Blog Archive

Friday, August 04, 2017

ஜெய லக்ஷ்மி என்னும் என் தாயார்...

 லக்ஷ்மி என்ற சொல்லுக்கு என்னைப் பொறுத்த வரையில் அர்த்தம் என் அம்மா தான்.

  முதன்முதலில் கால்ண்டர் லக்ஷ்மியை பெரிய ஃப்ரேமில் வடிவு செய்து என் தந்தை பூஜை அறையில் மாட்டிய போது ,அப்பாவிடம் கேட்டது நினைவுக்கு வருகிறது வரைந்தவர் நம் அம்மாவைப் பார்த்திருக்கிறாரா என்பதுதான். அப்பாவுக்கு எவ்வளவு சந்தோஷம் என்று சொல்லி
முடியாது.

 அவளும் தன் தாமரை விளக்கில் வெள்ளி தவறாமல் விளக்கு பூஜை செய்வாள். பால் பாயசம் உண்டு. 
அப்பாவின் சுந்தர காண்டம் உண்டு.
 எனக்கும் குரு முகமாக விளக்குப் பூஜை செய்யக் கற்றுக் கொடுத்தார்கள். இந்த அடங்காப் பிடாரியும் அடங்கி வணங்கியது அந்தத் தெய்வத்தை.

தம்பி தன் சினேகிதன் கொடுத்த பெரிய லக்ஷ்மி படத்தை ஒரு நாள் பரிசாகக் கிடொத்தான். அவளுக்கும் அழகான ஃப்ரேம் வாய்த்தது.
 ஒரு கொலுவுக்கு 20 ரூபாயில் லக்ஷ்மி பொம்மையும் கொண்டுவந்து கொடுத்தான்.
அக்கா வாழ்வில் பொன்னும் பொருளும் குவிய வேண்டும் என்பதில் அவ்வளவு ஆர்வம்.
உண்மையான பக்தியுடன் என்  லக்ஷ்மியைப் பூஜித்தேன்.
வளம் பெருகியது.
 பெற்ற மக்கள் பூரிக்கும் படியாகப் படித்து முடித்து வாழ்வும் அமைத்துக் கொண்டார்கள்.

 என் அம்மா வருடா வருடம் ஏதாவது ஒரு லக்ஷ்மி ரூபத்தைக் கொடுத்துக் கொண்டே இருப்பாள். அவள் கை என்றும் வற்றியதில்லை.
இதயமும் விசாலம்.
வாழ்வில் சோதனை மேல் சோதனை வந்தும் 
அவள் தன் தெய்வத்தைப் பூஜிப்பதை நிறுத்தவே இல்லை.
மகனையே இழந்தவுடன்  மலைத்தாலும் மனம் கோணி தெய்வத்தைச் சபிக்கவில்லை.

பூமா தேவியைப் போல் துயரம் காத்தாள்.
தவக்கோலம் கொண்ட அம்மன் போல ,மெய்யடக்கி உயிரையும் தியாகம் செய்தாள்.

 அவள் கொடுத்த  அத்தனை 


தெய்வ  உருவங்களையும் பார்க்கிறேன்.
 எல்லாவற்றுக்கும் மேலே   என் தாய். அவள் தான் என் லக்ஷ்மி. அம்மா வணக்கம். உன் பரம்பரையைக் காப்பாற்று. எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.



15 comments:

கோமதி அரசு said...

அக்கா வணக்கம், வாழ்க வளமுடன்.
என் அம்மா பேர் வீரலெட்சுமி.
மகள், மகன் இருவரை இழந்த போதும் அவள் உங்கள் அம்மா போல் தெய்வத்தை சபிக்கவில்லை. அப்பவையும் இழந்த போதும் துவளாமல் தம்பி, தங்கைகளை நல்லபடியாக கல்யாணம் செய்து கொடுத்தார்கள்.
இதை படித்தவுடன் என் அம்மா நினைவு வந்து விட்டது.
அப்படியே என் அம்மாவை குறிப்பிடுவது போல் இருந்தது.
அம்மாக்களின் மன தைரியம் வேண்டும் . சிறிய கஷ்டத்திற்கும் துவண்டு விடுகிறேன். தெய்வமாய் அம்மாக்கள் நம்மை காக்க வேண்டும்.
பதிவை படித்து முடித்தவுடன் கண்ணீர் வந்து விட்டது.

ராஜி said...

தாயை மீறிய தெய்வம் இல்லம்மா

தி.தமிழ் இளங்கோ said...

அம்மா என்றால் அன்புதான். உருக்கமான பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

அன்னையின் பூரண அருள் என்றும் நிலைத்திருக்கட்டும்.....

வல்லிசிம்ஹன் said...

கட்டாயம் நிலைத்திருக்கும் வெங்கட். அம்மாவின் அருள் இல்லாமல் ஏது இந்த உலகம்.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி இளங்கோ. பண்டிகை நாட்களில்
அன்னையின் நினைவு வழக்கமாகி விட்டது.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ராஜி. உண்மை.

வல்லிசிம்ஹன் said...

அன்பு கோமதி, பெயருக்கு ஏற்ற வீரலக்ஷ்மி தான் அம்மா.
இத்தனை துயரங்களைக் கடந்து கரையேற்றி இருக்கிறாரே.
ஒரு அன்னைக்கு மக்களை இழப்பது எத்தனை பெரிய துன்பம். மனம் நொந்தது மா.

நாம் தான் உரம் கொள்ள வேண்டும். தூளாகிவிடுகிறோமே
இப்படி. அன்னைகள் துணை இருக்கட்டும் என் அன்புத் தங்கையே வாழ்க வளமுடன்.

Geetha Sambasivam said...

அம்மாக்கள் அனைவரும் தெய்வமாக இருந்து அவரவர் குழந்தைகளைக் காத்து வருகிறார்கள். தொடரட்டும் அது!

ஸ்ரீராம். said...

//மகனையே இழந்தபோது முளைத்தாலும் மனம் கோணி தெய்வத்தைச் சபிக்கவில்லை//

பண்பட்ட மனம். வணங்குகிறேன்.

அம்மா என்றால் அன்பு.

வல்லிசிம்ஹன் said...

அதைத்தான் நானும் வேண்டுகிறேன் கீதா. அனைவரும் நலமாக இருக்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம். என்றும் எப்போதும் அம்மா என்றால் அன்பு தான்.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்ச்சி. அம்மாவுக்கு என் நமஸ்காரங்கள்.

வல்லிசிம்ஹன் said...

எல்லோரும் அம்மாவை மறக்காமல் அணைத்துக் கொள்ளணும் ராமலக்‌ஷ்மி. நீங்களும் அப்படியே என்பதை அறிவேன். வாழ்க வளமுடன்.

மாதேவி said...

"அவள்தான் என்லட்சுமி " உங்கள் அன்பும் ஆதங்கமும் புரிகிறது. படித்தபோதுமனம் நெகிழ்ந்தது.