Blog Archive

Saturday, August 05, 2017

நானும் புதிய சமையல் முறைகளும் 1966

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.

ரசமான  பதிவுகள் போடும் கீதா சாம்பசிவம்
அவர்கள் பதிவில் புது ரசம் பற்றிக் குறிப்பு பார்த்தேன்.

திருமணமான புதிதில் எனக்கு சமையல் கற்றுத்  தந்தவர்கள்
 சில நல்லவர்கள்.
அம்மாவீட்டில் அப்பா  கைமணத்திலேயே ருசி கண்டு, அவசரக் குறிப்புகள் சில அம்மா கைப்பட எழுதிகே கொடுத்ததை வைத்துக் காலம் ஓட்ட ஆரம்பித்தவள்,
சிங்கம் படும் பாட்டை மனதில் கொண்டு கொஞ்சம்

அக்கறை காட்ட ஆரம்பித்த ஒரு நாலு மாதங்கள் கழித்து.

மதியம் சாப்பிட வருபவரை முதலில் சாப்பிடச் சொல்லி முகத்தைப் பார்த்திருப்பேன்.
பரிதாபமாக  அவர் முகம் மாறினால் நான் அந்த சாமையைச் சாப்பிட மாட்டேன். வெறும் தயிர் சாதம் போதும் என்று
அப்பளம் துணையோடு பசி போக்கிக் கொள்வேன். இரவு வரும்போதே ஏதாவது  சாப்பிட வாங்கி வந்துவிடுவார்.

இந்தக் கதையெல்லாம் கொஞ்ச நாட்களுக்கு.
1966 ஆடி
சேலத்துக்கு  இட மாற்றம்  ஆனது.
நான் இரண்டானேன். பசி அதிகமாக என் சமையலை
முன்னேற்ற வேண்டிய  கடமை வந்தது.
தோதாக அமைந்தாள்   சின்னப் பொண்ணு. அதுதான் அவள் பெயர்.
 ஒரு நாற்பது வயதிருக்கும்.
உணக்கியா சாப்பிட  ஆசையில்லயா.. அம்மிக்கல்லு வாங்கியாறேன் . அரைச்சு சமையல் செய் , குட்டி  அம்மிக்கல்லும், குழவியும்  கொண்டு வந்து போட்டுவிட்டாள் .

அம்மி ரொம்பப் பிடித்தது. பருப்புத் தொகையில் , தேங்காயத் துகையால், மிளகு குழம்பு ,காரக்  குழம்பு என்றெல்லாம்   செய்து கொள்ள ஆரம்பித்தேன்.

பூண்டு பழகக்  கொஞ்ச நேரம்  ஆச்சு.,
மருந்தாக எடுத்துக் கொள்கிறோம் என்ற நினைவில்  சாப்பாடு உள்ளே போனது.
அப்பொழுது சின்னப் பொண்ணு கற்றுக் கொடுத்தது ஈஸி ரசம்....

புளி , தக்காளி, கொத்தமல்லித் தழை, கருவேப்பிலை, துவரம்பருப்பு, சீரகம், மிளகு, பூண்டு, தனியா, எல்லாவற்றையும் ஒன்றாக வறுத்து, பெருங்காயமும் சேர்த்து  அம்மியில் கொட்டும் பொழுதே பசி வயிற்றைக் கிள்ளும். கூ டவே சிறு வெங்காயத் துண்டுகளும் சேர  அமோக மணம்

அரைக்க அரைக்க மேலே வரும்.
 வெழுமூன அரைத்து   ,மிச்சம் இருக்கும் பொடிகளையும் அம்மியிலிருந்து வழித்தெடுத்து
தண்ணீரில் கரைத்து  , வாணலியில் நல்லெண்ணெய் விட்டுக் கடுகு,சீரகம், வத்தல் மிளகாய் போட்டுத் தாளிக்க வேண்டும் அடுப்பில் ஏற்றிக்  கொதிக்கும் போது உப்பு சேர்க்கலாம்.

ஒரு இன்ஸ்டன்ட்  ருசி ரசம் ரெடி.
ஒரு வருடம் கழித்து மீனாக்ஷி அம்மாள் அவர்களின் சமைப்பது எப்படி  புத்தகக் கடையில் மூன்று பாகங்களாக வாங்கிய பிறகு ஒரு புது உலகமே வந்துவிட்டது.
மனம் நிறைந்த வணக்கங்கள் அந்த அம்மாவுக்கு.



26 comments:

ஸ்ரீராம். said...

ரஸமான அனுபவம்! இதே போல காய்கறிகளை எல்லாம் அரைத்துப்போட்டு கூட குழம்பு வைத்திருக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

வெழுமூன அரைத்து.... இதற்கு அம்மிதான் லாயக்கு..... இப்போது அம்மி பயன்படுத்துவர்கள் ரொம்பவே குறைவு - அதுவும் நகரங்களில்.

இன்ஸ்டண்ட் ரசம் - சுவையான குறிப்பாக இருக்கிறது!

மிக்ஸியில் அரைத்து செய்தால் இவ்வளவு சுவை வருமா என்பது சந்தேம் தான்.

அப்பாதுரை said...

படிக்கிறப்பவே பசிக்குது.

கோமதி அரசு said...

அருமையான ரசம்.
ரசம் தந்த நினைவுகள் அருமை.

Geetha Sambasivam said...

அம்மி! அம்பத்தூரில் இருந்தவரை கொஞ்சமாக அரைக்க அம்மியையே பயன்படுத்தி வந்தேன். துகையல், சட்னி, வாழைக்காய்ப் பொடி எல்லாம் அதிலே தான்! இங்கே அம்மியை வைத்திருந்தாலும் எங்கே போடுவது! :(

உங்கள் அனுபவம் நல்ல "ரச"மான அனுபவம் தான்!

நெல்லைத் தமிழன் said...

இன்ஸ்டன்ட் ரசமும் ஆரம்பகால நினைவுகளும் ரசமாக இருத்தது.

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...! உங்களின் அனுபவமே சிறந்த சுவை அம்மா...

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஶ்ரீராம். வாழ்விற்கு சுவை கூட்ட நல்ல சமையல் வேண்டும். ரசனை கூட ரசம் தேவை. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நான் இன்னும் அம்மிக் கல்லை துளசி மாடம் அருகே போட்டு வைத்திருக்கிறேன் வெங்கட். தேங்காய் உடைக்கத் தோதாய் அங்ககே இருக்கிறது.
மிக்ஸியில்
அரை படும் போது, அந்த உஷ்ணத்தில் சுவை மாறத்தான் செய்கிறது. என்ன செய்யலாம்:)

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் துரை. அப்போது எல்லாம் நான் ஆரோக்கியமாகவே உணர்ந்தேன். அரைப்பது ஒரு நல்ல தெரபி.

வல்லிசிம்ஹன் said...

வரணும் கோமதி, சமைப்பதில் சுவை கூட்டி, அருமை சேர்த்து மற்றவர்களுக்குக் கொடுப்பதில்
தான் நம் உலகம் அப்போது விரிந்தது. நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அபார்ட்மெண்ட் வாழ்ககையில் அம்மிக்கு இடமேது. கீதா..
நம் சென்னையிலேயே அம்மி கிடையாது இப்போது. புளி, உப்பு, கொத்தமல்லி,ப.மிளகாய் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டினால், அடுப்பில் தோசை வார்ககும் போதே, தொட்டுக்க துகையல் தயாராகிடும்.

நீங்கள் சொல்லும் வாழைக்காய்ப் பொடியும் அம்மியில் தான் அரங்கேறும் :)

வல்லிசிம்ஹன் said...

வரணும் நெல்லைத் தமிழன். வாழ்க்கையின் முதல் கட்டத்தின் உற் சாகம் அது :).

வல்லிசிம்ஹன் said...

ஆஹா, நன்றி தனபாலன்.பழங்கணக்கு எப்பவும் இனிமை.நன்றி மா.

ராமலக்ஷ்மி said...

அம்மியில் அரைத்துச் செய்யும் எதற்கும் இருக்கிற சுவையே தனிதான்.

அப்பாதுரை said...

ரசத்தில் வெங்காயத் துண்டுகள் போடணுமா? இல்லை அரைக்கனுமா/

அப்பாதுரை said...

செஞ்சு பாத்தேன், நல்லா இருக்கு. ஜீரா ரசம் மாதிரி சீக்கிரம் பண்ண முடியுது ஆனா இன்னும் ருசியா இருக்கு. ரெண்டு ஸ்பூன் நெய் விட்டு தாளிச்சு கொட்டினேன்.. கம கமா..

Anuprem said...

சூப்பரான ரசம்.. ,படிக்கும் போதே செய்ய தூண்டுது....


புளியும் சேர்த்து அரைக்கனுமா....

வல்லிசிம்ஹன் said...

Thanks dear Anu ma. seythu paarungo.

வல்லிசிம்ஹன் said...

Yes Ramalakshmi, I feel food to do ammi samaiyal. thank you.

வல்லிசிம்ஹன் said...

Welcome Durai.so happy you tried making it . chinna vengaayam araikkum bOthu serththuk kollaNum. one is enough.Thank you for the lovely compliment.

அபயாஅருணா said...

ரெசிபி ருசியா இருக்கும் போல செஞ்சு பாக்கணும் நாளைக்குத்தான்

மாதேவி said...

இனிய அனுபவங்கள்.

வல்லிசிம்ஹன் said...

Thank you Abhaya Aruna. Please make it and have fun. God Bless.

வல்லிசிம்ஹன் said...

Thank you Maadhevi.

Thulasidharan V Thillaiakathu said...

சுவாரஸ்யமான அனுபவங்கள்! வல்லிம்மா....எனக்கும் கிட்டத்தட்ட இதே போன்ற அனுபவம் தான்...நான் சென்ற இடங்களில் எல்லாம் நிறைய நல்ல மனிதர்கள் பலர் கற்றுக் கொடுத்தார்கள். ஒவ்வொருவரிடமிருந்தும் புதுசு புதுசாகக் கற்றுக் கொண்டேன். அப்படிக் கற்றுக் கொண்டதுதான் இந்த ஈசி ரசம். அத்தனையும் பொடி செய்து அப்படியே அடுப்பில் ஏற்றித் தாளித்துப்பொங்க விட வேண்டியதுதான்...வெங்காயம் சேர்த்துச் செய்ததில்லை மற்றவை அப்படியே. இப்போதும் செய்வதுண்டு. ருசியாகவே இருக்கும். வெங்காயமும் சேர்த்துச் செஞ்சுப் பார்த்துடறேன்...

உங்கள் அனுபவங்களைத் தொடர்கிறோம் வல்லிம்மா...

கீதா