள், பூ,சந்தனம்,
வெற்றிலை,மஞ்சள் எல்லாம் வாங்கி வந்தனர்.
அடுத்தனாள் 31 ஆம் தேதி காலையில்  கமலம்மாவிடமிருந்து தொலைபேசி.
நாங்கள் ஒரு திருமணத்துக்குப் போய்விட்டு நேரே அங்கே வருகிறோம்,
எங்களுக்கென்று ஒன்றும் பலகாரம் வேண்டாம்.
பெண் சிம்பிளாக  இருந்தால் போதும் என்று  சொல்லிவிட்டாலும், புத்தம்புது டிகாக்ஷன் போட்டு, புதுப்பால்  காய்ச்சி வைத்திருந்தார் பாட்டி.
பாட்டிக்கு எப்போதும் துணைக்கு வரும் ஜீயா முத்தண்ணா.,அம்மாமி, என் மாமாக்கள் நால்வர்,
வீட்டில் நிற்கக் கூட இடமில்லை. பாட்டி முன்கூட்டியே, வாசல்புற இரு அறைகளையும்
ஒழித்து, திரைச்சீலை போட்டு, ஆண்கள் உட்கார நாற்காலிகளும்,
பெண்கள் உட்கார  கல்யாண ஜமக்காளமும் போட்டு வைக்கச் சொன்னார்.
 பின் அறையில் புடவை கட்டிக் கொண்டு, நான்கு  பக்கத்திலும் இருந்து வரும்
புத்திமதிகளுக்கு தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன்.
என்னைத் தவிர அனைவரும்  அட்டென்ஷனில் இருக்கும் போது இரண்டு அம்பாஸடர் கார்கள் வாயிலில் வந்து நின்றன. அதற்குப் பிறகு நடந்ததெல்லாம்
பதிவுகளாகப் போட்டு பத்து வருடங்கள் ஆகிறது. பார்த்தோம், பிடித்தது,
திருமணம் நிச்சயம் அப்போதே ஆகிவிட்டது. வாழ்க வளமுடன்.

9 comments:

பூ விழி said...

ஹா ஹா அப்போதைய விஷயம் படிக்கச் சுவரசியமாய் இருந்தது ..... எல்லோரும் அட்னஷ்னில் உங்களை ஜன்னல் வழியாக பார்க்க சொல்லவில்லையா

வல்லிசிம்ஹன் said...

https://l.facebook.com/l.php?u=https%3A%2F%2Fnaachiyaar.blogspot.com%2Fsearch%2Flabel%2F%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A3%25E0%25AE%25AE%25E0%25AF%258D%2520%2520%25E0%25AE%2586%25E0%25AE%259A%25E0%25AF%258D%25E0%25AE%259A%25E0%25AF%2581%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25BE.%25E0%25AE%25A8%25E0%25AE%25BF%25E0%25AE%25AE%25E0%25AF%258D%25E0%25AE%25AE%25E0%25AE%25A4%25E0%25AE%25BF&h=ATPyoQHBdgUlHNqjrHSuXnsyNU_zqybJl8c7G9RIjKspHTzmd0EUVRnZ5kDJ51uHpXtBwolJ-U23rJZCXL0bJgw9ow5u8g6F5HMcL01vHl-8Tru-6tBAPAWO-1Cbmz3SjemZ3hkGaWD5z-SurnTSExbYRjo

வல்லிசிம்ஹன் said...

எங்கே பார்க்க விட்டார்கள்.பூவிழி. ஹாஹா. அது ஒரு தமாஷான சம்பவம்.
என் நாச்சியார் பதிவில் இரண்டு தடவை மீள் பதிவே போட்டாச்சு மா. MELE IRUKKU LINK.

'பரிவை' சே.குமார் said...

அந்தநாள் ஞாபகம்.... அருமையாய்...

Anuprem said...

ஆஹா...

நல்லா இருக்கு...

(வருசத்தை பார்த்து என் மனத்திலும் ...உதட்டிலும் ஒரு புன்னகை ம்மா..)

கோமதி அரசு said...

நினைவுகள் அருமை.
வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு குமார். மிக நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு அனு, வருடத்தைப் பார்த்து புன்னகையா. என்ன விஷயம்.
எனக்கும் சொல்லுங்கள் மா.

வல்லிசிம்ஹன் said...

வாழ்க வளமுடன் கோமதி.