Blog Archive

Wednesday, September 20, 2017

ஒரு இருமலின் கதை..2. Finish,the end .

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
1950ஸ்   பெண்கள்.
ஒன்றும் பதில் சொல்ல முடியாத  சவுந்திரத்துக்குக் கணவரின் குரல்
தப்பிச் செல்ல வழியானது.
மூ ன்று மாதங்கள் ஆகியும்  சரியாகாத வலி யை நொந்து கொண்டு
மாடிப்படியருகில் நின்று என்ன மா வேண்டும் என்று வினவினாள்.

நல்ல பாண்ட், ஷார்ட், ஜாக்கெட் எல்லாம் வேணும்.
இன்னிக்கு கிளப்பில்  மீட்டிங் என்று குரல் வந்தது
இறங்கி வந்து கொண்டிருந்த மகனிடம்
அப்பாக்கு எடுத்துக் கொடு கண்ணா என்று தயவாகக் கேட்டுக் கொண்டாள்
அவனும்   அப்பாவுக்கு உதவ உள்ளே சென்றான்.

அனைவரும் வெளியே சென்ற பிறகு நிதானமாக
உட்கார்ந்த  சவுந்திரத்துக்குக் கணவனின் எழுபதாவது பிறந்த நாள் வருவது நினைவுக்கு வந்தது.

அவர் ஹோமம் செய்வதற்கெல்லாம் ஒத்துக்க கொள்ள மாட்டார் என்பதும் தெரியும்.
கோவிலில் தரிசனம் என்று பூர்த்தி செய்யலாம்  பிறகு அவர் தன நண்பர்களோடு   பார்ட்டி வைத்துக் கொள்ளட்டும் என்று முடிவு செய்தாள்

மாலையில் ஒவ்வொருவராக வந்து அவரவர் அறையில்
உணவுக்குப் பின் அடைந்து கொள்ளவும், சவுந்திரம் மெதுவாகக் கணவரிடம், அவர் பிறந்த நாள் திட்டத்தைச் சொன்னார்.
 நல்ல மனநிலையில் இருந்தவர் சரி என்று சொல்லி மாடிக்குச் சென்றார்.
அடுத்த நாள் காலையிலும்
அதே இருமல், பல் தேய்க்கும் கர்ஜனை  .,கமறல், இத்யாதி நிறைவேறியது.
இன்னும் கனை த்த வண்ணம் இறங்கி வந்தார் வாசுதேவன்.
பின்னால் சுருங்கிய முகத்துடன் மருமகள்.

கணவர் தன வண்டியை எடுத்துச் செல்லும் வரை காத்திருந்த சவுந்தரம் ,
 மாலதி, அப்பாவுக்கு மூச்சு விடமுடியாமல், பக்கத்தில் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்த போதுதான் அவரது நுரையீரல் பாதிப்பு தெரிந்தது
அப்பொழுது டாக்டர் சொன்ன அறிவுரைகளைக் கடைப் பிடித்து வருகிறார்.
இந்த ஆறு மாதமும், அவர் பக்கத்தில் இல்லாமல் நான் கீழே நிம்மதியா இருக்கேன்னு நினைக்கிறியா.
ஒவ்வொரு நாளும் அவர் எழுந்திருக்க கொஞ்ச நேரம் சென்றாலும் மனம் படபடக்கும். பிறகு பல் தேய்த்து, சளியை வரவழைத்து சுத்தம் செய்யும் சத்தம் கேட்டால் தான் எனக்கு நிலை கொள்ளும்.
என் ஆதாரசுருதியே இந்த இருமலும் அவர் விடும் குறட்டை சத்தமும் தான்.

நான் பழகிவிட்டேன்.

நீங்கள் கஷ்டப் பட வேண்டாம். இதே தெருவில் இன்னொரு ஃ பிளாட், விற்பனைக்கு வருகிறது. தென்னை மரம் பால்கனி என்று அழகாக இருக்கிறது.
இந்த ஆவணி மாதம் நீங்கள் அங்கே போய் விடலாம்.
இதே மாமியே உனக்கு உதவி செய்ய வந்துவிட்டுப் பிறகு இங்கே வருவார். கவலைப் படாதே என்றால் ஆதரவாக.
மாலதிக்கு கண்ணில் நீர்.
சரிம்மா. உங்கள் அளவுக்கு எனக்கு இன்னும் புரிபடவில்லை. ஆனால் உங்களை மாதிரியே பொறுமையாக இறுக்கப் பழகிக் கொள்கிறேன் என்றாள் .
சிக்கல் விடுபட்டது.
உண்மையில் நடந்தது வேறு.
கதைக்கு மங்கலம்   தான் தேவை என்று எனக்குத் தோன்றியது. நன்றி நண்பர்களே.



10 comments:

ஸ்ரீராம். said...

தனியாகப் போவது ஒன்றுதான் தீர்வா! எப்படியோ சுபமாக முடிந்தால் சரி!

நெல்லைத் தமிழன் said...

இதை வேறு வடிவில் படித்த ஞாபகம் இருக்கு. எல்லாம் இறைவனின் செயல். அவன்தான் conflictsஐ உண்டாக்குகிறான்.

பழைய புகைப்படம் நல்லா இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஶ்ரீராம், இதில் உள்ளிருப்பது கணவனுக்கான ஆதரவு. எந்தக் காலத்திலயும் அவருக்கு
இன்னோருத்தரால் ஒரு உதாசீனம் வரக்கூடாது
என்கிற எண்ணமும் கூட.அவர் தனது எண்பதாவது வயதில் தான் காலம் அடைந்தார்.
வசதி இருந்ததால் வேறு வீடு போனார்கள். வீண் உரசல்கள் தவிர்க்கப்பட்டன.:)

வல்லிசிம்ஹன் said...

அசாத்திய நினைவு உங்களுக்கு நெல்லைத் தமிழன். அது ஒரு சின்ன வெளிப்பாடு. இதுஅதன்
முழு வடிவம்.
இறைவன் செயல் என்பதில் மாற்று எண்ணமே இல்லை.எத்தனையோ வாழ்வில் சந்திக்கிறோம்
சில மாற்றங்களை வசதிக்காகச் செய்து கொள்ளலாமே.நிம்மதி கிடைக்கும் என்றால்.

Avargal Unmaigal said...

அந்த காலத்து பெண்கள் தன் கணவர் எப்படிபட்டவர்களாக இருந்தாலும் தான் எப்படி கஷ்டப்பட்டாலும் தன் கணவரை யாரும் உதாசீனப்படுத்திவிடாமல் கவனமாக பார்த்து கொண்டார்கள்.....

Avargal Unmaigal said...

நாளை முதல் பூஜைகள் ஆரம்பிக்க விருப்பதால் இருமலுக்கு சீக்கிரம் மங்களம் பாடிவிட்டீர்களோ

வல்லிசிம்ஹன் said...

அந்தக்காலத்தில் மட்டும் இல்லை துரை, இந்தக் காலத்திலும் நான் அப்படித்தான்.
நான் எவ்வளவு வேணும்னாலும் கோபித்துக் கொள்வேன். மற்றவர்கள் ஏதாவது சொன்னால்
சுருக்னு பதில் கொடுத்துவிடுவேன். இவர்தான் யாரையும் ஒன்றும் சொல்ல மாட்டார்.
நன்றி துரை.

கொலுவுக்காக மங்களம் பாடவில்லை. இங்கே கொலு பண்டிகை
கொண்டாடமுடியாமல் ,ஒரு அசந்தர்ப்பம் நேர்ந்துவிட்டது.

நான் சொல்ல வந்த சம்பவம் வேறு மாதிரி ஆச்சு.
நல்ல விதமாக முடித்தேன்.

ஏகாந்தன் ! said...

கதையைத் தொடருமுன் பழைய படத்தைக் கொஞ்சம் பார்த்திருந்தேன். இந்த மாதிரிப் பண்பான மூதாதையர்களின் சந்ததியா நாம் என நினைப்பதில் பெருமிதம் இருக்கிறது. நமது படங்களை நமது சந்ததிகள் ஒருவேளை பார்க்க நேர்ந்தால் அவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற கவலையும் கூடவே வந்தது.

இருமலுக்காக இன்னொரு வீடா? இப்படி எல்லாருக்கும் வாய்க்காதே! இருந்தாலும் நீங்கள் சுமுகமாக முடித்திருக்கிறீர்கள்.

’இருமலும் குறட்டை சத்தமும்தான் என் வாழ்க்கையின் ஆதாரஸ்ருதி..’ இப்போது தொட்டதற்கெல்லாம் சண்டை, பிரிவு, விவாஹரத்து எனப் பரபரக்கும் யுவர்கள் இந்த வரியைக் கொஞ்சம் படித்தால் நன்றாக இருக்கும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏகாந்தன்,
அன்பினால் பிணைந்த பிறகு,

சௌந்திரம் சித்திக்கு, கணவர் மேல் அத்தனை ஆதுரம்.
அவரும் டெல்லியில் ஐஏ ஏஸ் ,பெரிய வேலையில் இருந்து

ரிடயராகி வந்தவர். உடல் நிலைமை சீராவதும்,கெடுவதும் 65க்கு மேல்
சகஜம்.
வளம் இருந்ததால் தனியே வைத்தார்கள்.
என் கதை வேறு
நான், என் மாமியார், அவருடைய மாமியார் என்று தான் இருந்தோம். அடங்கித்தான் போகணும்.
இல்லாவிட்டால் பொல்லாத பெயர் வரும். அதுவோ நூறாண்டுகளாக
ஒரே இடத்தில் வாழும் குடும்பம்.

சௌந்திரம் கதை மாடர்ன் மாமியார் மாதிரி.
நிம்மதி இல்லாமல் ஒன்றாய் இருப்பதைவிடப் பிரிவது எவ்வளவோ மேல்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சிக்கல் அவிழ்ந்த விதம் அருமையாக இருந்தது.