Blog Archive

Sunday, April 16, 2017

பாலித் தீவுகளுக்கு ஒரு சிறிய பயணம்.......UBUD.

கிட்டத்தட்ட 16  தீர்த்தங்கள் எண்ணினேன்.
எல்லா இடங்களிலும்  கட்டம் போட்ட துணிகளால் சுற்றப்பட்ட
புனித தளங்கள். வண்ண வண்ண குடைகள்.
சிவபிரானுக்கான கோவில்.
எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
 பேத்திக்கு ஈஸ்டர் விடுமுறை. இரண்டு வாரங்கள்.
அருகில்  இரண்டு மணி விமானப் பயணத்தில் போய் வரலாம் என்று தீர்மானம் .
எல்லாரும் ஒத்துக்க கொள்ள கிளம்பினோம்.
படங்கள் 

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

பயணம் இனிதாய் அமைந்தது அறிந்து மகிழ்ச்சி. தொடரட்டும் பயணங்கள்.....

Nagendra Bharathi said...

அருமை

நெல்லைத் தமிழன் said...

என்னோட பாலித் தீவு பயணம் ஞாபகம் வந்துவிட்டது. விரைவில் இன்னும் பயணத்தைப் பற்றி எழுதுவீர்கள் என்று நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி வெங்கட். பயந்த மாதிரி மழையில்லை.
ஒவ்வொரு இடத்துக்கும் இடையே தொலைவு அதிகம்.
ஒரு நாளைக்கு 3 இடங்கள் தான் பார்க்க முடிந்தது.
ஆனாலும் மனம் நிறைய அமைதி.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா நீங்களும் பாலி போயிருக்கிறீர்களா நெல்லைத் தமிழன்.
எழுதி வைத்தீர்களா. அருமையான இடம்.
இனிமையான மனிதர்கள். கண்ணைக் கவரும் ஆடைகள்.
சிற்பங்கள். சுற்றுலாத்தலம் எப்படியெல்லாம் இருக்க வேண்டுமோ
அப்படி எல்லாம் வைத்திருக்கிறார்கள்.. நீங்கள்
குறித்து வைத்திருப்பீர்கள் என்றே நினைக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

நன்றி நாகேந்திர பாரதி. நலமா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

Geetha Sambasivam said...

அட, மறுபடி பதிவு போடறீங்களா? இன்னிக்குத் தான் பார்த்தேன். பாலித்தீவு அனுபவங்களை விரிவாக எழுதலையா? படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

ஆமாம் கீதாமா. ஒரு பதிவு என்னை மிகவும் யோசிக்க வைத்தது. பின்னாட்களுக்கான மெமொயர்னு வைத்துக் கொள்ளலாம் நு எழுதுகிறேன் மா. மிக நன்றி.

ஸ்ரீராம். said...

பாலித்தீவு படங்கள் அருமை.

வல்லிசிம்ஹன் said...

மிக நன்றி ஸ்ரீராம். ஊர் சுற்றின அலுப்பு இன்றுதான் தீர்ந்தது. இன்னும் நூறு இடங்கள் அங்கே இருக்கின்றன.

ராமலக்ஷ்மி said...

பகிர்வு அருமை.