Friday, September 29, 2017

அழைத்தது ஆண்டு விழா.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
இது மாதிரி ஒரு வேடம்   அம்மா யோசித்துவைத்தார்.
அவளுக்கு உள்ளுக்குள் ஆதங்கம். தன பெண்ணைச் சின்னக் கண்ணினு இந்த அம்மா சொல்லிவிட்டார்கள் என்று.

இல்லஸ்ட்ரேட்டட் வீக்லியில் தேடிப்பார்த்து ஒருவிதமாக உடையைத் தேர்ந்தெடுத்தார்.
அம்மாவின் தையக்காரர்  புரசைவாக்கத்தில் புது மோஸ்தர் சட்டைகள் எல்லாம் எனக்காகத்  தைப்பார்.
இப்போ அதற்காக மெட்றாஸ் போகமுடியுமா. ஒரு நீல நிற
பூ போட்ட சாட்டின் பாவாடை இருந்தது.
 மேலே சட்டை..  காலர் வைத்த  நீளமான குர்தா வகை
.சிவப்புக் கலர்.
இரண்டு நீல நிற ரிப்பன்களை  இடையில் Bow
வைத்துக் கட்டி அனுப்பிவிட்டார் பள்ளிக்கு. கண்ணுக்கு மையிட்டு மறக்கவில்லை. அவ்வளவு ரோசம் அம்மாவுக்கு.
😉😉
மேடையில் ஏறினால்  ஏதாவது பேச வேண்டுமே.
எட்டு வயசு ஜப்பான் பொண்ணு என்ன பேசும் .
அப்பொழுது சயனோரா எல்லாம் தெரியாது.  கையில் ஜாப்பனீஸ் விசிறியும் கிடையாது

 யோசித்துக் கொண்டே எல்லோரும் வரிசையாக தாலுகா ஆபிஸ் வந்துவிட்டோம். சாதாரண மேடை. கலெக்டர் இன்னும் வரவில்லை.
என் சின்ன மூளைக்கு , சக தோழியரிடம் வம்படிக்கத் தெரியும். பெரியவர்கள் முன் நாக்கு சுருண்டுவிடும்.

பரபர வென கலெக்டர் வந்தார். என்னை விட பெரிய பெண்கள் போறவளே  பொண்ணு ரங்கம்
பாட்டுக்கு நடனம் ஆடினார்கள்.

ஒரு பையன் பட்டணம் தான் போகலாமடி  இரண்டு வரிகள்
பாடினான்.

அடுத்தது என் முறை.
கீழே  இருந்து அங்கு உட்கார்ந்திருந்த கோட் சூட் மனிதர்களை பார்த்ததும் உடல் சில்லென்ரது
தட்டுத்தடுமாறி மேடையில் ஏறிட்டேன்.

பெப்பே என்கிற விழிக்கும் பெண்ணைப் பார்த்து கலெக்டர்
புன்னகை புரிந்தார். யாரும்மா நீ. 
ஜாப்பனீஸ்  .

ஓஹோ ஏதாவது பேசேன் .

நேராக உக்கிரமான கண்களுடன் பெரிய டீச்சர்.

சிங்சங் என்று ஏதாவது பேச நினைத்ததும் மறந்து விட்டது

நான், நான்  என்று  சொல்லி  திருத்திரு  வென்று விழித்ததும், கலெக்டர் சிரித்துவிட்டாள். ஜப்பான் பொன்னுக்குத் தமிழ் வரலை
என்று நீ   போம்மா  என்று அனுப்பிவிட்டார்.
வேடிக்கை என்ன வென்றால், அந்த உளறலுக்கும்
ஒரு பிளாஸ்டிக் சோப் பேட்டி கிடைத்ததுதான்.😛😜
.

12 comments:

ராமலக்ஷ்மி said...

சுவாரஸ்யம் :) !

ஸ்ரீராம். said...

தைரியமாக மேடை மேல் நிற்க முடிந்ததே.. அந்தளவு பாராட்டுகள்.

நெல்லைத் தமிழன் said...

அந்தப் பெண்ணின் அம்மாவின் முயற்சிதான் என் கண்ணில் நின்றது. நான் 8 வயதில் எப்படி இருந்தேன் என்று யோசிக்கிறேன். மனதில் பயம் இருந்தாலும் மேடை பயம் இருந்ததில்லை."எனக்குத் தெரியும்" என்ற மன தைரியம்தான். இது எப்போதும் (மன தைரியம், அசட்டுத் தைரியம்) என்னுடன் கூட வந்துள்ளது. சேவியர்ஸ் கல்லூரி ஹாஸ்டல் விழாவில் (முதல் வருடம்) மேடையில் ஜாம்பவான்கள் அட்டஹாசமாம்ப் பாடினாலும் நானும் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாடலைப் பாடினேன். சீனியர்ஸ் காலேஜுக்கே உரிய வித்த்தில் விசிலடித்து கத்தினர். நான் பாடலின் இடையில் நிறுத்தி, "எனக்குத் தைரியம் இருக்கு. மேடையில் பாடுகிறேன். உங்களிடம் அது இருந்தால் மேடையில் வந்து பாடுங்களேன்" என்று சொல்லிவிட்டுப் பாடுவதைத் தொடர்ந்தேன். சீனியர்ஸ் தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. சிலர் மறுநாள் என்னிடம் வந்து அப்படி மேடையில் பேசக்கூடாது, என்ஞாய் பண்ணவேண்டும் என்று அறிவுரை சொன்னார்கள். இப்போது அதை நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.

Thulasidharan V Thillaiakathu said...

ஹா ஹா பரவாயில்லையே வல்லிம்மா அப்போதே ஜப்பான் பொண்ணு வேஷம் எல்லாம் போட வைத்திருக்கிறாரே உங்கள் தாயார்...சோப்புப் பெட்டி கிடைத்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்குமே!

சுவாரஸ்யமன நிகழ்வு தான் இல்லையா...இப்போது நினைத்தாலும் இனிமையான நிகழ்வு இல்லையா..

துளசிதரன், கீதா

அப்பாதுரை said...

தமாஷ்.

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

அதை உளறல் என்பதைவிட சமாளிப்பு என்றே கூறுவோம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி சோழ நாட்டில் பௌத்தம்.

வல்லிசிம்ஹன் said...

நல்ல தமாஷாக இருந்திருக்க வேண்டும் துரை. தோழிகள் தோழர்கள் சிரித்தது நினைவிருக்கிறது. ஹாஹா.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம். வேஷம் பொருத்தமாக அமைந்திருக்க வேண்டும்.
பூனைக்கண்.
அந்தப் பெரிய டீச்சர் என்னக் கேலி செய்தது தாயாருக்கு உரைத்திருக்க வேண்டும்.

தன்னால முடிந்ததைச் செய்து அனுப்பினார். பாவம் என் அம்மா.
கூந்தலை இழைய வாரி ,இரட்டைப் பின்னலை சுருட்டி, உச்சியில் ஹேர்பின்னால்
சொருகி இரண்டு ரோஜாவையும் வைத்தார்.
மிக மிக நன்றி.ThuLasidharan, and Geetha.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
நல்ல தைரியம் தான். அவர்களும் அனுசரணையாக வந்து அறிவுரை
செய்திருக்கிறார்களே.

அசட்டுத் தைரியத்தின் வேரே தைரியம் தான்.
அது இருந்தே பல காரியங்களைச் சமாளித்திருக்கிறேன்.

அம்மா அடிக்கடிக் கடிந்து கொள்வார்.பெண்ணா லட்சணமா இரேன் என்று.>\]]

வல்லிசிம்ஹன் said...

ஓ. அது சரி. கைகளைக் கட்டிக் கொண்டுவிட்டதால்
நடுக்கம் தெரியவில்லை. ஸ்ரீராம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி. நல்ல தமாஷ் அது. ராமலக்ஷ்மி.