Blog Archive

Sunday, September 24, 2017

நவராத்திரி நினைவுகள் 1978 -------1

 எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சென்னைக்கு மாற்றலாகி வந்த புதிது. ஒருவருடம் ஓடிவிட்டது. நவராத்திரி நாட்கள் வரப் போகிறது என்று குழந்தைகளிடம் பேச்சு.
  என்னிடம் வந்து கேட்டார்கள். நாம கொலு வைக்கப் போறோமா ம்மா.
ஆஜிப் பாட்டி கிட்டதான் கேட்கணும் செல்லம் என்று சொல்லிவிட்டேன்.
 பெண்தான் கச்சேரி ரோடு வழியாகப் பள்ளிக்குப் போகிறவள்.
அவள் கொலுபொம்மைகள் கண்காட்சி என்பதைப் பார்த்து விட்டு ஒரே
உற்சாகத்துடன்  என் மாமியாரிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

மாமியாருக்கும்  இந்த மாதிரி    கலை விஷயங்களில்  மிகுந்த  சுவை. செய்யலாமே. உன் கையில 30 ரூபாய் தரேன். அதுக்குள்ள  நீயும் அம்மாவுமாப் போய்  வாங்கிக் கொண்டு வாருங்கள். என்றார் மகிழ்ச்சியாக.

பெண்ணுக்கு  ஏக சந்தோஷம்.

அமாவசைக்கு  அடுத்த தினம் இருவரும் கிளம்பி மாட வீதிக்குப் போனோம்.
சின்னச் சின்ன  பொம்மைகளைப் பார்த்து  வாங்கினோம். பூனை,முயல், நாய்ககுட்டிகள்,   ஒரு

துர்க்கை  அம்மன்   , இரண்டு  பாவை விளக்குகள்  எல்லாம்  வாங்கியாச்சு.

அப்படியே   இந்திரா  நகருக்குப்    போய்    , தாத்தா  செய்து  வைத்திருந்த   தேர்  , மாத்திரை  பாட்டில் களில்  செய்தது, பாட்டியின் க்ரோஷா  மேஜை  விரிப்பு,  தாத்தாவின்  ராமர்சீதா வரைபடம்  எல்லாம் வீட்டுக்கு  வந்தாச்சு.






13 comments:

நெல்லைத் தமிழன் said...

முதல் நவராத்திரிக்கு கொலு வைத்தது - மறக்கக்கூடிய நினைவா? ஆனால் சட்டென்று இடுகை முடிந்துவிட்டாற்போல் தோன்றுகிறது. சமயத்தில் பசங்ககிட்ட நம் வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சொல்லும்போது, ஒரு கண்ணியில் தொடராமல் அந்த நினைவுகளில் நாமே அமிழ்ந்துவிடுவதைப் போன்று.

ஸ்ரீராம். said...

30 ரூபாய்க்கு எவ்வளவு பொம்மைகள்!

ராஜி said...

30ரூபாயா?! போதுமா?!

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா ஸ்மால் அண்ட் க்யூட்!!! ரொம்ப அழகா இருக்கு வல்லிம்மா..

சுண்டல் கிடையாதாமா?!!!! ஹாஹாஹா நாங்கலாம் வந்தா சுண்டல் கலெக்ஷ்ன்....கீதாக்கா என்ன சுண்டல் கலெக்ஷன் செஞ்சாங்களோ தெரியலை...இன்னும் அது பற்றி வரலை பதிவு நினைக்கிறேன்..

வல்லிம்மா நவராத்திரி தின வாழ்த்துகள்!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எங்கள் பிறந்த வீட்டில் கொலுப் பழக்கம் இல்லை. ஆனால் புகுந்த வீட்டில் உண்டு. இப்போது அங்குப் பொதுவாக வைப்பதில்லை எல்லோரும் அவரவர் வீட்டில் வைக்கிறார்கள். என் வீட்டில் சில பல காரணங்களால் தொடர்ந்து வைக்க இயலவில்லை என்பதால் வைப்பதில்லை....பழைய நினைவுகள் வந்தது.

நன்றிம்மா

கீதா

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கலை ரசனை உள்ளவர்கள் நவராத்திரியை அதிகம் நேசிப்பர். இவ்வாறான கடந்த கால நவராத்திரி நினைவுகள் பல என் மனதில் தற்போது அலைமோதுகின்றன.

வல்லிசிம்ஹன் said...

ஒரு நவராத்திரியோடு நம் நினைவுகள் நிற்பதில்லை.அன்பு நெல்லைத்தமிழன்.
அதில் சில மகிழ்வு, சில அவ்வளவு
ருசி இல்லை. நவராத்திரி கொண்டாட முடியாத வருடங்கள்.
நிறைய அலைகள்.
நீங்களும் அனுபவித்திருப்பீர்கள். ரசத்தை மட்டும் எடுத்துப் பிரித்து இங்கு
தரலாம் என்று தோன்றுகிறது. இவை எல்லாமே என் மெமொயர்ஸ். எனக்கு மட்டுமே.
உங்களைப் போன்ற நல்ல தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே. மிக நன்றி மா..

வல்லிசிம்ஹன் said...

அப்போது வாங்கின பொம்மைகள் அனைத்தும்
சிறிய அளவு மா ஸ்ரீராம். இப்போது கூட வண்டிகளில்
கொண்டு வருவார்கள். 6 இன்ச் பொம்மைகள்.
அம்மன் மட்டும் கொஞ்சம் பெரிசு. 12 ரூபாய்.
கொலு முடிந்ததும் மீண்டும் செல்வதும் வழக்கம். பாதிவிலையில் கிடைக்கும்.

வல்லிசிம்ஹன் said...

எங்கள் ஆசைக்கு அது போதாது தான். ராஜி மா.
பெரியவர்களுக்கு அது போதும் என்றால் எங்களுக்கு மறுக்க முடியாது.

வல்லிசிம்ஹன் said...
This comment has been removed by the author.
வல்லிசிம்ஹன் said...

அன்பு கீதாமா,
நான் வைக்காவிட்டல் என்ன. கொலு இருக்கும் இடத்தில்
போய்ப் பார்த்தால் போதுமே கண்ணா.

பல வழக்கங்கள் இப்படி நின்று போவதுண்டு.
நம் வழியில் நாம் போவோம்.
அம்பாளும், பகவானும் எப்போதும் நம் மனதில் இருக்கிறார்கள்.
இல்லையா.வாழ்க வளமுடன்.

வல்லிசிம்ஹன் said...

திரு .முனைவர் ஜம்புலிங்கத்துக்கு வந்தனம்.
தாங்கள் வந்து படித்தது எனக்கு மிகவும் பெருமை. நன்றி.
உங்கள் நினைவுகளையும் எழுதுங்கள் ஐயா.

வல்லிசிம்ஹன் said...

Thulasidharan V Thillaiakathu, வணக்கம்மா.
உங்கள் நினைவுகளையும் எழுதுங்கள் மா. நாமெல்லோம் ஒவ்வொரு திசையில் இருக்கிறொம். இந்த நவராத்திரி எண்ணங்களால்
ஒன்று சேருவோமே. கீதாவுக்கும் நினைவுகள் நிறைய இருக்கும்.
நன்றி மா. வாழ்க வளமுடன்.