Blog Archive

Tuesday, April 18, 2017

சிற்பம் சித்திரம் ....பாலி 2

எல்லோரும் இனிதாக வாழ வேண்டும்
சிற்பக  கலைஞர் கவனமாகச் செதுக்குகிறார்.
  இந்த பெயிண்டுகள், உளிகள் எல்லாம் எங்கள் வீட்டிலும் இருக்கின்றன.அவரிடம் நான் ஆங்கிலத்தில் சிங்கம் பற்றி சொல்ல அவரும் தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எனக்குத் தான் செய்யும் விதத்தை விளக்கினார். மிக அற்புத வடிவங்கள் அந்தக் கடை முழுவதும் இருந்தன. புகை பிடிக்கவேண்டாம் என்று அறிவுறுத்தினதற்குச் சிரித்துக் கொண்டார். அவருக்குப் பசி மறக்க புகை பிடிக்கவேண்டுமாம்.
செதுக்குவதற்குத்  தேவை உளியும் சிற்பியும் மரமும்.
 மிருதுவான நளினமான கைகள் .மனதில் உருவானது மரத்தில் வடிவெடுக்க
உரம் கொண்டு வலுவாயின.
அர்த்தநாரி 
 

12 comments:

வெங்கட் நாகராஜ் said...

மிக அழகிய சிற்பங்கள்.... மரத்தில் இத்தனை நுணுக்கமான வேலைப்பாடு....

பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா....

நெல்லைத் தமிழன் said...

நாமெல்லாம் மரத்தை, கல்லைக் காண்கிறோம். சிற்பி மட்டும்தான் அதில் ஒளிந்திருக்கும் சிலையைக் காண்கிறான்.

சிற்பி உலகியல்படி மறைந்துவிடுவான். அவன் சிற்பம் அவனுடைய திறமையை காலம்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கும்.

கலைஞர்களுக்கு, உலகெங்கிலும் மனசு மட்டும்தான் நிறையும்போலும். வறைமை அவர்களைத் தருவிக்கொண்டிருக்கும் போலும். சிற்பங்களை ரசித்தேன்.

ராஜி said...

அருமைம்மா

ஸ்ரீராம். said...

கலைப்படைப்பாளர் கைவண்ணம் அருமையாக இருக்கிறது. சிங்கம் அவர்களின் கைவண்ணம் நானும் கண்டிருக்கிறேன்.

Angel said...

அழகிய நுணுக்கமான வேலைப்பாடு

வல்லிசிம்ஹன் said...

அன்பு வெங்கட்,
தவறாமல் வந்து கருத்து சொல்வதற்கு நன்றி மா.
கடவுள் கொடுத்த இந்த அழகான சான்ஸுக்கு நன்றி.

வல்லிசிம்ஹன் said...

அன்பு தனபாலன்,
மிக அருமையான இடம். நீங்கள் எல்லோரும் பார்க்க வேண்டும்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு நெல்லைத்தமிழன்,
மரத்தில் மறைந்தது மாமத யானை நினைவுக்கு வருகிறது.
உண்மையான கருத்து உங்களுடையது.
எழுத்தாளர்கள், சிற்பிகள்,ஓவியர்கள் எல்லோருக்கும்
ஒரு காலம் உண்டு. சில பேர் செழிக்கிறார்கள்.

நம் ஊர்க்கோயில்களை எழுப்பியவர்களைப் பற்றி ஒன்றுமே
தெரியாதே.கல்வெட்டுகள் அரசர்களைப் பற்றிச் சொல்கின்றன.
அந்த உழைப்பாளிகள் பற்றி அதிகம் நமக்குத் தெரியாது.

கலைஞன் பார்வை வேறுதான். என் கணவரிடம் அதிப் பார்த்திருக்கிறேன்.
நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

நன்றி டா ராஜி. நல்ல இடத்தைப் பார்த்த சந்தோஷம்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸ்ரீராம்,
ஆமாம், இந்த சிற்பங்களைப் பார்த்த போது தொண்டை அடைத்துக் கொண்டது.
என்னைவிட அவர்தான் இந்த இடத்தை மிகவும் ரசித்திருப்பார்.
அற்புதம் என்றால் இவ்வண்ணங்களும் வடிவங்களும் தான். நன்றி மா.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஏஞ்சலின்,
நீங்கள் எல்லோரும் வந்து பார்க்க வேண்டாமா.
நன்றி டா.

ராமலக்ஷ்மி said...

மிக அழகு.