Blog Archive

Wednesday, August 02, 2017

ஆடாத நீர் நிலைகள்.

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்........ ஆடி பதினெட்டு வருகிறதென்றால் அத்தனை உற்சாகம் வரும்.
அத்தனை நீர் நிலைகளுக்கும் போகாவிட்டாலும் காவிரித்தாயின் படத்தையாவது கண்டு களிப்பதுவும்,
வீட்டுக் கிணற்றுக்குப் பூஜை செய்வதும், கலந்த சாதம் செய்வதும்
  அமர்க்களமாக இருக்கும்.
தண்ணீரின் அருமை அறிந்தவர்களாக இருந்தோம்.

இன்று பழையதை நினைத்துப் புழுங்க வைத்துவிட்டார்கள் மனித உருவில் வந்த
  அசுரர்கள்.
தண்ணீர் இல்லாத காவிரியைப் பார்க்கத்தான் முடியுமா.
நிலத்தை நம்பி வாழ்ந்த அத்தனை விவசாயிகளின் உயிருக்கு யார்
பொறுப்பு.
 தண்ணீருக்காகப் போராடிய சென்னை நாட்கள் நெஞ்சை வரள வைத்துவிட்டன.
தண்ணீர் வாங்க பணம் இருப்பவர்கள் பிழைத்தார்கள்.
  நடு இரவில்  நிலத்தடி பம்ப் அடித்து இரண்டு மூன்று குடங்கள் சேமித்த எங்கள் ராணி போன்றவர்கள் என்ன பாவம் செய்தார்கள்.
எப்பொழுதுமே வரளாத எங்கள் கிணறு ஆரத்தி கரைத்த மாதிரி வண்ணத்தில் நீரைக் கொண்டது ஏன்.
  போர்வெல்லிலும் அடைப்பு. வரிகட்டித் தண்ணீர் அனுப்பிக் கொண்டிருந்த
அரசுக்கு வேறு எத்தனையோ கவலைகள். பணம் கட்டி வீட்டுக்கு வந்த Metro லாரியில்
எங்கள் Sump வரை அனுப்ப பைப்பின் நீளம் பற்றவில்லை. அந்த இடத்திலேயே,
அந்த வண்டி ஓட்டுனர் வேறு ஒருவருக்குத் தண்ணீர் விற்றுவிட்டார்.
இணையத்தில் பார்த்தால் Water delivered என்று வருகிறது.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர். வாழிய பாரத மணித்திரு நாடு.
ஆடிப்பெருக்குக்கான வாழ்த்துகள்.

17 comments:

மாதேவி said...

தண்ணீரின் அருமை பட்டால்தான் புரியும். ஆடிப்பெருக்கு வாழ்த்துகள். பெருகுக காவேரி.

ராஜி said...

ஆடி பதினெட்டு போஸ்ட் நச்சுன்னு முடிச்சுட்டீங்க.

ஆடி பெருக்கு நன்னாள் வாழ்த்துகள்

வல்லிசிம்ஹன் said...

உண்மைதான் மாதேவி. நாம் பட்டால் தெரியப் போவதில்லை. அதிகாரத்தில் இருப்பவர்கள் படவேண்டும். காவிரி பிழைத்துப் பெருகட்டும் வாழ்த்துகள் அம்மா.

வல்லிசிம்ஹன் said...

துன்பம் வந்தால் தானே மனம் பொங்குகிறது ராஜி மா.
ஐப்பசி மாதம் வந்த போது அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் சம்ப்பிலிருந்து வெளியே போய்க் கொண்டிருந்தது.
என்ன காரணம் என்றே புரியவில்லை. இப்பொழுது அங்கே உட்கார்ந்து பல்லாங்குழி விளையாடலாம்.
ஆடி சிறக்கட்டும் அம்மா. காவிரி பெருகட்டும். வாழ்த்துகள் கண்ணா.

வெங்கட் நாகராஜ் said...

ஆடிப்பெருக்கு.... வறண்டு கிடக்கும் காவேரி ஆறு... வருத்தம் தான் மிஞ்சுகிறது.

ஸ்ரீராம். said...

தண்ணீர் வியாபாரிகள். பைப் அளவு பற்றாததால் வேறொருவருக்கு விற்றதே அநியாயம் என்றால், நமக்கு தந்திருப்பதாய் குறுந்தகவல் வருவது அடுத்த வயிற்றெரிச்சல்.

ஆடி 18. பதினெட்டாம் பேருக்கு! ஹூ.....ம்.

கோமதி அரசு said...

தண்ணீருக்கு மக்கள் படும் அவதி பார்க்க கஷ்டமாய் இருக்கிறது அக்கா.
நாங்கள் பழைய வீட்டை பழுது பார்க்கிறோம். அதற்கு தண்ணீர் வாங்கி தான் செய்கிறோம்.
ஆடி வர வேண்டும் காவேரி.
எல்லோருக்கும் நலம் தர வேண்டும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நம்ம பற்றி உங்களுக்கு சொல்லவே வேண்டாம்....!

லாரி பெருக்கு...!

நெல்லைத் தமிழன் said...

"பழையதை நினைத்துப் புழுங்க வைத்துவிட்டார்கள் மனித உருவில் வந்த
அசுரர்கள்" - உண்மைதான் வல்லிசிம்ஹன் மேடம். மணலைக் கொள்ளையடிப்பவர்கள், தண்ணிரில் கழிவைக் கலந்து நீரைக் கெடுப்பவர்கள் - இப்படி 5% மக்கள்னால, மீதி 95%பேரும் கஷ்டப்படுகிறார்கள்.

ஆடி 18 - கலந்த சாதம் - ஆற்றின் கரையில் ஊர் மக்கள் எல்லோரோடும் சாப்பிட்டது நினைவுக்கு வந்துவிட்டது. இப்போ ஆத்தையும் காணோம். ஊர் மக்களையும் காணோம் (தாமிரவருணில.. அந்த ஊர் ஆட்கள்லாம் ஊரைவிட்டுப் போய் பல வருடங்களாச்சு. அடுத்த தலைமுறைக்கும் எங்க ஊருக்கும் சம்பந்தம் இருக்கறமாதிரி தெரியலை-கீழநத்தம்)

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
திருச்சியில்,முசிறி பக்கத்தில் விவசாயம் செய்து வரும் பையன், மகனின் தோழன்
வந்து அவ்வளவு வருத்தப்பட்டார். நிலங்கள் வறண்டு போய், சொந்தக்காரர் வீட்டிலிருந்து ,செங்கல்பட்டு ஜில்லா... விலிருந்து விளைந்த அரிசி வீட்டில் புழங்குவதாகச் சொன்னார். காவிடரி மணல் கொள்ளையினால்,எப்போதாவது திறந்து விடப்படும் தண்ணீர் இரண்டே மணி நேரத்தில் கடலுக்குச் சென்று விடுகிறதாம். மணலுக்குப் பதில் கற்களே இருப்பதால் தாண்ணீரை உறிஞ்ச வழியில்லை. கை வைத்தால் பெருகும் காவிரி ஊற்று, கிணறு தோண்டி கூடக் கிடைப்பதில்லையாம். இந்த அரக்கர்களுக்கு எங்கே விதித்திருக்கிறதோ நரகம்.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் ஸ்ரீராம்,
சிலபேரிடம் பெருகுகிறது. நமக்குப் பணம் வேண்டாம். நீர் போதும்.
அவர்களுக்கு நம்மைக் கவனிக்க எங்கே நேரம். ஒருவருக்கொருவர் பேரம் பேசி
விலை போய்க் கொண்டிருக்கிறார்கள்.

வல்லிசிம்ஹன் said...

வரணும் தனபாலன். தண்ணீர் என்றல் முதலில் நினைவுக்கு வருவது திண்டுக்கல் தான். பெயரிலியே கல் இருந்தாலும் ,நாங்கள் இருந்த காலத்தில் வீட்டு ஒரு கிணறு இருக்கும். குடிக்க மட்டும், நல்ல தண்ணீர்க் கிணறு என்று தேடிச் சென்று குடத்தில் கொண்டு வந்த நாட்கள் நினைவிலிருந்து மறையவில்லை.
அதே போல் திருச்சியில் இருந்த போதும் ,வீட்டுக் கிணற்றின் தண்ணீர் உப்புக் கரிக்கும். காவிரித் தண்ணீர் கொண்டுவர மணி என்று பெயரோடு ஒரு பையன் சைக்கிளில் கொண்டுவரக் காத்திருப்பேன். ஒரு நாளைக்கு இரண்டு குடம்.
அப்போது இளமைக் காலம். எல்லாவற்றையும் சகிக்க முடிந்தது.
இந்தத் தடவை சென்னை சோதித்துவிட்டது. அதுவும் மகள் நான்கு வருடங்களுக்குப் பிறகு வந்த சூழ்னிலையில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் என்னைப் பொறுமை இழக்க வைத்து விட்டன.

லாரி சாம்ராஜ்யமா திண்டுக்கல்லில்.
வருத்தம் தான். எத்தனை அடிகள் பூமியில் துளையிட்டார்களோ. நன்றி மா. பொறுத்திருப்போம்.

வல்லிசிம்ஹன் said...

அன்புத் தங்கை கோமதிக்கு,

தண்ணீர் வாங்குகிறோம். என்பதே எங்கேயோ தண்ணீரும்
குறைந்து கொண்டே வருகிறது என்றுதானே பொருள். பழங்கானத்ததில்
கிணற்றடியில் நீராடிக் கிடந்த நாட்கள் நினைவில் பெருகுகிறது.

தவறுகள் திருந்தினால் மண்ணும் வானமும் திறக்கும்.
பார்க்கலாம். நலமே வாழ்க அம்மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
தாமிர வருணியில் பளிங்கு போல் நீர் பார்த்த நினைவு.
அது ஆச்சு 60 வருடப் பழைய நினைவு.
எனக்குப் புரியாத புதிர் இந்தக் கொடுமை எல்லோருக்கும் பொதுவாக இல்லையே.
சிலபேர் தண்ணீருக்குக் கஷ்டப் படுவதாகவே தெரியவில்லை.
அவர்களுக்குக் குளிக்கக் குடிக்க நீர் வளம் பெருகியே இருக்கிறது.

என் மாமியார் முன்பு சொல்வார்கள்.குவைத்தில் தண்ணீர் கிடையாது. அஙே பணம் உண்டு என்று. நம் ஊரும் அதுபோல் ஆகிவிட்டதோ.
நினைக்க நினைக்க ஆறவில்லை. நன்றி மா.

அப்பாதுரை said...

தமிழக நதிகளில் நீராடிப் பார்த்தவர்களுக்கு இப்பொழுது துக்கம் தான்.

Geetha Sambasivam said...

இங்கே காவிரியைப் பார்த்தால் கண்ணில் வெள்ளம்

Thulasidharan V Thillaiakathu said...

ஆடிப் பெருக்கு எங்கள் ஊரில் ஆற்றங்கரை மண்ணில் கீச்சு கீச்சுத்தாம்பாளம் விளையாடிய படி ஊர் மக்களோடு கலந்த சாசம் எல்லாம் பகிர்ந்து உண்டு களித்த நாட்கள் ஒவ்வொரு முறையும் மனதில் வந்து போகும். வாழ்க்கை மாறி ஊரைவிட்டு வந்த பிறகு ஆடிப் பெருக்கு என்று உணவோடு முடிந்து விடுகிறது....

கீதா